இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Sunday, August 27, 2023

ஒளியின் பிள்ளைகள் / CHILDREN OF LIGHT

ஆதவன் 🔥 947🌻 செப்டம்பர் 01, 2023 வெள்ளிக்கிழமை 

"ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்". ( லுூக்கா 16 : 8 )  

ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மனிதர்களால் இந்த உலக மக்கள் செய்யும் பல காரியங்களைச் செய்ய முடியாது; பல உலகத்  தொழில்களை வெற்றிகரமாக நடத்திட முடியாதுகாரணம் இந்த உலகத்துக்கு ஒத்த வேடம் தரித்தால் மட்டுமே உலக மனிதனைப்போல தொழில் செய்ய முடியும். ஆனால் இன்றைய உலகில் தங்களை ஆவிக்குரிய மக்கள் எனக் கூறிக்கொள்ளும் பலர் ஆவிக்குரிய ஆராதனை செய்கிறோம் என்று கூறிக்கொண்டாலும் எந்த மனச்சாட்சி உறுத்தலுமின்றி உலக மனிதர்களைப்போல  பல்வேறு தவறான காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். 

மெய்யான ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மக்கள் தங்கள்குடும்பத்தினராலும் மற்ற உலக மக்களாலும் பலவேளைகளில் பேதைகளாக எண்ணப்படுகின்றனர். காரணம், அவர்கள் மற்ற மனிதர்களைப்போல செயல்படுவதில்லை. அவர்களது சில செயற்பாடுகள் மற்றவர்களுக்கு முட்டாள்த்தனமான செய்கையாய்த் தெரியும். இதனால் குடும்பத்தினர்கூட சிலவேளைகளில் இவர்களை முட்டாளாக எண்ணுகின்றனர். 

இதற்கு முக்கிய காரணம், உலக  மனிதர்கள் தங்களது மூளை அறிவினால் ஒரு செயலின் சாதக பாதகங்களைக் கணித்து முடிவெடுக்கின்றனர். ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மனிதர்களோ ஆவியானவரின் வழிநடத்துதலின்படி முடிவெடுக்கின்றனர். எனவே மற்றவர்களுக்கு ஆவிக்குரிய மனிதர்களின் செயல்கள் முட்டாள்தனமாகத் தெரியும். 

இதனையே இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுகின்றார். ஒளியின் பிள்ளைகள் என்பது ஒளியான கிறிஸ்துவுக்குரிய வாழ்க்கை வாழும் மக்கள்.  இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் என்பது இந்த உலகத்துக்குரிய வாழ்க்கை வாழும் மனிதர்கள்.  அவர்கள் மூளை அறிவால் முடிவெடுப்பதால் இந்த உலகத்தின் பார்வையில் ஒளியின் மக்களைவிட அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.

இதனையே அப்போஸ்தலரான பவுல்,  "நாங்கள்  கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர்நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்நாங்கள் பலவீனர்நீங்கள் பலவான்கள்;        நீங்கள் கனவான்கள்நாங்கள் கனவீனர்." ( 1 கொரிந்தியர் 4 : 10 ) என்று கூறுகின்றார். 

ஆனால் தேவன் பைத்தியமான ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மனிதர்களையே தனக்காகத் தெரிந்து கொள்கின்றார். "ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்." ( 1 கொரிந்தியர் 1 : 27 ) என்கின்றார் பவுல்.

காரணம், "இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது.  ( 1 கொரிந்தியர் 3 : 19 ) ஆம், உலகத்துக்கு மற்றவர்கள் அறிவாளிகள்போலவும் மேதைகள் போலவும் தெரிந்தாலும் தேவனுக்குமுன் அவர்கள் பைத்தியக்காரர்கள். ஆம், தேவன் மனிதர்கள்போல பார்ப்பவரல்ல. 

அன்பானவர்களே, இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுவது ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கு மட்டுமே முழுமையாகப்  புரியும். எனவே ஆவிக்குரிய நாம் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகளைவிட புத்தியில் குறைந்தவர்கள் என எண்ணப்பட்டாலும் கவலையடையத் தேவையில்லை. காரணம், அப்போஸ்தலரான பவுல் கூறுவதுபோல,"தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளையேத்தெரிந்துகொண்டார். கலங்கிடாமல் நமது ஆவிக்குரிய பயணத்தைத்  தொடர்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்             

                                    CHILDREN OF LIGHT

AATHAVAN 🔥 947🌻 September 01, 2023 Friday

"...for the children of this world are in their generation wiser than the children of light." (Luke 16: 8)

Spiritually living people cannot do many things that the people of this world do; Many businesses cannot be run by them successfully. The reason is that; you can do business like a worldly person successfully only if you pretend to be like this world. But in today's world, many who claim to be spiritual Christians, even though they claim to be doing spiritual worship, are engaging in various wrongdoings like worldly people without any conscience.

People who live a truly spiritual life are often considered fools by their families and the rest of the world. Because they do not act like other human beings. Some of their actions may seem foolish to others. Due to this, even the family sometimes consider them as fools.

The main reason for this is that worldly people use their brain knowledge to predict the pros and cons of an action and decide. People who live a spiritual life make decisions according to the guidance of the Spirit. So, others see the actions of spiritual men as foolishness.

This is what Jesus Christ says in today's meditation verse. Children of light are people who live the life of Christ who is the light. The children of this world are the people living the life of this world. They are more intelligent than the people of light in this world view because they make decisions with brain knowledge.

This is what the apostle Paul said, "We are fools for Christ's sake, but ye are wise in Christ; we are weak, but ye are strong; ye are honourable, but we are despised." ( 1 Corinthians 4 : 10 )

But God chooses for himself only those who live a foolish spiritual life. "But God hath chosen the foolish things of the world to confound the wise; and God hath chosen the weak things of the world to confound the things which are mighty" ( 1 Corinthians 1 : 27 ) says Paul.

The reason is, "For the wisdom of this world is foolishness with God. For it is written, He taketh the wise in their own craftiness.” (1 Corinthians 3: 19) Yes, although others seem wise and intelligent to the world, they are fools before God. Yes, God does not see things like men.

Beloved, what Jesus Christ says in today's meditation verse can only be fully understood by those who live a spiritual life. So, we spiritual people need not worry if we are considered less intelligent than the children of this world. Because, as the apostle Paul says, “God hath chosen the foolish things of the world to confound the wise; and God hath chosen the weak things of the world to confound the things which are mighty”.   Let's continue our spiritual journey without being disturbed."

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

No comments: