தேவனுடைய ராஜ்யம் & பரலோக ராஜ்யம் / KINGDOM OF GOD & KINGDOM OF HEAVEN

ஆதவன் 🔥 948🌻 செப்டம்பர் 02, 2023 சனிக்கிழமை 

"தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்." ( லுூக்கா 17 : 20, 21 )

தேவனுடைய ராஜ்ஜியம், பரலோக ராஜ்ஜியம் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தேவனுடைய ராஜ்ஜியம் என்பது இந்த உலகத்தில் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மக்கள் அனுபவிப்பது. அது ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மக்களது ராஜ்ஜியம். எனவேதான் இயேசு கிறிஸ்து, "தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே" என்றார். ஆனால் பரலோக ராஜ்ஜியம் என்பது விண்ணக ராஜ்ஜியம். அது நாம் மரித்தபின்பு நாம் செய்த நன்மைகளுக்குப் பரிசாக அனுபவிக்கப்போவது. 

மேசியாவாகிய கிறிஸ்து இந்த உலகத்தில் இறை அரசை நிறுவுவதற்காக வருவார் என யூதர்கள் நம்பியிருந்தாலும் அவர்கள் அதனை உலக அரசாங்கம் போல ஒரு அரசாங்கமாக இருக்குமென்று எண்ணினர். எனவேதான் அவர்கள் இயேசு கிறிஸ்துவிடம், தேவனுடைய ராஜ்ஜியம் எப்போது வரும் என்று கேட்டனர். ஆம், இறை அரசு அல்லது தேவனுடைய ராஜ்ஜியம் என்ன என்பதை யூதர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. 

தேவனுடைய ராஜ்ஜியம் என்றால் என்ன என்பதை அப்போஸ்தலரான பவுல் தெளிவாக விளக்கினார். "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது." ( ரோமர் 14 : 17 ) என்று கூறுகின்றார். நீதி, சமாதானம், பரிசுத்த ஆவியினால் உண்டாகும் மகிழ்ச்சி. இவையே தேவனுடைய ராஜ்ஜிய மக்களது உடைமை. 

இந்த தேவனுடைய ராஜ்யத்துக்கு நாம் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டுமென்றால் நாம் குழந்தைகளாக மாறவேண்டியது அவசியம்.  அதாவது குழந்தையைப்போல கள்ளம் கபடமில்லாதவர்களாக மாறவேண்டும்.  சிறு குழந்தைகளை இயேசு கிறிஸ்துவிடம் மக்கள் கொண்டுவந்தபோது அவருடைய சீடர்கள் அவர்களைத் தடைசெய்தனர். அப்போது அவர்களைப் பார்த்து இயேசு கூறினார். "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது." ( லுூக்கா 18 : 16 )

அன்பானவர்களே, நாம் பரலோக ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டுமென்றால் முதலில் இந்த உலகத்தில் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டியது அவசியம். பவுல் அப்போஸ்தலர் கூறுவதுபோல சாப்பாடு, குடிப்பு (அதாவது உலக காரியங்கள்) போன்ற உலக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நீதி, சமாதானம், பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷம் இவைகளால் நாம் நிறைந்திருக்க முக்கியத்துவம் கொடுத்து வாழவேண்டியது அவசியம். 

அன்பானவர்களே, நாம் பரலோக ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டுமென்றால் முதலில் இந்த உலகத்தில் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டியது அவசியம். பவுல் அப்போஸ்தலர் கூறுவதுபோல சாப்பாடு, குடிப்பு (அதாவது உலக காரியங்கள்) போன்ற உலக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நீதி, சமாதானம், பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷம் இவைகளால் நாம் நிறைந்திருக்க முக்கியத்துவம் கொடுத்து வாழவேண்டியது அவசியம். 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்       

KINGDOM OF GOD & KINGDOM OF HEAVEN  

AATHAVAN 🔥 948🌻 Saturday, September 02, 2023

"The kingdom of God cometh not with observation. Neither shall they say, Lo here! or, lo there! for, behold, the kingdom of God is within you." (Luke 17: 20, 21)

There is a difference between the kingdom of God and the kingdom of heaven. The kingdom of God is what people who live a spiritual life in this world experience. It is the kingdom of people living spiritual lives. That is why Jesus Christ said, "The kingdom of God cometh not with observation. Neither shall they say, Lo here! or, lo there! for, behold, the kingdom of God is within you." But the kingdom of heaven is the kingdom what we will enjoy after our death as a reward for the good deeds we have done.

Although the Jews believed that Christ, the Messiah, would come to this world to establish the kingdom of God, they thought it would be a government like the world government. That is why they asked Jesus Christ when the Kingdom of God would come. Yes, the Jews did not understand exactly what the Kingdom of God is.

The apostle Paul clearly explained what the kingdom of God is. "For the kingdom of God is not meat and drink; but righteousness, and peace, and joy in the Holy Ghost." (Romans 14: 17) Righteousness, peace, and joy of the Holy Spirit. These are the possessions of the people of God's kingdom.

If we are to qualify for this kingdom of God, we must become children. That means we should become childlike and guileless. When people brought little children to Jesus Christ, His disciples forbade them. Then Jesus looked at them and said. “Suffer little children to come unto me, and forbid them not: for of such is the kingdom of God. ( Luke 18 : 16 )

Beloved, if we want to qualify for the kingdom of heaven, we must first qualify for the kingdom of God in this world. As the apostle Paul says, it is necessary to live with emphasis on justice, peace, and the joy of the Holy Spirit without giving importance to worldly things such as food and drink (i.e. worldly things).

Yes, the kingdom of God cometh not with observation. Neither shall they say, Lo here! or, lo there! for, behold, the kingdom of God is within us.  The kingdom of God is within us. It cannot be known by people living ordinary worldly life. We can experience it when we live a spiritual life. While living in this world, we should try to live worthy of God's kingdom. Then God will include us in the kingdom of heaven.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்