ஆதவன் 🔥 920🌻 ஆகஸ்ட் 05, 2023 சனிக்கிழமை
"இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார்.' ( யோவான் 8 : 21 )
இன்றைய வசனம் யூதர்களைநோக்கி இயேசு கிறிஸ்து கூறியது. யூதர்கள் தாங்கள் நம்பியிருந்த முறைமைகளின்படி தேவனைத் தேடிக்கொண்டு பல்வேறு வழிபாட்டு முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் தேடிக்கொண்டிருந்த மேசியா அவர்களிடையே வந்திருந்தும் அவர்களால் அவரை அறிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் தன்னை அறிந்துகொள்ளவேண்டுமென்று இயேசு கிறிஸ்து பல்வேறு போதனைகளையும் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து தன்னை தேவனுடைய குமாரனென்று வெளிப்படுத்தினார். ஆனால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதற்குக் காரணம் இருள் நிறைந்த அவர்களது உள்ளம் ஒளியான அவரை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. இதனையே இயேசு கிறிஸ்து, "ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது." ( யோவான் 3 : 19 ) என்று குறிப்பிட்டார். எது அந்த ஆக்கினைத் தீர்ப்பு? "உங்கள் பாவங்களிலே சாவீர்கள்" என்று கூறியுள்ளதுதான் அந்த ஆக்கினைத் தீர்ப்பு.
மெய்யான தேவனை விட்டுவிட்டு அவரைத்தேடி எங்கெங்கோ அலைவது தேவையற்ற செயல். அப்படி அலைவதால் நமக்கு பாவத்திலிருந்து விடுதலை கிடைக்காது. மாறாக பாவத்தின் விளைவாக நமது ஆத்துமா செத்து அழியும்.
அன்பானவர்களே, இன்று இயேசு கிறிஸ்து கூறுவது யூதர்களுக்கு மட்டுமல்ல, அவரை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டு அவரை வாழ்வில் தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்ளாமல் வாழும் அனைவருக்குமே பொருந்தும். காரணம், பாவத்திலிருந்து விடுதலைபெற கிறிஸ்துவுக்கு நம்மை அர்பணிப்பதைத் தவிர வேறு எந்தப் பரிகாரமும் இல்லை. நமது பாவங்களுக்காக இரத்தம் சிந்தியது அவர்தான். "ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8 : 36 )
கிறிஸ்துவைத் தேடுவது என்பது அவரை நமது உள்ளத்தில் வரவேற்பது. "இயேசுவே உம்மைத் தனிப்பட்ட வாழ்க்கையில் அறிய விரும்புகின்றேன்" என்று முழு மனதுடன் வேண்டும்போது அவர் தன்னை நமக்கு வெளிப்படுத்துவார். உலக ஆசீர்வாதங்களுக்காகவே ஜெபித்துக்கொண்டிருப்போமானால் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டவர்களாகவே இருப்போம். மேலான ஆவிக்குரிய காரியங்களையே நாடுவோம்.
அப்படி இல்லாமல் உலகத்தேவைகளுக்காகவே அவரைத் தேடிக்கொண்டிருப்போமானால், "நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது." என யூதர்களுக்குக் கூறிய வார்த்தைகளையே நமக்கும் கூறுவார்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
SEEK HIM
AATHAVAN
🔥 920🌻 August 05,
2023 Saturday
"Then
said Jesus again unto them, I go my way, and ye shall seek me, and shall die in
your sins: whither I go, ye cannot come." ( John 8 : 21 )
Today's
verse was spoken by Jesus Christ to the Jews. The Jews were seeking God
according to the systems they believed in and engaged in various worship
efforts. But even though the Messiah they were looking for had come among them,
they could not recognize him. For them to know Him, Jesus Christ revealed
Himself as the Son of God by performing various teachings, miracles, and
wonders. But they did not accept him.
This is because their hearts were
filled with darkness and they did not want to accept Him who is light. This is
what Jesus Christ said, "And this is the condemnation, that light is come
into the world, and men loved darkness rather than light, because their deeds
were evil." (John 3 : 19 ) What is the condemnation? "You shall die
in your sins."
It
is unnecessary to leave the true God and wander somewhere in search of Him.
Wandering like that does not free us from sin. Instead, our soul dies as a
result of sin.
Beloved, what Jesus Christ is
saying today applies not only to the Jews, but to all who claim to believe in
Him and live without knowing Him personally. The reason is that there is no
remedy other than giving ourselves to Christ to be freed from sin. He is the
one who shed blood for our sins. "If the Son therefore shall make you free, ye
shall be free indeed." (John 8: 36)
To
seek Christ is to welcome Him into our hearts. He will reveal Himself to us
when we wholeheartedly want to know Jesus. If we are praying only for the
blessings of the world, we are deceiving ourselves even though we claim to be
Christians. Let us seek higher spiritual things.
Otherwise,
if we are looking for him for worldly needs, He will tell us the same words he
told the Jews, “I go my way, and ye shall seek me, and shall die in your sins:
whither I go, ye cannot come."
God’s Message: - ✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment