நல்ல நிலம் / GOOD LAND

  ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,038                டிசம்பர் 01, 2023 வெள்ளிக்கிழமை

"எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரைமுளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.   முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு." ( எபிரெயர் 6 : 7, 8 )


தேவனது வார்த்தைகளை மழைக்கு ஒப்பிட்டு இன்றைய தியான வசனம் நமக்கு ஓர் அறிவுரையினைக் கூறுகின்றது. அதாவது, தேவன் தனது வசனத்தை பூமியிலுள்ள எல்லோரும் கேட்கும்படிச் செய்கின்றார். தேவ வசனங்கள்  ஏதாவது ஒரு முறையில் மனிதர்களைச் சென்று சேர்கின்றன. இப்படி அடிக்கடி தேவ வசனங்கள் மனிதர்களது இருதயத்தின்மேல் பொழியப்படுகின்றன. 

மழை பெய்யும்போது பயிர் நிலமானது அந்த நீரைக் குடித்து தன்னில் உள்ள பயிர் வளர்ந்து விளையச்  செய்கின்றது.  ஆனால் எதற்கும் ஏற்பில்லாத நிலங்களோ அந்த நீரினால் முட்டச்செடிகளை வளர்ச் செய்கின்றன.  இப்படி மழையான தேவ வசனங்கள் தன்மீது பொழியப்படும்போது நல்ல பயிர் நிலத்தைப்போல அதனைப் பயன்படுத்தி நாம் நல்ல பலன் தரவேண்டியது அவசியம். இப்படித் தன்மேல் அடிக்கடி பெய்கிற தேவ வசனமாகிய மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரைமுளைப்பிக்கும் நிலம்போல இருந்தால்  தேவனால் ஆசீர்வாதம் பெறுவோம். 

மாறாக, வசனங்களைக் கேட்டு அறிந்தபின்பும் அதன்படி நடவாமல் முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலம்போல இருப்போமானால் தேவனால்  தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கு ஏற்றவர்களுமாக இருப்போம்.  சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு என்று இன்றைய வசனம் நம்மை எச்சரிக்கின்றது.

ஏன் தேவன் இப்படி அந்த முட்களை விளைவிக்கும் நிலங்கள் சுட்டெரிக்கப்படும் என்கின்றார்? தேவ சித்தமானது,  மழைநீரானது நிலத்தில் விழுந்து விதைக்கிறவனுக்கு விதையினையும்  புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கவேண்டும் என்பதுதான். அந்த நோக்கத்துக்காகவே அது அனுப்பப்படுகின்றது. அதுபோலவே தேவனுடைய வார்த்தைகளும். மனிதனைப் பண்படுத்தி அவன் கனிதரவேண்டும் என்பதற்காகவே அனுப்பப்படுகின்றன. 

"மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்." ( ஏசாயா 55 : 11 )

"அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்." என்று தேவன் உறுதியாகக் கூறியுள்ள வார்த்தைக்கு முரணாக இருப்பதால்  முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமானது  தகாததாயும் சபிக்கப்படுவதற்கு ஏற்றதாகவும் இருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.

அன்பானவர்களே, தேவனுடைய வார்த்தைகளை நாம் அற்பமாக எண்ணிப் புறம்பே தள்ளிவிடக்கூடாது. தேவன் ஒரு நல்ல நோக்கத்துக்காக நம்பிக்கையுடன் தனது  வார்த்தைகளை நம்மிடம் அனுப்புகின்றார். அந்த வார்த்தைகளைக் குடித்து  நம்மில் பயிரிடுகிற தேவனுக்கேற்ற  பயிரைமுளைப்பிக்கும் நிலமாக நாம் வாழும்போது  கனிதருபவர்களாகவும் உணவளிப்பவர்களாகவும் இருப்போம்.   எனவே அப்படி தேவ வசனங்களுக்குக் கீழ்ப்படிந்து வாழும்போது  இன்றைய வசனம் கூறுவதன்படி நாம் தேவனால் ஆசீர்வாதத்தினைப் பெறுவோம். 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்          

                    GOOD LAND 

‘AATHAVAN' BIBLE MEDITATION No:-1,038                                   Friday, December 01, 2023

"For the earth which drinketh in the rain that cometh oft upon it, and bringeth forth herbs meet for them by whom it is dressed, receiveth blessing from God: "But that which beareth thorns and briers is rejected, and is nigh unto cursing; whose end is to be burned." (Hebrews 6: 7,8)

Today's meditation verse gives us an advice by comparing God's words to rain. That is, God makes his word heard by everyone on earth. God's words reach people in one way or another. God's words are often showered on the hearts of people.

When it rains, the cropland drinks the water and makes the crop in it grow. But the land that is not suitable for anything grows weeds and thorns with that water. When God's verses are showered on us like this rain, it is necessary that we use it like good crop land to give good results. In this way, we will receive the blessings of God if we drink the rain which is the word of God that often falls on us, and become like a land that grows crops for those who cultivate it.

On the contrary, after hearing and knowing the verses and not planting accordingly, if we are like the ground that sprouts thorns and thistles, we will be unfit and fit to be cursed by God. Today's verse warns us that the end will be burning.

Why does God say that the land that produces the thorns will be burned? God's will is that, rainwater should fall on the ground and give seed to the sower and food to the eater. It is sent for that purpose. So are the words of God. They are sent to cultivate man and make him fruitful.

"For as the rain cometh down, and the snow from heaven, and returneth not thither, but watereth the earth, and maketh it bring forth and bud, that it may give seed to the sower, and bread to the eater: So shall my word be that goeth forth out of my mouth: it shall not return unto me void, but it shall accomplish that which I please, and it shall prosper in the thing whereto I sent it." (Isaiah 55: 10,11)

God says, “It shall not return unto me void, but it shall accomplish that which I please, and it shall prosper in the thing whereto I sent it." Hence, as it is contrary to God's sure words, if that land brings forth thorns and thistles it will be cursed, its end is burning.

Beloved, we must not disregard the words of God. God trustfully sends His words to us for a good purpose. When we live as a fertile land and yield fruits, we will receive blessings from God.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash                                               

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்