Friday, August 11, 2023

பெருந்திண்டி / GLUTTONY

ஆதவன் 🔥 928🌻 ஆகஸ்ட் 13, 2023 ஞாயிற்றுக்கிழமை

"உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்." ( லுூக்கா 21 : 34 )


தனது இரண்டாம் வருகையினைக்குறித்து இயேசு கிறிஸ்து கூறியவையே இன்றைய தியான வார்த்தைகள். இயேசு கிறிஸ்து தனது இரண்டாம் வருகைக்குச் சில முன்னடையாளங்களை  மக்களுக்கு எடுத்துக் கூறினார். அப்படிக் கூறிவிட்டு இறுதியில் இன்றைய வசனத்தைக் கூறினார். 

இந்த வசனம் பெருந்திண்டி , அதாவது உணவுமேல் அளவுக்கதிக ஆசைகொண்டு உண்பது. அதிக ஆசைகொண்டு உணவுக்காக ஓடுவது. போஜனப்பிரியம் என்று இதனைக் கூறுவர்.  அடுத்து, வெறிகொள்ளுதல்  (குடிவெறி, காமவெறி, போன்றவெறிகொள்ளுதல்)  மூன்றாவது,  உலக ஆசைகளை எண்ணி அவைகளுக்காக மட்டுமே ஓடுவதும் கவலைகொண்டு அலைவதும். இவைபோன்ற காரியாக்களில் நாம் ஈடுபட்டிருப்போமானால் நாம் நினையாத நேரத்தில் அவரது வருகை இருக்கும். அதனால் இவைபோன்ற காரியங்களில் எச்சரிக்கையாக இருங்கள் என்கின்றார். அதாவது, இவைகளைத் தவிர்த்து வாழ்வோருக்கு அவர் தனது வருகைக்குமுன் அறிவிப்புக் கொடுப்பார். 

இன்று சில விருந்துகளில்  உணவுக்காக சிலர் அளவுக்கதிக ஆசைகொண்டு ஓடுவதையும் கிடைத்தவை அனைத்தையும் உண்டுவிடவேண்டும் என்று விரும்புவதையும் நாம் காணலாம். காரணம் பெருந்திண்டி எனும் போஜனப்பிரியம். இது பெரிய பாவங்களில் ஒன்றாக வேதத்தில் குறிப்பிடப்படுகின்றது.

ஆண்டவரது வருகையைக் குறித்து அதிகம் வெளிப்படுத்தியவர் தானியேல் தீர்க்கத்தரிசி. இந்தத்  தானியேல் இயேசு கூறியதுபடி உணவு விஷயத்தில் கவனமாக இருந்தார். பாபிலோன் ராஜா தான் உண்ணும் ராஜ உணவுகளை தானியேலுக்கும் அவரது மூன்று நண்பர்களுக்கும்  அளிக்க முன்வந்தும் தானியேலும் அவரது நண்பர்களும் அவைகளை மறுத்து பருப்பும் காய்கறி உணவுமே தங்களுக்குப் போதும் என்று உணவு விஷயத்தில் அடக்கமாக இருந்தார்கள்.  இதனை, "தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்." ( தானியேல் 1 : 8 ) என்று வாசிக்கின்றோம். 

அப்படி அவர்கள் சாதாரண உணவுகளை உண்டபோதும் ராஜ உணவினை உண்டவர்களைவிட முகக்களையும் உடல் செழுமையம் உள்ளவர்களாக இருந்தனர்.  ஆம், "பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது." ( தானியேல் 1 : 15 )

அன்பானவர்களே, ராஜ உணவினையும்  திராட்சை ரசத்தையும் தவிர்த்து உலக ஆசை இச்சைகளைத் தவிர்த்து பரிசுத்தமாய்த் தன்னைக் காத்துக்கொண்ட தானியேலுக்கு பல மறைபொருட்களைத் தேவன் வெளிப்படுத்தினார்.  "இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்." ( தானியேல் 1 : 17 )

இதனையே இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தில் நமக்கும் அறிவுரையாகக் கூறுகின்றார். "உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்குக் காத்துக்கொள்ளுங்கள்" என்று.  அப்போது கிறிஸ்துவின் வருகைக்கு நாம் தகுதியுள்ளவர்கள் ஆவதுமட்டுமல்ல, வருகை குறித்த எச்சரிப்பையும் முன்னமே பெறுவோம்.   கர்த்தரது வார்தைக்குச் செவிகொடுப்பது நமது ஆத்துமாவுக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்துக்கும் ஏற்றதாயிருக்கிறது. மருத்துவர்களும் இன்று உணவைக் குறைத்து வாழ்வது ஆரோக்கியம் என்றுதான் கூறுகின்றனர். 

இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து நமது ஆத்துமாவையும் உடலையும் காத்துக்கொள்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்    

                                        GLUTTONY 

AATHAVAN 🔥 928🌻 Sunday, August 13, 2023

"And take heed to yourselves, lest at any time your hearts be overcharged with surfeiting, and drunkenness, and cares of this life, and so that day come upon you unawares." ( Luke 21 : 34 )

Today's meditation words are what Jesus Christ said about his second coming. Jesus Christ gave the people some signs of his second coming. After saying that, he finally said today's verse.

This verse says if we are engaged in such things like gluttony, which means overeating, craving and running for food, that is food addiction, infatuation (drunkenness, lasciviousness, infatuation) and third, running and worrying about worldly desires His visit will come at a time when we do not think. So be careful in such things. That is, He will give notice before His coming to those who live apart from these.

In some parties today we can see some people running with excessive desire for food and wanting to eat all that is available. The reason is gluttony. It is mentioned in the Bible as one of the major sins.

The prophet Daniel was the one who revealed the most about the second coming of the Lord. This Daniel was careful about food as Jesus said. The king of Babylon offered to give Daniel and his three friends royal food that he would eat, but Daniel and his friends refused them and were humble in the matter of food saying that only vegetable and dhal food was enough for them. "But Daniel purposed in his heart that he would not defile himself with the portion of the king's meat, nor with the wine which he drank: therefore he requested of the prince of the eunuchs that he might not defile himself." ( Daniel 1 : 8 ) we read.

Even when they ate ordinary food, their faces and bodies were richer than those who ate royal food. Yes, "And at the end of ten days their countenances appeared fairer and fatter in flesh than all the children which did eat the portion of the king's meat." (Daniel 1: 15)

Beloved, God revealed many hidden things to Daniel who kept himself holy by avoiding royal food and wine and avoiding worldly desires. "As for these four children, God gave them knowledge and skill in all learning and wisdom: and Daniel had understanding in all visions and dreams." ( Daniel 1 : 17 )

This is what Jesus Christ advises us in today's verse. Take heed that lest at any time your hearts be overcharged with surfeiting, and drunkenness, and cares of this life, and so that day come upon you unawares. If we live a life like that, then we will not only be qualified for the coming of Christ, but we will also receive a forewarning of the coming. Listening to God's word is good not only for our soul but also for our physical health. Doctors today also say that eating less is healthy.

Let us listen to the words of Jesus Christ and protect our soul and body.

God’s Message: - ✍️ Bro. M. Geo Prakash

No comments: