இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Thursday, November 23, 2023

என் கதவு நிலையருகே / POST OF MY GATE

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,032,              நவம்பர் 25, 2023 சனிக்கிழமை

"என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்."( நீதிமொழிகள் 8 : 34 )

உணர்வில்லாதக்  காட்டுக் கழுதைகளைப்போல வாழாமல் உணர்வுள்ள இருதயத்தோடு நாம் வாழவேண்டும் என்பதனையே இன்றைய தியான வசனம் நமக்கு உணர்த்துகின்றது. 

இன்றைய தியான வசனம் நமக்குக் கூறுவது, நாம் தேவனது வார்த்தைகளைக் கேட்கவும், அதன்படி நடக்கவும் நம்மை ஒப்புவிக்கவேண்டும். அதாவது நாம் தினமும் தேவ சமூகத்தில்  காத்திருந்து ஜெபித்து நம்மைக்குறித்த தேவ சித்தத்தை அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டும். இதனையே, "என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன்" என்று கூறப்பட்டுள்ளது. 

ஒரு வீட்டின் வேலையாள் அந்த எஜமானின் விருப்பத்தை நிறைவேற்றுபவனாக இருப்பான். எனவே அவன் எப்போதும் எஜமானின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் கேட்டு அவற்றுக்குக் கீழ்ப்படிய தயாராக இருப்பான். அத்தகைய ஊழியனை எஜமானன் பெருமையாகக்  கருதுவான். அதுபோல நாம் தேவனால் உண்டானவர்கள் என்பதை உணர்த்துக்கொண்டால் அவருக்குக் காத்திருந்து செவிகொடுப்போம். "தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்" ( யோவான் 8 : 47 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? 

ஆம் அன்பானவர்களே, அவரது வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, அவரது கதவுநிலையருகே காத்திருந்து, அவருக்குச் செவிகொடுக்கவேண்டும். "பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?" ( எபிரெயர் 12 : 25 ) என்று வேதம் எச்சரிக்கின்றது.

மட்டுமல்ல, இன்றைய  வசனம் கூறுவதன்படி அவரது கதவுநிலையருகே காத்திருந்து அவருக்குச் செவிகொடுக்கும்போதுதான் அவர் கதவைத் தட்டும் சத்தத்தை நாம் கேட்கமுடியும். அப்போதுதான் நாம் அவருக்கு நமது இருதயக் கதவைத் திறக்க முடியும்; அப்போதுதான் அவர் நம்முள் வந்து நம்மோடு உணவருந்துவார். நாமும் அவரோடு உணவருந்தும் மேலான அனுபவத்தைப் பெறமுடியும். 

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.' ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

இத்தகைய மனுஷன் பாக்கியவான் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. எனவே அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வில் நாம் விழிப்புடன் இருப்போம். அவரது கதவு நிலையருகில் பொறுமையாக காத்திருப்போம்; அவரது குரலைக் கேட்டு அதற்குக்  கீழ்படிவோம். ஆண்டவரே, எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தாரும் என்று வேண்டுவோம். வெறும் உலகப் பொருளாசீர்வாதங்களுக்கல்ல, மேலான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காகக் காத்திருப்போம்.

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்                          

               POST OF MY GATE 

'AATHAVAN' BIBLE MEDITATION No:- 1,032,                   Saturday, November 25, 2023

"Blessed is the man that heareth me, watching daily at my gates, waiting at the posts of my doors." (Proverbs 8: 34)

Today's meditation verse tells us that we should not live like insensible wild donkeys but live with a conscious heart.

Today's meditation verse tells us that we must commit ourselves to listen to God's words and act accordingly. That is, we should wait and pray daily in God's community and be eager to know God's will for us. This is what has been said, the man that heareth me, watching daily at my gates, waiting at the posts of my doors."

The servant of a house is the executor of the will of the master. So, he is always ready to hear and obey the words from the Master's mouth. Such a servant will be honored by the master. Similarly, if we realize that we are made by God, we will wait and listen to Him. Didn't Jesus Christ say, “He that is of God heareth God's words" (John 8: 47)

Yes, dear ones, ever watch at His threshold, wait at His doorpost, and listen to Him. "See that ye refuse not him that speaketh. For if they escaped not who refused him that spake on earth, much more shall not we escape, if we turn away from him that speaketh from heaven" (Hebrews 12: 25) the scripture warns.

Not only that, but as today's verse says, we can hear his knocking only when we wait at his doorpost and listen to him. Only then can we open the door of our hearts to Him; Only then will He come into us and dine with us. We can also have a better experience of dining with him.

"Behold, I stand at the door, and knock: if any man hear my voice, and open the door, I will come in to him, and will sup with him, and he with me." (Revelation 3: 20) says the Lord Jesus Christ.

Today's verse says that such a man is blessed. So beloved, let us be vigilant in the spiritual life. Let us wait patiently by his doorpost; Let us hear His voice and obey it. Lord, give me a heart of understanding. Let's not just wait for worldly material blessings but for higher spiritual blessings.

God’s Message: - ✍️ Bro. M. Geo Prakash

No comments: