DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Friday, February 21, 2025

❤️Meditation verse - எபிரெயர் 8: 10 / Hebrews 8:10

'ஆதவன்' பிப்ருவரி 25, 2025. 💚செவ்வாய்க்கிழமை

வேதாகமத் தியானம் - எண்:- 1,480


"அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்." ( எபிரெயர் 8: 10) & ( எரேமியா 31: 33)

இஸ்ரவேல் மக்கள் தனக்கு உகந்த வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காக தேவன் மோசேமூலம் பல்வேறு கட்டளைகளைக் கொடுத்திருந்தார். ஆனால் அந்த மக்கள் கட்டளையைக் கட்டளையாகப் பார்த்தார்களேத் தவிர மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் இழந்தவர்களாக இருந்தனர். உதாரணமாக ஓய்வுநாளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை நோயுற்றிருந்த மக்களிடம் காண்பிக்கவில்லை. 

ஓய்வுநாள் குறித்தக் கட்டளையை யூதர்கள் தவறுதலாகவே புரிந்து மனிதாபமற்ற முறையில் கடைபிடித்து வந்தனர். எனவே  இயேசு கிறிஸ்து இதனை "மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது" ( மாற்கு 2: 27) என்று தெளிவுபடுத்தினார். சுருங்கக் கூறினால் அவர்கள் தேவனது பல  கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. 

எனவே தேவன் மக்களோடு புதிய உடன்படிக்கை செய்யத் திட்டமிட்டார். இதனை எரேமியா தீர்க்கதரிசிமூலம் கூறினார், "அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்." ( எபிரெயர் 8: 10) & ( எரேமியா 31: 33)

தான் உண்டாக்கும் புதிய உடன்படிக்கை எத்தகையதாக இருக்கும் என்பதையும் தேவன் கூறினார். அதாவது தான் பண்ணிய பழைய உடன்படிக்கையினைப்போல அல்லாமல் புதிய உடன்படிக்கை அவர்கள் கடைபிடிக்கும் வகையில் இருக்கும். அவர்களைப் புறக்கணித்ததுபோல புதிய உடன்படிக்கை மக்களை நான் புறக்கணிப்பதில்லை என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

இதனை நாம் "அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எபிரெயர் 8: 9) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் கிருபையினாலும்  சத்தியத்தினாலும் உருவாக்கப்பட்ட புதிய உடன்படிக்கை கற்களில் எழுதப்படாமல் நமது இருதயங்களில் எழுதப்பட்டுள்ளது. மட்டுமல்ல, அது ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினால் எழுதப்பட்டுள்ளது. இதனையே அப்போஸ்தலரான பவுல் கொரிந்தியருக்கு எழுதுகின்றார்:-  "ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது." (2 கொரிந்தியர் 3: 3)

கிறிஸ்துவின் மூலமாய் கொடுக்கப்பட்ட இந்தப் புதிய உடன்படிக்கை நம்மை ஆவியில் உயிர்ப்பிக்கின்றதாக இருக்கின்றது. பழைய உடன்படிக்கைக் கட்டளைகளைக் கைக்கொள்ளாதவன் கல்லெறிந்து கொல்லப்படுவதுபோல புதிய உடன்படிக்கையை மீறும்  மக்கள் கொல்லப்படுவதில்லை. காரணம், "...........அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது." (2 கொரிந்தியர் 3: 6) ஆம் அன்பானவர்களே, நாம் பெற்ற பெரியபேறு இதுதான். 

இந்த உலகத்தில் புதிய உடன்படிக்கையினை மீறுபவர்கள் கல்லெறிந்து கொல்லப்படுவதில்லை என்றாலும் இயேசுகிறிஸ்துவின்  இரத்தத்தால் உண்டான புதிய  உடன்படிக்கையின் மக்களாகியநாம் அவரது உடன்படிக்கையினை மீறி நடப்போமானால் நமக்கு  மிகப்பெரிய ஆக்கினை உண்டு என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. 

ஆம், "தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்." ( எபிரெயர் 10: 29) எனவே, கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் உண்டான புதிய உடன்படிக்கையை மீறிடாமல் அவருக்கேற்ற வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

Scripture Meditation - Number: 1,480

AATHAVAN 💚 February 25, 2025 💚 Tuesday

"After those days, saith the Lord, I will put my laws into their mind, and write them in their hearts: and I will be to them a God, and they shall be to me a people." (Hebrews 8:10) & (Jeremiah 31:33)

God gave various commandments through Moses so that the people of Israel might live a life pleasing to Him. However, the people saw the commandments merely as rules and lost sight of compassion and humanity. For example, they failed to show the importance of the Sabbath to those who were sick.

The Jews misunderstood the commandment regarding the Sabbath and observed it in a heartless manner. Therefore, Jesus Christ clarified, "The Sabbath was made for man, and not man for the Sabbath" (Mark 2:27). In short, they did not fully obey God's many commandments.

Thus, God planned to establish a new covenant with His people. This was foretold through the prophet Jeremiah: "After those days, saith the Lord, I will put my laws into their mind, and write them in their hearts: and I will be to them a God, and they shall be to me a people." (Hebrews 8:10) & (Jeremiah 31:33).

God also explained how this new covenant would differ from the old. Unlike the old covenant, the new covenant would be one that the people could truly follow. God declared that He would not reject His people as they had rejected His ways.

We read this in Scripture: "Not according to the covenant that I made with their fathers in the day when I took them by the hand to lead them out of the land of Egypt; because they continued not in my covenant, and I regarded them not, saith the Lord." (Hebrews 8:9).

Yes, dear friends, through our Lord Jesus Christ, the new covenant established by grace and truth is not written on stone tablets but on our hearts. Moreover, it is written by the Spirit of the living God. As the apostle Paul wrote to the Corinthians: "Forasmuch as ye are manifestly declared to be the epistle of Christ ministered by us, written not with ink, but with the Spirit of the living God; not in tables of stone, but in fleshy tables of the heart." (2 Corinthians 3:3).

This new covenant, given through Christ, brings us spiritual life. Unlike the old covenant, where those who disobeyed, the commandments were stoned to death, those who violate the new covenant are not condemned to physical death. For "...the letter killeth, but the spirit giveth life." (2 Corinthians 3:6). Yes, dear friends, this is the great blessing we have received.

Although those who break the new covenant in this world are not stoned to death, the Scripture warns us that if we, as people of the new covenant established by the blood of Jesus Christ, live in disobedience, we will face severe judgment.

Indeed, "Of how much sorer punishment, suppose ye, shall he be thought worthy, who hath trodden underfoot the Son of God, and hath counted the blood of the covenant, wherewith he was sanctified, an unholy thing, and hath done despite unto the Spirit of grace?" (Hebrews 10:29). Therefore, let us surrender ourselves to live a life worthy of Him, without violating the new covenant established by the blood of Christ Jesus.

Gospel Message: Bro. M. Geo Prakash

No comments: