மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவருக்குச் சொந்தமாக பலத் தொழில் நிறுவனங்கள் இருந்தன. அவருக்கு ஒரேஒரு சிறிய மகன் இருந்தான். அவனுக்குப் பத்து அல்லது பதினோரு வயதுதான் இருக்கும். மனைவி அதிகம் படிப்பறிவில்லாதவள். நன்றாகச் சென்றுகொண்டிருந்த அவரது வாழ்வில் கொடிய நோய் பெரிய இடியாகத் தாக்கியது. மருத்துவர் அந்தத் தொழிலதிபரிடம், "நீங்கள் முன்புபோல அதிகம் உழைக்கக்கூடாது......உங்களுக்கு நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு மேலோட்டமாக தொழிலைக் கவனித்துக்கொள்ளுங்கள்" என்று அறிவுரைக் கூறினார்.
மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பிய அவர் பல்வேறு முறையில் சிந்தித்துவிட்டு ஒரு முடிவுடன் அவர் தனது அலுவலகத்துக்குச் சென்றார். அனைத்து முக்கியப் பணியாளர்களையும் அழைத்து அவர்களுடன் பேசி, மருத்துவர் கூறிய அறிவுரையின்படி அவர்களில் ஒருவரை நிறுவனத்துக்குத் தலைவராக ஏற்படுத்தப் போவதாகக் கூறினார். அங்கிருந்த பலர் அவர் தங்களைத்தான் பொறுப்பில் அமர்த்துவார் என எண்ணிக்கொண்டனர்.
ஆனால் அந்தத் தொழிலதிபர் அந்தப் பணியாளர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அவரிடம் வெறும் பன்னிரெண்டாயிரம் மாதச் சம்பளம் பெறும் கணக்கியல் துறை ஊழியர் ஒருவரை அந்தப் பொறுப்புக்குத் தான் ஏற்படுத்தப்போவதாக அறிவித்தார். எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆம், அந்த மனிதரின் உண்மை, நேர்மை, கடின உழைப்பை அந்த நிறுவன உரிமையாளர் பல்வேறு சமயங்களில் கவனித்துள்ளார். அவரால்தான் தனது நிறுவனங்களையும் தன்னையும் ஏமாற்றாமல் உண்மையாக நடத்திடமுடியும் என்று அவர் நிதானித்திருந்தார். வெறும் பன்னிரெண்டாயிரம் மாதச் சம்பளம் பெற்றுவந்த அந்த நபர் ஒரே நாளில் மிக உயர்ந்த பதவியை அடைந்தார். மிக அதிக சம்பளம், தனி வீடு, கார், உதவியாளர்கள் என அவர் அந்த முதலாளியால் உயர்த்தப்பட்டார். காரணம் அவரிடமிருந்த உண்மை.
இதனையே இன்றைய வசனத்தில் இயேசு கிறிஸ்து "அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யானபொருளை ஒப்புவிப்பார்கள்?" என்று கூறுகின்றார். ஆம், உலகப் பொருட்களில் உண்மையாயிருந்த அந்த மனிதனிடம் பெருமைமிகு பதவி ஒப்படைக்கப்பட்டது.
மொர்தெகாயின் உயர்வுக்குக் காரணம் அவரது உண்மை. வாயில்காப்போனாக இருந்தபோதும் அந்தப் பொறுப்பில் உண்மையாயிருந்தார். ராஜாவைக் கொலைசெய்ய முயன்றவர்களை ராஜாவுக்கு அடையாளம் காட்டினார். தனது மக்களுக்காக உண்மையாய் நின்றார். எனவே அகாஸ்வேரு ராஜாவுக்கு அடுத்த பொறுப்பில் அமர்த்தப்பட்டார். (எஸ்தர் 10:3)
அன்பானவர்களே, எந்தக் குறைந்த மாதச் சம்பளத்தில் வேலைப்பார்த்தாலும் செய்யும் வேலைக்கு உண்மையுள்ளவர்களாக நாம் இருந்தால் உயர்த்தப்படுவோம். காவல் துறையில் வேலைபார்ப்பவர்கள் அதிகம் கையூட்டு பெறுகிறார்கள் எனும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அந்தக் காவல்துறையிலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவர்கள் உண்டு. இப்படி உண்மையுள்ளவர்கள் எல்லோரும் பதவி உயர்வு பெற்றுவிடுவார்கள் என்று நான் கூறவில்லை; மாறாக உண்மையாக இருக்கும்போது குடும்பத்தில் தேவ ஆசீர்வாதம் நிச்சயமாகத் தங்கும்.
அநீதியான உலகப்பொருளைப்பற்றி உண்மையாக இருப்போமானால் தேவன் நம்மை நம்பி மெய்யான பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை ஒப்புவிப்பார். தேவன் தனது மக்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுபவரல்ல.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
TRUTHFULNESS IN WORLDLY AFFAIRS
AATHAVAN 🔥
936🌻
Monday, August 21, 2023
"If therefore ye have not been faithful in the unrighteous
mammon, who will commit to your trust the true riches?" (Luke 16: 11)
There
was a great industrialist. He owned several companies. He had only one small
son. He is only ten or eleven years old. His wife is illiterate. A deadly
disease struck his life which was going well. The doctor advised the
businessman, "You should not work as much as you used to.... delegate the
responsibilities to someone you trust and take care of the business superficially."
After
returning home from the hospital, thinking various pros and cons, he went to
his office with a decision. He called all the key employees and talked to them
and told them that he would make one of them head of the company as per the
doctor's advice. Many people sitting there thought that he would put them in
charge.
But
the businessman, contrary to the expectations of the employees, announced that
he was going to appoint an accounting department employee who has been receiving
a salary of only twelve thousand per month for that responsibility. Everyone
was shocked.
Yes,
the company owner has observed the man's honesty, integrity and hard work at
various times. He had decided that only he could run his companies and himself
without deception. The man who was earning just twelve thousand as monthly
salary rose to the highest position in one day. He was promoted by the boss
with very high salary, separate house, car and assistants. The reason was his
truth.
This
is what Jesus Christ said in today's verse, "If
therefore ye have not been faithful in the unrighteous mammon, who will commit
to your trust the true riches? Yes, the man who was faithful
in worldly things was entrusted with the highest position.
Mordecai's
rise was due to his truth. Even when he was a gatekeeper, he was faithful in
that responsibility. He identified those who tried to kill the king and
informed it to the king. He stood faithfully for his people. So, Ahasuerus placed
him next to him. (Esther 10:3)
Beloved,
we will be promoted if we are faithful to the work we do at any low monthly
salary. There is an allegation that those who work in the police department
receive more bribes. But even in that police there are true and honest men. I
am not saying that all such faithful will be promoted; On the contrary, God's
blessings will surely rest in their family.
If
we are truthful about the unrighteous materials of the, God will trust us and reveal the
secrets of the true kingdom of heaven. God does not abandon His people.
God’s
Message:- ✍️
Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment