Monday, November 13, 2023

பழையதாகாத செருப்புக்கள் / NON WAXEN SANDALS

 'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,022,             நவம்பர் 15, 2023 புதன்கிழமை

"கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; உங்கள் மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை." ( உபாகமம் 29 : 5 )

இஸ்ரவேல் மக்களை தேவன் எகிப்திலிருந்து விடுவித்து கானானை நோக்கி நடத்தியபோது பல அற்புத அதிசயங்களைச்  செய்தார். அவற்றில் நாம், செங்கடலை தேவன் பிரித்தது, கரைபுரண்டு ஓடிய யோர்தானைத் திருப்பியது, எரிகோ கோட்டையினை இடிந்துவிழச் செய்தது, மன்னா பொழிந்தது, அதிசயமாகப்  பாலை நிலத்தில் இறைச்சியும், தண்ணீரும்  மக்களுக்குக் கொடுத்தது இவற்றையே பெரிதாகப் பேசுகின்றோம். ஆனால் அவற்றிற்கு இணையான அதிசயத்தைத்தான்  இன்றைய வசனம் கூறுகின்றது. 


நாம் ஓர்  ஆண்டுக்குள் எத்தனைச் செருப்புக்கள் மாற்றுகின்றோம் என்று எண்ணிப்பாருங்கள். இத்தனைக்கும் நாம் இஸ்ரவேல் மக்கள் நடந்ததுபோல் பல கிலோமீட்டர்தூரம் வனாந்தரத்தில் நடப்பதில்லை.  ஆனால் அந்த மக்கள் 40 ஆண்டுகள் ஒரே செருப்பை அணிந்தபடி நடந்தனர். அந்தச் செருப்புகள் அறுந்துபோகவோ  பழையவைகளாகவோ இல்லை.  இந்த அதிசயத்தையே மோசே, "உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை." என்று கூறுகின்றார். ஆம் அவை 40 ஆண்டுகள் அவை புதிதாகவே இருந்தன. 

பாலை நிலத்தில் புதிய செருப்புக்களை வாங்கி உபயோகிக்க முடியாது, மக்கள் உடனேயே தயாரித்து அணியவும்  முடியாது. எனவே தேவன் இந்த அதிசயத்தைச் செய்தார்.  இதுபோலவே அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் பழையதாகிப்போகவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இது எவ்வளவு பெரிய அதிசயம்!!! ஆனால் நாம் இவற்றை அதிகமாக எண்ணிப்பார்ப்பதில்லை. 

அன்பானவர்களே, இதே சிந்தனையோடு நாம் பரம கானானை நோக்கிப்  பயணிக்கும் புதிய ஏற்பாட்டுச் சிந்தனைக்கு வருவோம். புதிய ஏற்பாட்டில் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு இரட்சிப்படையும்போது இரட்சிப்பின் ஆடை அணிவிக்கப்படுகின்றோம். இந்த ஆடை இல்லாமல் நாம் பரலோக ராஜ்யத்தில் நுழைய முடியாது.  இந்த ஆடை என்பது பரிசுத்தவான்களுக்கு அடையாளம். "சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே." ( வெளிப்படுத்தின விசேஷம் 19 : 8 ) என்று கூறப்பட்டுள்ளது. இதனை நாம் பழையதாகிக்  கந்தையாகாமல் காத்துக்கொள்ளவேண்டும்.

இயேசு கிறிஸ்துவும் இதனைத் திருமண ஆடைக்கு ஒப்பிட்டுத்  தனது உவமையில் கூறினார். "சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்." ( மத்தேயு 22 : 13 )

இதுபோலவே செருப்புகளைப்பற்றியும் நாம் அறியலாம். சமாதானத்தின் சுவிசேஷம் எனும் கிறிஸ்துவின் நற்செய்தியே  அந்த செருப்புகள். இதனை அப்போஸ்தலரான பவுல்,  "சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்;" ( எபேசியர் 6 : 15 ) என்று கூறுகின்றார். ஆம், நமது வேத வசனங்களின் அறிவும் எப்போதும் அவற்றைச் சரியாகப் பயன்படுத்த ஆயுதமாகவும் அதற்கேற்ற வாழ்க்கையும் உள்ளவர்களாய் அவை பழையதாகிவிடாமல் எப்போதும் புதிதாகக் காக்கப்படவேண்டும். 

"கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே." ( உபாகமம் 29 : 3 ) என்று மோசே கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, அவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழும்போது, அன்று இஸ்ரவேல் மக்களுக்குச் செய்ததுபோல ஆவிக்குரிய இஸ்ரவேலரான நமது வாழ்க்கையிலும் நமது இரட்சிப்பின் ஆடையும்   நமது வேத அறிவும், அவற்றைப் பயன்படுத்தும் ஆயத்தமும்  சுவிசேஷ வாழ்க்கையும்  பழையதாகாமல் காத்துக்கொள்ள தேவன் வழிசெய்து அதிசயமாக நம்மையும்  நடத்துவார். 

தேவ செய்தி:- ✍️ சகோஎம்ஜியோ பிரகாஷ்          

            NON WAXEN SANDALS

'AATHAVAN' BIBLE MEDITATION - No: - 1,022,                Wednesday, November 15, 2023

"And I have led you forty years in the wilderness: your clothes are not waxen old upon you, and thy shoe is not waxen old upon thy foot." (Deuteronomy 29: 5)

When God led the people of Israel out of Egypt and into Canaan, he did many miracles. Among them, we are talking about God's parting of the Red Sea, turning back the overflowing Jordan, destroying the Jericho fortress, raining manna, miraculously giving people meat and water in the wilderness. But today's verse tells a miracle like them.

Think how many sandals we change in a year. However, we do not walk many kilo meters in the wilderness like the people of Israel did. But those people walked wearing the same sandal for 40 years. It was this miracle that Moses said, “thy shoe is not waxen old upon thy foot." Yes, they were 40 years new.

New sandals cannot be bought and used in the wilderness, and people cannot also make them and wear them immediately. Similarly, it is said that the clothes they wore never get old. What a miracle this is!!! But we don't think too much of these.

Beloved, it is with this same thought that we come to the New Testament thought of journeying toward the eternal Canaan. In the New Testament we are clothed with salvation when our sins are forgiven and we are saved. Without this garment we cannot enter the kingdom of heaven. This garment is the sign of the saints. "And to her was granted that she should be arrayed in fine linen, clean and white: for the fine linen is the righteousness of saints." (Revelation 19: 8) We have to keep it carefully not becoming old.

Jesus Christ also said this in his parable. "And he saith unto him, Friend, how camest thou in hither not having a wedding garment? And he was speechless. Then said the king to the servants, Bind him hand and foot, and take him away, and cast him into outer darkness, there shall be weeping and gnashing of teeth." ( Matthew 22 : 13 )

Similarly, we can know about sandals. Those sandals are Christ's preparation of gospel of peace. This is what the apostle Paul said, "And your feet shod with the preparation of the gospel of peace;" (Ephesians 6: 15) Yes, the knowledge of our scriptures is always a weapon to use them properly and we have to live according to them so they don't become old and they should always be kept fresh.

"The great temptations which thine eyes have seen, the signs, and those great miracles:" (Deuteronomy 29: 3) says Moses. Yes, dear ones, as spiritual Israelites, when we give ourselves to Him and live, as He did to the people of Israel that day, God will miraculously treat us to keep our salvation clothing and our knowledge of scriptures, our preparation to use them and our evangelical life from not becoming old in our lives.

God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash

No comments: