வேதாகமத் தியானம் - எண்:- 1,471
'ஆதவன்' பிப்ருவரி 16, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை
"இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன." (யோவான் 20:31)
இன்று நற்செய்தி அறிவிப்பு என்ற பெயரில் பல்வேறுவிதமான குழப்படியான போதனைகள் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். கிறிஸ்துவைவிட தங்களையே முதன்மைப்படுத்தும் ஊழியர்கள், புனிதர்களை முன்னிலைப்படுத்தும் திருச்சபைகள், அதிசயம், அற்புதம் என உலக ஆசீர்வாதங்களை மட்டுமே ஆன்மிகம் என்ற பெயரில் போதிக்கும் அவலம், இவைபோன்றவை கிறிஸ்தவத்தின் சாபக்கேடாக இருப்பது மறுக்கமுடியாத உண்மை.
சுவிசேஷம் ஏன் எழுதப்பட்டது என்பதற்கும் இன்று கிறிஸ்தவ உலகில் நடக்கும் தப்பறையான நிலைமைகளுக்கும் விளக்கமாக அப்போஸ்தலரான யோவான் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். அதாவது, நற்செய்தி அறிவிப்பு என்பது, முதலில் இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று மக்களுக்குத் தெளிவுபடுத்துவது. காரணம், அப்படி மக்கள் தெளிவடையும்போது மட்டுமே அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடைய முடியும். மனித வாழ்க்கை இந்த உலகோடு முடிவடைவதல்ல; மாறாக என்றும் முடிவில்லா ஒரு வாழ்க்கை மனிதர்களுக்கு உள்ளது. அதுவே நித்திய ஜீவன் அல்லது நிலைவாழ்வு.
இப்படி, இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாம் விசுவாசிக்கும்படியாகவும், அப்படி விசுவாசித்து அவருடைய பெயரால் நித்தியஜீவனை அடையும்படியாகவும், சுவிசேஷம் எழுதப்பட்டுள்ளது என்று கூறுகின்றார். ஆனால் இன்றைய பெரும்பாலான சுவிசேஷ அறிவிப்புகளில் கிறிஸ்துவும் அறிவிக்கப்படுவதில்லை நித்திய ஜீவனைப் பற்றியும் பலரும் பேசுவதில்லை. ஆனால் தேவனோ, "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், சித்தமுள்ளவராயிருக்கிறார்." (1 தீமோத்தேயு 2: 4) அதற்காகவே தனது அடியார்களைக்கொண்டு சுவிசேஷத்தை எழுதும்படிச் செய்தார்.
ஆனால் இன்று ஏனோதானோ மனநிலையில் ஏதேதோ பேசுகின்றார்கள். சம்பந்தமில்லாமல் பாரம்பரிய வழிபாடுகளைக் கைக்கொண்டு வருகிறார்கள். ஆனால் இவை எதுவும் நம்மை, நமது ஆத்துமாவை இரட்சிப்புக்கு நேராக நடத்துவதில்லை. பாரம்பரிய சடங்குமுறை வழிபாடுகள் தேவனை அறிய உதவுவதுமில்லை.
"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." (யோவான் 3:16) என்று வேதம் கூறுகின்றது. ஆனால், நாம் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையவேண்டும் என்று பிதாவாகிய தேவன் கொண்ட இந்த மேலான சித்தத்தையும் அதற்காக அவர் தனது குமாரனை உலகினில் அனுப்பியதையும் தெளிவுபடுத்தி போதிக்காமல் உலக ஆசீர்வாதங்களையே பலரும் போதித்துக்கொண்டும் அதற்காகவே விசுவாசிகளை வேண்டுதல்கள் செய்யச் சொல்லியும் பழக்கப்படுத்தியுள்ளனர்; தங்களை தேவ ஊழியர்கள் என்றும் கூறிக்கொள்கின்றனர்.
அன்பானவர்களே, பிதாவாகிய தேவனால் உலகினில் அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவே பிதாவோடு நம்மை இணைப்பவர். அவர் மட்டுமே நமக்காக பிதாவிடம் பரிந்து பேசமுடியும். "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது." (1 தீமோத்தேயு 2: 5, 6) என்று வாசிக்கின்றோம்.
எனவே நாம் முதலில் கிறிஸ்துவிடம் அசைக்கமுடிடியாத விசுவாசம் கொண்டவர்களாக வாழவேண்டும். அவர் மட்டுமே நமக்காக பிதாவிடம் பரிந்து பேச முடியும் என்பதை நம்பவேண்டும். அவரே நம்மை பாவத்திலிருந்து விடுவித்து நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்த முடியும் என்பதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். இவைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்பவர்களே மெய்யான கிறிஸ்தவர்கள்.
எனவேதான் "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன." என்கின்றார் அவருடைய அன்புச் சீடனாகிய யோவான். வேதாகம வசனங்களை விசுவாசிப்போம்; ஏற்றுக்கொள்வோம்; கீழ்ப்படிவோம்; நித்தியஜீவனுக்குப் பங்குள்ளவர்கள் ஆவோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation - No. 1,471
AATHAVAN 💚 February 16, 2025 💚
Sunday
"But these are written,
that ye might believe that Jesus is the Christ, the Son of God; and that
believing ye might have life through his name." (John 20:31, KJV)
Today, under the name of
"preaching the Gospel," we see various kinds of confusing and
distorted teachings being propagated. Ministers who prioritize themselves over
Christ, churches that elevate saints, and the tragic focus on miracles, wonders,
and worldly blessings under the guise of spirituality—these have undeniably
become a curse to Christianity.
The Apostle John, in today’s
meditation verse, provides clarity on why the Gospel was written and contrasts
it with the erroneous practices in today’s Christian world. The primary purpose
of the Gospel is to make it clear to people that Jesus is the Christ, the Son
of God. Only when people understand this can they receive eternal life through
His name. Life on earth is not the end
to men; rather, there is a life after our death and that is eternal and
unending.
The Gospel was written so that
we may believe that Jesus is the Christ, the Son of God, and that by believing,
we may have eternal life through His name. However, in most Gospel preaching
today, Christ is not proclaimed, nor is eternal life discussed. Yet, God
desires that "all men should be saved and come to the knowledge of the
truth" (1 Timothy 2:4, KJV). For this purpose, He inspired His servants to
write the Gospel.
But today, many speak with a
careless attitude, introducing irrelevant traditional practices and rituals.
These things do not lead us or our souls directly to salvation. Traditional
rituals and worship practices do not help us know God.
"For God so loved the
world, that he gave his only begotten Son, that whosoever believeth in him
should not perish, but have everlasting life." (John 3:16, KJV). Yet, many
fail to teach this supreme purpose of God the Father—that we should not perish
but have eternal life—and instead focus on worldly blessings, urging believers
to pray for such things. They also call themselves ministers of God.
Beloved, Jesus Christ, sent by
God the Father into the world, is the only one who can connect us with the
Father. He alone can intercede for us before the Father. "For there
is one God, and one mediator between God and men, the man Christ Jesus; Who
gave himself a ransom for all, to be testified in due time." (1 Timothy
2:5-6, KJV).
Therefore, we must first live
as those with unshakable faith in Christ. We must believe that He alone can
intercede for us before the Father. We must accept that He alone can deliver us
from sin and lead us directly to eternal life. Those who accept all these
truths are true Christians.
This is why John, the beloved
disciple, says, "But these are written, that ye might believe that
Jesus is the Christ, the Son of God; and that believing ye might have life
through his name." Let us believe the Scriptures, accept them, obey
them, and become partakers of eternal life.
God’s Message: Bro.
M. Geo Prakash
No comments:
Post a Comment