ஆதவன் 🌞 718 🌻 ஜனவரி 15, 2023 ஞாயிற்றுக்கிழமை
"பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்." ( மாற்கு 16 : 15 ) என்றார். "And he said unto them, Go ye into all the world, and preach the gospel to every creature." ( Mark 16 : 15 ) CONTACT ADDRESS :- 18E, Holy Cross College Road, Punnai Nagar, Nagercoil - 629 004, Kanyakumari District, India Cell-96889 33712 & 7639022747.
கர்த்தரோடு நம்மை இணைத்துக்கொள்ளும் அனுபவம் வேண்டுவோம்
வாழ்க்கையாலும் பிறருக்கு உதவுவதன்மூலமும்
ஆதவன் 🌞 717 🌻 ஜனவரி 14, 2023 சனிக்கிழமை
கல்வாரி நாதரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் போ
ஆதவன் 🌞 716 🌻 ஜனவரி 13, 2023 வெள்ளிக்கிழமை
வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்
ஆதவன் 🌞 715 🌻 ஜனவரி 12, 2023 வியாழக்கிழமை
கர்த்தரிடத்தில் திரும்புவோம்
ஆதவன் 🌞 714 🌻 ஜனவரி 11, 2023 புதன்கிழமை
என்னை நோக்கிக் கூப்பிடு
ஆதவன் 🌞 713 🌻 ஜனவரி 10, 2023 செவ்வாய்க்கிழமை
நித்திய வழியிலே என்னை நடத்தும்
ஆதவன் 🌞 712 🌻 ஜனவரி 09, 2023 திங்கள்கிழமை
வசனங்கள் நம்மில் செயல்பட அனுமதிக்கும்போதுமட்டுமே நாம் அனலுள்ளவர்களாக மாறமுடியும்.
ஆதவன் 🌞 711 🌻 ஜனவரி 08, 2023 ஞாயிற்றுக்கிழமை
எங்களுடனே தங்கியிரும்
ஆதவன் 🌞 710 🌻 ஜனவரி 07, 2023 சனிக்கிழமை
யார் அந்திக்கிறிஸ்து (Anti Christ) ?
ஆதவன் 🌞 709 🌻 ஜனவரி 06, 2023 வெள்ளிக்கிழமை
மனிதர்களின் நிந்தனைக்குப் பயப்படாமலும், தூஷணங்களால் கலங்காமலும் இருப்போம்.
ஆதவன் 🌞 708 🌻 ஜனவரி 05, 2023 வியாழக்கிழமை
"நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்." (ஏசாயா 51:7)
பிற வழிபாடுகளுக்கும் கர்த்தராகிய இயேசுவின் ஜீவ வழியில் நடப்பதற்கும் உள்ள வித்தியாசம்
ஆதவன் 🌞 707 🌻 ஜனவரி 04, 2023 புதன்கிழமை
"தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்". (1 யோவான் 5:18)
கிறிஸ்து இயேசுவினால் உண்டாகும் மீட்பு அனுபவம் பற்றி இன்றைய வசனம் கூறுகின்றது. இயேசு கிறிஸ்துவினால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரை அறியும்போது நாம் தேவனால் பிறந்தவர்கள் ஆகின்றோம். இப்படி தேவனால் பிறந்தவன் பாவம் செய்வதில்லை. "ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்." (1 யோவான் 3:9) இப்படி தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கின்றான். பொல்லாங்கனாகிய பிசாசு அவனைத் தொடமாட்டான்.
பிற தெய்வங்களை வழிபடுவதற்கும், கர்த்தராகிய இயேசுவின் ஜீவ வழியில் நடப்பதற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் இதுதான். கிறிஸ்தவம் வெற்று வழிபாடுகளையும் ஒருசில சடங்குகளையும் கடைபிடிப்பதல்ல. அது உள்ளான மனிதனில் கிறிஸ்துவினால் ஏற்படும் மாற்றத்தை ஏற்படுத்துவது. அது உலக ஆசீர்வாதங்களை மட்டுமல்ல, ஆவிக்குரிய ஆசீர்வாதமான பாவத்திலிருந்து விடுதலையையும் அதன் நிறைவான நித்திய ஜீவனையும் நமக்கு அளிக்கின்றது.
அன்பானவர்களே, நாம் இந்த அனுபவத்தைப் பெறுவதற்கே அழைக்கப்பட்டுள்ளோம். குறிப்பிட்ட மந்திரங்களை ஜெபிப்பதல்ல, வழிபாடுகளை பக்தியுடன் செய்வதல்ல; கிறிஸ்து நமக்குள் இருபத்தையம் அவர் நம்மோடு பேசி வழிநடத்துவதையும் அறிவதே கிறிஸ்தவம். நாம் பாவங்களிலிருந்து முற்றிலும் ஜெயம்பெற அவர் நமக்கு உதவுகின்றார். அதற்கு நாமும் நமது நிலைமைக்கேற்ப ஒத்துழைக்கவேண்டும். எனவேதான் அப்போஸ்தலரான் பவுல், "நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்." (கொலோசெயர் 1:29) என்கின்றார். ஆம், அவர் நமக்குள்ளே வல்லமையாய்ச் செயற்படுகின்றார்.
மேலும், இப்படிக் கிறிஸ்துவுக்கேற்ப வாழும்போது நாம் சாத்தானின் வல்லமைகளுக்கு நீங்கி விடுதலை அடைகின்றோம். எனவே, நாம் இந்த அனுபவங்களைப் பெறவேண்டியது அவசியமாயிருக்கின்றது. அதற்கு முதலில் நமக்கு இதுகுறித்த ஆர்வம் இருக்கவேண்டும்.
தேவன் நமது ஆழ்மன எண்ணங்கள் ஏக்கங்கள் இவற்றை நன்கு அறிவார். உண்மையாகவே நாம் அவரை அன்பு செய்வோமெனில் வெற்றுச் சடங்குகளை விட்டு அவரை அறியவேண்டும் எனும் எண்ணத்தோடு அவரைத் தேடுவோம்.
"அன்பான ஆண்டவரே, நான் உம்மை அறிந்து உமக்கேற்ற வாழ்க்கை வாழவும் உம்மால் வழிநடத்தப்படும் உன்னத அனுபவங்களையும் பெற்று மகிழ விரும்புகின்றேன். இதற்குத் தடையாக இருக்கும் எனது பாவங்களை மன்னியும். மறுபடி பிறக்கும் அனுபவத்தை எனக்குத் தாரும். நான் வெற்று ஆராதனைக் கிறிஸ்தவனாக வாழ விரும்பவில்லை. உம்மை அறிந்து உம்மோடு நடக்கும் உயிருள்ள மேலான ஆவிக்குரிய வாழ்வு வாழ விரும்புகின்றேன். அத்தகைய வாழ்வு வாழ என்னை முற்றிலும் ஒப்புக்கொடுக்கின்றேன். " என வேண்டுவோம்.
தேவனால் பிறந்த மேலான அனுபவத்தையும் பொல்லாங்கனுக்கு நீங்கலாகி முழு விடுதலையும் பெறுவோம்.
தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
நான் உபத்திரவப்பட்டது நல்லது
ஆதவன் 🌞 706 🌻 ஜனவரி 03, 2023 செவ்வாய்க்கிழமை
தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
தீர்க்கத்தரிசிக்கும் தீர்க்கத்தரிசியை நாடுபவனுக்கும் தண்டனை
ஆதவன் 🌞 705 🌻 ஜனவரி 02, 2023 திங்கள்கிழமை
"தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும். இஸ்ரவேல் வம்சத்தார் இனி என்னைவிட்டு வழிதப்பிப்போகாமலும், தங்கள் எல்லா மீறுதல்களாலும் இனி அசுசிப்படாமலும் இருக்கும்பொருட்டாக இப்படிச் சம்பவிக்கும்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்." (எசேக்கியேல் 14 : 10, 11 )
தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
எந்நாளுமே அவருடைய உடனிருப்பையும் அதிசயமான வழிநடத்துதலையும் நாம் அனுபவிக்கலாம்.
ஆதவன் 🌞 704 🌻 ஜனவரி 01, 2023 ஞாயிற்றுக்கிழமை
"சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 15 : 3 )
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
நம் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லவர் என்று வேதம் கூறுகின்றது. அவரால் கூடாத காரியம் எதுவுமே இல்லை. அவர் மனிதர்களாகிய நமக்குள் செயல்படும் விதம் ஆச்சரியமானதாகும். நமக்கு பிரச்சனையோ தேவையோ ஏற்படும்போது தேவனை நோக்கி வேண்டுகின்றோம். அப்படி வேண்டும் நாம் ஜெபத்துக்குப் பதிலளிக்க அவருக்குக் காத்திருக்கவேண்டும். அவர் நமது ஜெபத்துக்குப் பதிலளிக்கும் விதம் ஆச்சரியமானதாக இருக்கும். அதனை ருசிக்கும் அனுபவம் நமக்கு வேண்டும்.
இங்கிலாந்து தேசத்தில் வாழ்ந்த ஜார்ஜ் முல்லர் (1805 - 18980) எனும் தேவ மனிதரைக்குறித்தும் அவரது விசுவாசம் குறித்தும் பல செய்திகளை நாம் அறியலாம். விசுவாசமாக ஜெபிப்பது மட்டுமல்ல, ஜெபித்துவிட்டு எப்படியும் தேவன் இந்த ஜெபத்துக்குப் பதில் தருவார். ஆனால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் எந்த அதிசய முறையில் தேவன் அதனைச் சந்திக்கபோகிறார் என்று ஆவலுடன் அதிசயத்துக்குக் காத்திருக்கும் அனுபவமும் அதனைப் பெற்றுக்கொள்ளும் அருளையும் பெற்றிருந்தார் அவர். ஆயிரக்கணக்கான அனாதைக் குழந்தைகளை வெறும் விசுவாச ஜெபத்தால் மட்டுமே தேவ உதவி பெற்று ஆதரித்து வந்தார் அவர்.
அவரது வாழ்வில் நடந்த பல சம்பவங்களில் ஒன்று...
ஒரு முறை அவரது ஆசிரமத்துக் குழந்தைகளுக்கு காலை உணவுக்கு கொடுப்பதற்குப் பால் வாங்குவதற்கு அவரிடம் பணம் இல்லை. இங்கிலாந்து நாட்டில் பொதுவாக பாலும் ரொட்டியும்தான் முக்கிய உணவு. முல்லர் அதிகாலையிலேயே எழுந்து தேவனிடம் தனது தேவையினை முறையிட்டார். "ஆண்டவரே,உமது வார்த்தையின்படியே இந்தக் குழந்தைகளை ஆதரித்து வருகின்றேன். இன்று இக்குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு பால் வாங்குவதற்குக்கூட என்னிடம் பணமில்லை. அன்பான ஆண்டவரே நீரே இந்தத் தேவையைப் பொறுப்பெடுத்துக்கொள்ளும். இந்தக் குழந்தைகளை உமது பாதத்தில் ஒப்படைக்கிறேன்; பசியில்லாமல் பாதுகாத்துக்கொள்ளும்" என்று ஜெபித்துக்கொண்டிருந்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.
அப்போது அவரது ஜெப அறையின் கதவு தட்டப்பட்டது. முல்லர் எழுந்து வந்து கதவைத் திறந்து அங்கே நின்ற மனிதனிடம் என்ன என விசாரித்தார். அந்த மனிதன் கூறினான், "ஐயா, நான் பால் வண்டி (Milk Van) ஓட்டக்கூடியவன். பக்கத்து நகருக்கு எனது பால் வண்டியில் தினசரி பால் கொண்டு செல்கின்றேன். இன்று எனது வண்டியின் அச்சாணி சரியாக உங்களது இந்த ஆசிரமத்து கேட் எதிரே வரும்போது உடைந்துவிட்டது. வண்டியைச் சரிசெய்ய வேண்டுமானால் வண்டியின் எடையினைக் குறைக்கவேண்டும்; எல்லா பாலையும் இறக்கவேண்டும். உங்களது ஆசிரம பெயர் பலகையினைப் பார்த்தேன். இந்த ஆசிரமம் அருகில் இருப்பதால் உங்களிடம் வந்தேன். பெரிய பாத்திரங்களைக் கொண்டுவந்து பாலைப் பிடித்துக்கொள்ளுங்கள்" என்றான். முல்லர் முழங்கால் படியிட்டு தேவனுக்கு நன்றி கூறினார்.
அன்று அவரது ஆசிரமத்துக் குழந்தைகளுக்கு வழக்கத்துக்கு அதிகமான பால் கிடைத்தது. இதுபோல முல்லரின் ஆசிரமத்துப் பலத் தேவைகளை தேவன் அதிசயமாகச் சந்தித்து நடத்தினார். "காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை" என்று இதனைத் தள்ளிவிட முடியாது. காரணம், ஒருமுறையல்ல பல முறை பல அதிசயங்கள் இதுபோல நடந்தன.
அன்பானவர்களே, நமது தேவன் சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர், அவருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள். இந்தப் புத்தாண்டில் இதனை நாம் நினைவில்கொண்டு அவர்மேல் விசுவாசம்கொண்டு உறுதியாக நிற்போம். அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்து அவரையே சார்ந்து வாழ்வோமானால் இந்த ஆண்டு மட்டுமல்ல, எந்நாளுமே அவருடைய உடனிருப்பையும் அதிசயமான வழிநடத்துதலையும் நாம் அனுபவிக்கலாம்.
தேவ செய்தி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)
🦋 Meditation verse - ரோமர் 6 : 7 / Romans 6:7
" ஆதவன் " தியானம் - 1951 2026 ஜூன் 11, வியாழன் "மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே." ...
-
- சகோ. எம்.ஜியோ பிரகாஷ் ஒ ரு முறை திரளான மக்கள் கூடி வந்திருந்தபோது இயேசு கிறிஸ்து அவர்களுக்குப் பல அறிவுரைகளைக் க...
-
'ஆதவன்' 💚நவம்பர் 29 , 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,391 "மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீ...
-
கர்த்தருக்குக் காணிக்கை - எம்.ஜியோ பிரகாஷ் கர்த்தருக்குக் காணிக்கை என்கின்ற இந்த நூல் 2005 ம் ஆண்டு சகோ. ஜியோ பிரகாஷ் ...
-
நம்மை விசாரிக்கிற தேவன் ! சகோ. எம். ஜியோ பிரகாஷ் ந மது தேவன் நம்மை விசாரிக்கி...
-
சிலுவையைப் பற்றிய உபதேசம் தேவ பெலனா அல்லது பைத்தியமா ? சகோ. டி . ஜான் ஜெயசீலன் இயேசு கிறிஸ்துவின் ரெகோபோத் ஊழியங்கள் சாத்த...
-
வேதாகமத் தியானம் - எண்:- 1,397 'ஆதவன்' 💚டிசம்பர் 05 , 2024. 💚வியாழக்கிழமை "சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்...
-
ஆவி, ஆத்துமா, சரீரம் - எது ஆவிக்குரிய வாழ்வு? - சகோ. எம். ஜியோ பிரகாஷ் தே வன் மனிதனை ஆவி, ஆத்துமா, சரீரம் எனும் மூன்று கூறுள்ளவனா...
-
வேதாகமத் தியானம் - எண்:- 1,573 'ஆதவன்' 💚மே 29 , 2025. 💚 வியாழக்கிழமை "நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோல...
-
சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் சகோ . எம் . ஜியோ பிரகாஷ் (இக்கட்டுரை சகோதரரால் எழுதப்பட்டு 'ஆதவன்' செப்டம்பர் 2013 இதழில் பி...
-
வேதாகமத் தியானம் - எண்:- 1,413 'ஆதவன்' 💚டிசம்பர் 21 , 2024. 💚சனிக்கிழமை "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக...
.jpg)


.jpg)


.jpg)
.jpg)


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
