Thursday, July 22, 2021

தேவன் மதத்தைப்பார்த்து மனிதனை நேசிப்பவரல்ல.....

                                  -   எம். ஜியோ பிரகாஷ் 


னிதர்கள் தங்கள் குறுகிய புத்தியால் கடவுளையும்தங்களைப்போல அற்பமனிதனைப்போன்றவராகவே எண்ணிக்கொள்கின்றனர். அதனால்தான் அவர்கள் மனிதனை எதிர்கொள்வது போல கடவுளை எதிர்கொள்ளவும்  மனிதரைத் திருப்திப்படுத்த சில செயல்களை செய்வதுபோல கடவுளையும் திருப்திப்படுத்த முயல்கின்றனர்.  


உலக மனிதர்களுக்கும் தலைவர்களுக்கும் பிறர் தங்களைப் புகழ்வதும் தங்களுக்கு மாலை அணிவித்து மரியாதைசெய்து வரவேற்பதும் மதிப்புக்குரியபெரியகாரியமாகவும் தெரியும்ஆனால் தேவன் அப்படிபட்டவரல்ல


மக்கள் பொதுவாக இதுபோல ஒரு அற்ப மனிதனாக கடவுளையும்  எண்ணிக்கொள்வதால், கடவுள்     படத்துக்கு   மாலை   அணிவிப்பதும்நறுமண அகர்பத்திகளைக் கொளுத்துவதும் இன்னும் பல்வேறு  பக்திச் செயல்களைச் செய்வதும் அவருக்குப் பிரியமாக இருக்குமென்று எண்ணி அவைகளுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். 


இத்தகைய மனிதர்கள்கடவுள்தான் தங்களைப் பாதுகாக்கின்றார்  என்பதை   மறந்து    இவர்கள்  கடவுளைப்   பாதுகாக்க  முயலுகின்றனர்.   அரசியல்    தலைவனிடம்    அன்பினைப்பெற    பிற  கட்சிக்கு  எதிராகச்   சில    அற்ப  செயல்களைச்    செய்வதுபோன்று  கடவுளது  அன்பினைப்    பெற பிற     மத வழிபாட்டுத் தலங்களை  அழித்து    தங்கள்    கடவுளுக்கு                 வழிபாட்டுத்  தலங்கள்  அமைக்க   முயலுகின்றனர்.   அதாவது   கடவுளை    ஒரு   அற்பமான   அரசியல் தலைவனாக எண்ணிக்கொள்கின்றனர்.


தவறு என்று தெரிந்தும் தங்களது மதவைராக்கியதாலும்ஜாதி வைராக்கியதாலும் அநீதிக்குத் துணைபோகின்றனர்விபச்சாரம்வேசித்தனம்களவுஏமாற்றுவஞ்சகம்ஊழல் என அனைத்து அயோக்யத்தனங்களையும் செய்துவிட்டு கடவுள் உருவங்களுக்குமுன் கூப்பாடு போட்டு அலறுவதாலும் அந்த உருவங்களுக்கு முன் மரியாதையாக  விழுந்து வணங்குவதாலும் ஆசீர்வாதம் கிடைக்குமென்று எண்ணுகின்றனர்.


ஆனால் நமது பரிசுத்தமான தேவன் சொல்கின்றார்,,,, நான் பட்சபாதமுள்ளவரல்லஎந்த ஜனத்திலாயினும் எனக்குப் பயந்திருந்து நீதியைச்செய்கிறவன் எவனோ அவனே எனக்கு உகந்தவன்அதாவது,     "நீ எனக்குப்  பூமாலையும் பத்தியும் நறுமண புகைகளும் செலுத்தவேண்டாம்எனக்குப் பயந்து நீதியைச் செய்அது போதும்" என்கிறார் பரிசுத்தர்.


இதனையே,"தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும்எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 34 , 35 ) என்று அப்போஸ்தலரான பேதுரு தெளிவாகக் கூறுகின்றார்.


கொர்நேலியு தேவனை அறியாதவராக இருந்தாலும் தேவனுக்குப் பயந்து நீதியைச் செய்து வாழ்ந்தவர்தனது சுய மகிமைக்காக அல்லாமல் உண்மையான மனித நேயத்துடன் தானங்களும் தர்மங்களும் செய்தவர்எனவே தேவன் தன்னை அவருக்கு வெளிப்படுத்தினார்.


தனது பாவ வழிகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு வாழ்பவன் தேவனை அறிய முடியாது. ஜாதி வெறியன் தேவனை அறிய முடியாது,  மனச் சாட்சியை அடகுவைத்து தனது குறுகிய மத வைராக்கியத்தால் அநியாயத்தை ஆதரிப்பவன்  தேவனை அறிய முடியாது. அத்தகைய மனிதன்  மத வைராக்கியத்தினால் தனது கடவுளுக்கென்று சில பல செயல்களை செய்யலாம்ஆனால் அனைவரையும் படைத்து ஆளும் தேவன் ஒருவரேஅவர் அநியாயத்துக்குத் துணைபோகின்றவர் அல்ல."அவர் தீமையைப் பார்க்க மாட்டாத சுத்தக்கண்ண ர்". 


பெருமைகொண்டு, அநியாய வாழ்க்கை வாழ்ந்து  இவ்வுலக  நிம்மதியை    இழந்து  மறு  உலக     நிச்சயமுமில்லாமல்  பரிதாபமாக உலகத்தைவிட்டுக் கடந்துச்சென்ற அரசியல்  தலைவர்களையும்   சாதாரண மனிதர்களையும்   நாம்                                  பார்த்துள்ளோம்.


அன்பானவர்களேஒரேயொரு வாழ்வு நமக்குக்  கொடுக்கப்பட்டுள்ளதுஅதனை நீதியோடும் நேர்மையோடும் மனித நேயத்தோடும்    வாழ்ந்து   தேவனை   அறிந்து  கொள்வோம்தேவன் மதத்தைப்பார்த்து மனிதனை நேசிப்பவரல்லஅவர் நம்மில் யாருக்கும் தூரமானவருமல்லகொர்நேலியுவைப் போல நீதியோடும் நேர்மையோடும் வாழும் யாருக்கும் தன்னை  வெளிப்படுத்துவார்.

Monday, July 19, 2021

பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்...


                                             -  எம். ஜியோ பிரகாஷ் 


கிறிஸ்தவம் என்பது  வெறும் ஆராதனை, சடங்குகள், சம்பிரதாயங்கள் சார்ந்த ஒன்றல்ல. ஆனால் இன்று அது அப்படி மாற்றப்பட்டுவிட்டது. பெரும்பாலான விசுவாசிகளும் ஊழியர்களும் ஆராதனை சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிறிஸ்தவத்தின் மூல கோட்பாடுகளை மறந்து விட்டனர். எனவேதான் சாதாரண உலக மதங்களைப்போல ஒரு மதமாகவே கிறிஸ்தவம் மக்களால் பார்க்கப்படுகின்றது.


கிறிஸ்தவம் மதமல்ல, அது ஒரு வாழ்க்கை மார்க்கமாகும். "நானே வழி " என்று கூறி நமக்கு வழிகாட்டிய கிறிஸ்துவின் வழியில் நடப்பதே கிறிஸ்தவ வாழ்வு. தேவனோடு தொடர்புடைய ஒரு வாழ்க்கை வாழ்ந்து அவரது குரலுக்குக்  கீழ்ப்படிந்து வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வு. 

"நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்த நாளிலே, தகனபலியைக்குறித்தும், மற்றப் பலிகளைக்குறித்தும் நான் அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும், என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்;" ( எரேமியா 7 : 22, 23 ) என்கிறார் கர்த்தர்.


பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தேவன் பல்வேறு பலிகளையும் நியமங்களையும் மக்களுக்கு நியமித்திருந்தார். அதன்படி பலிகள் செலுத்தி வாழ்வதுதான் தேவனுக்கு ஏற்புடைய செயல் என்று மக்கள் நினைத்திருந்தனர். ஆனால் அவர்கள் தேவனுடைய வாக்குக்குச் செவிகொடுக்கவில்லை. அதாவது அவர்கள் கட்டளையைக் கட்டளையாகப் பார்த்தனரேத்தவிர தேவன் விரும்பும் அன்பையும், இரக்கத்தையும் நீதியையும் விட்டுவிட்டனர். பலியிடுவது சம்பந்தமான கட்டளையை நிறைவேற்றுவதில் காட்டிய ஆர்வத்தை மனிதநேயத்திலும் பிறரை அன்பு செய்வதில் காட்டவில்லை.


எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்." ( மத்தேயு 9 : 13 )


பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள் என்று கூறிய இயேசு கிறிஸ்து இன்னுமொரு இடத்தில் "பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்த மாட்டீர்கள்." ( மத்தேயு 12 : 7 ) என்று கூறுகின்றார்.


ஆனால் இன்றும் கிறிஸ்தவர்களிடையே இயேசு கிறிஸ்துவின் காலத்து யூதர்கள் வாழ்ந்த  நிலைதான் தொடர்கின்றது. பல ஊழியர்கள் வறட்டுத்தனமான போதனைகளை போதிக்கின்றனரேத் தவிர இயேசு கிறிஸ்து கூறிய அன்பையும் இரக்கத்தையும் விட்டுவிட்டனர். தசமபாக போதனை இதற்கு ஒரு உதாரணம். அன்பு, இரக்கம், நீதி இவற்றைப்பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதைவிட, அத்தகைய வாழ்க்கையில் மக்கள் நடப்பதை வலியுறுத்துவதைவிட,  வருமானத்தில் பத்தில் ஒன்று காணிக்கைக் கொடுப்பதுதான் வலியுறுத்தப்படுகின்றது.


பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள் என்று இயேசு கிறிஸ்து கூறுவது வேதாகமக் கல்லூரியில் சென்று கற்றுக்கொள்ள அல்ல, மாறாக பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு கற்றுத்தர இடம்கொடுங்கள் என்று பொருள்


உங்கள் பொருளாசையையும் பண வெறியையும் விட்டுவிடீர்களானால் ஆவியானவர் உங்களை வழிநடத்துவார்; கற்றுத்தருவார் என்று பொருள். பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். அதாவது காணிக்கைக் கொடுக்காதவர்களை சபிக்கமாடீர்கள், காணிக்கையை வலியுறுத்தி பேசுவதைவிட பரிசுத்தத்தில் மக்களை வழிநடத்திட முயலுவீர்கள் என்று தேவன் அறிவுறுத்துகின்றார்.


என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள் என தேவன் கூறுவது நாம் அனைவருக்கும் ஒரு அறிவுரையாக இருக்கட்டும். அவர் இரண்டே இரண்டு கட்டளைகளைத்தான் கூறினார். ஒன்று எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை நேசிப்பது, இரண்டாவது தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரை நேசிப்பது. இதற்கு முரணான வாழ்க்கை, அன்பற்ற போதனைகள் நாம் தேவ ஜனமாக இருக்கத் தடையானவைகள்.


ஆம் அன்பானவர்களே, பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நாம் அறிந்துகொண்டால் பிறரைக் குற்றப்படுத்தமாட்டோம். தேவன் காட்டிய அன்பு வழியில் நடப்போம். அதுவே கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வழி.