Wednesday, August 09, 2023

அவர் நமக்கு மாதிரி / HE MODELLED FOR US

ஆதவன் 🔥 925🌻 ஆகஸ்ட் 10, 2023 வியாழக்கிழமை

"நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள்." ( யோவான் 8 : 38 )

மேசியாவை எதிர்பார்த்திருந்த யூதர்கள் இயேசு கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசு  கிறிஸ்து பிதாவாகிய தேவனிடம் தான் கண்டதையும் கேட்டதையும் மக்களுக்கு அறிவித்தார். ஆனால் யூதர்கள் பலரும் அவரது போதனையினை ஏற்றுக்கொள்ளாமல் தங்களது துன்மார்க்க செயல்களிலேயே நிலைத்திருந்தனர். 

எனவேதான் இயேசு கிறிஸ்து அவர்களிடம், "நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள்." என்று குறிப்பிட்டார்.  யூதர்களுக்குத் தங்களை ஆபிரகாமின் புதல்வர்கள் என்று கூறிக்கொள்வதில் ஒரு பெருமை இருந்தது. ஆனால் அவர்கள் செயல்கள் ஆபிரகாமின் செயல்கள்போல இல்லை.  

அவர்கள் பெரும்பாலும் உண்மையில்லாதவர்களாக, கொலைபாதக எண்ணமுடையவர்களாக  இருந்தனர். எனவேதான் அவர்களைப்பார்த்து இயேசு கிறிஸ்துக் கூறினார். "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை." ( யோவான் 8 : 44 )

பிசாசு "பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்." ( யோவான் 8 : 44 ) என்று கூறினார் இயேசு கிறிஸ்து. அன்பானவர்களே, நாமும் இன்று நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் நமது செயல்களையும் எண்ணங்களையும் அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். பொய்யும் மனித கொலைபாதக எண்ணங்களும் நமக்குள் இருக்குமானால் நாமும் பிசாசின் மக்களே. 

நாம் கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றோமென்றால்  இயேசு தனது  பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுவதைப்போல நாமும் நமது தந்தையாகிய கிறிஸ்துவிடம் கண்டத்தைச் சொல்வோம். அவர் செய்ததுபோலவே செய்வோம். அதுவே சாட்சியுள்ள வாழ்க்கை.

அன்பானவர்களே, நமது பேச்சையும், செயல்களையும் எண்ணிப்பார்ப்போம். நாம் கிறிஸ்துவை ஆராதிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு பொய்யும் பித்தலாட்டமுமான வாழ்க்கை வாழ்கின்றோமென்றால் நாம் இவற்றுக்குத் தகப்பனாகிய பிசாசானவனால் பிறந்தவர்கள். 

கிறிஸ்து எப்படித் தனது தந்தையிடம் கேட்டதையும் கண்டதையும் பூமியில் செய்தாரோ அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பின்பற்றவே அழைக்கப்பட்டுள்ளோம். எனவே அவர் நமக்கு மாதிரி காட்டியபடி வாழ்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  
            HE MODELLED FOR US 

AATHAVAN 🔥 925🌻 Thursday, August 10, 2023

"I speak that which I have seen with my Father: and ye do that which ye have seen with your father." ( John 8 : 38 )

The Jews who were expecting the Messiah did not accept Jesus Christ as the Messiah. Jesus Christ declared to the people what he had seen and heard from God the Father. But many of the Jews did not accept his teaching and continued in their wicked ways.

That is why Jesus Christ said to them, "I speak that which I have seen with my Father: and ye do that which ye have seen with your father." The Jews had a pride in claiming to be children of Abraham. But their deeds were not like the deeds of Abraham.

They were often untruthful and murderous. That is why Jesus Christ said to them. "Ye are of your father the devil, and the lusts of your father ye will do. He was a murderer from the beginning, and abode not in the truth, because there is no truth in him. " John 8 : 44 )

"…because there is no truth in him. When he speaketh a lie, he speaketh of his own: for he is a liar, and the father of it." ( John 8 : 44 ) said Jesus Christ. Beloved, even if we claim to be Christians today, He is watching our actions and thoughts. If we have lies and murderous thoughts in us, we are also the devil's sons and daughters.

If we live in Christ, we will speak like our Father Christ, who spoke what He saw in his Father. Let us do as he did. That is the life of witness.

Beloved, let us consider our words and actions. If we claim to worship Christ and live a life of lies and hypocrisy, we are born of the father of these things, the devil.

We are called to follow Christ just as He did what He heard and saw from His Father on earth. So, let us live as he modelled for us.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

No comments: