'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,031, நவம்பர் 24, 2023 வெள்ளிக்கிழமை
"உமது பரிமளத்தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளத்தைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்." ( உன்னதப்பாட்டு 1 : 3 )
கிறிஸ்து இயேசுவை நமது வாழ்வில் நாம் பெறும்போது அவரது வாசனையினை உணரமுடியும். மட்டுமல்ல, அதனை மற்றவர்களுக்குக் கொடுக்கவும் முடியும். கிறிஸ்துவின் பெயர், அவர்மூலம் நாம் பெறும் வாழ்க்கை அனுபவங்கள் இவற்றை வாசனைக்கு ஒப்பிட்டு இன்றைய வசனம், "உமது பரிமளத்தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளத்தைலமாயிருக்கிறது" என்று கூறுகின்றது.
இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள, "ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்." எனும் வார்த்தைகள் விசுவாசிகளைக் குறிக்கின்றது. ஆம், கன்னியர்களாகிய பழுதற்ற விசுவாசிகள் அவரை நேசிப்பார்கள்.
இந்த வாசனை எதுவரை நம்மிடம் வீசும் என்பதனையும் இன்றைய வசனத்தைத் தொடர்ந்து இந்த அதிகாரத்தை நாம் வாசித்தால் புரிந்துகொள்ளலாம். அங்குக் குறிப்பிடப்பட்டுள்ளது, "ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளதைலம் தன் வாசனையை வீசும்." ( உன்னதப்பாட்டு 1 : 12 ) அதாவது கிறிஸ்து ராஜாவாக நமது இருதயத்தில் இருக்குமளவுக்கு இந்த வாசனை நம்மில் வீசும்.
இதனையே அப்போஸ்தலரான பவுல், "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." ( 2 கொரிந்தியர் 2 : 14 ) என்று குறிப்பிடுகின்றார். நம்மிடமிருக்கும் அவரை அறிகின்ற அறிவின் வாசனையினை அவர் எல்லா இடங்களிலும் நம்மூலம் வெளிப்படுத்துகின்றார். அவருக்கே ஸ்தோத்திரம்.
கிறிஸ்துவை அறிகின்ற இந்த அறிவாகிய வாசனை மீட்பு அனுபவத்திற்கு குறிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் நறுமணமாக இருக்கும். துணிந்து தங்கள் பாவங்களில் வாழ்ந்து கேலிபேசி துன்மார்க்கமாகத் திரிபவர்களுக்கு இந்த வாசனை தெரியாது அது அவர்களுக்கு மரண வாசனைபோலவேத் தெரியும்.
இதனையே அப்போஸ்தலரான பவுல், "இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப் போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவ வாசனையாகவும் இருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 2 : 15,16 ) எனக் கூறுகின்றார். "கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?" என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோலத் தங்களைக் கழுதைகளாக ஆக்கிக்கொண்டவர்களுக்கு கிறிஸ்துவின் வாசனை புரியாது.
பொது இடங்களுக்கு, திருமண வீடுகளுக்குச் செல்லும்போது பலர் நறுமண 'சென்ட்' பூசிக்கொண்டுச் செல்வார்கள். அது தங்களை சிறப்பித்துக்காட்டும், மட்டுமல்ல ஒரு புத்துணர்ச்சியினைக் கொடுக்கும். அதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நறுமணத்தை நாம் பூசிக்கொள்வோமானால் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டும். நமது ஆவி புத்துணர்ச்சியுடன் உற்சாகமாக இருக்கும்.
"ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்" என்று கூறியுள்ளபடி விசுவாசக் கன்னியர்களாகிய நாம் அனைவருமே அவரை நேசிப்போம். அவரது நறுமணம் நம்மீதும் நமது மூலம் நம்மைச் சுற்றியுள்ள அனைவர்மீதும் வீசச்செய்வோம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
FRAGRANCE OF CHRIST
'AATHAVAN' BIBLE
MEDITATION - No:- 1,031, Friday, November 24,
2023
"Because
of the savour of thy good ointments thy name is as ointment poured forth,
therefore do the virgins love thee." (Song of Songs 1: 3)
When we
receive Christ Jesus into our lives, we can smell His fragrance. Not only that,
it can also be given to others. Today's verse compares the name of Christ and
the life experiences we receive through Him to a fragrance, "Thy perfumes
are a sweet fragrance; thy name is an ointment poured forth".
This
verse says, "Therefore do the virgins love you." The word virgin here
refer to believers. Yes, the virgin faithful will love him.
If we read the verses after
today's verse, we can understand how long this fragrance will blow on us. It is
mentioned there, "While the king sitteth at
his table, my spikenard sendeth forth the smell thereof." (Song of Songs 1:
12) That
is, as long as Christ is in our hearts as King, this fragrance will blow in us.
This is what the apostle
Paul said, "Now thanks be unto God, which always causeth
us to triumph in Christ, and maketh manifest the savour of his knowledge by us
in every place." (2 Corinthians 2: 14) He spreads through us
everywhere the fragrance of our knowledge of Him. Praise be to Him.
This
knowledge of knowing Christ is fragrant only to those who are marked for the
redemptive experience. Those who dare to live in their sins and mock and walk
wickedly do not know this smell, it is like the smell of death to them.
This is what the apostle
Paul said, “For we are unto God a sweet savour of Christ, in
them that are saved, and in them that perish: To the one we are the savour of
death unto death; and to the other the savour of life unto life." (2
Corinthians 2: 15,16) There is a saying that, “Does a donkey know
the smell of camphor?” likewise, those who have made themselves donkeys do not
smell Christ.
While
going to public places and marriage houses, many people wear fragrant 'scent'.
It will not only make them stand out, but also give them a refreshing look.
Likewise, if we put on the fragrance of the Lord Jesus Christ, we will be distinguished
from others. Our spirit will be refreshed and excited.
Let us
all, virgins of faith, love him as it is said, "Wherefore virgins love
thee." May His fragrance waft upon us and through us upon all around us.
God’s
Message:- ✍️ Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment