'ஆதவன்' 💚நவம்பர் 05, 2024. செவ்வாய்க்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,367
"பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்." ( மாற்கு 16 : 15 ) என்றார். "And he said unto them, Go ye into all the world, and preach the gospel to every creature." ( Mark 16 : 15 ) CONTACT ADDRESS :- 18E, Holy Cross College Road, Punnai Nagar, Nagercoil - 629 004, Kanyakumari District, India Cell-96889 33712 & 7639022747.
ரோமர் 11 : 29
யாக்கோபு 5 : 7
'ஆதவன்' 💚நவம்பர் 04, 2024. 💚திங்கள்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,366
விழுந்துவிடாத எச்சரிக்கை
'ஆதவன்' 💚நவம்பர் 03, 2024. ஞாயிற்றுக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,365
நம்மை நம்பப்பண்ணின வசனம்
'ஆதவன்' 💚நவம்பர் 02, 2024. 💚சனிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,364
"நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது." ( சங்கீதம் 119 : 49, 50 )
எது ஆவிக்குரிய ஆராதனை?
தேவச் செய்தி - சகோ. எம். ஜியோ பிரகாஷ்
ஆவிக்குரிய ஆராதனை என்றால் என்ன என்பதனைப் பலரும் சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் சபைகளுக்குச் செல்லும் பலர் தங்களை மட்டும் ஆவிக்குரிய ஆராதனை செய்பவர்களாகவும் மற்றவர்கள் அனைவரும் தேவன் விரும்பாத ஆராதனை செய்வதாகவும் எண்ணிக்கொள்கின்றனர். இன்று ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் பல சபைகளில் பரிசுத்த ஆவியோடு தொழுதுகொள்கிறோம் என்று கூறி அலறி ஆர்ப்பாட்டம் செய்வதை நாம் காணலாம். ஆனால் இவர்களில் பலரும் ஆராதனை முடிந்து வெளியுலக வாழ்க்கையில் தேவனை அறியாத மக்களைவிட அவலட்சணமான குணங்களுள்ளவர்களாக காணப்படுகின்றனர்.
ஆராதனை செய்த இவர்கள் மற்றவர்களைவிட நல்லவர்களாக அல்லவா இருக்கவேண்டும்? அப்படியானால் ஆலய ஆராதனையில் இவர்களைத் துள்ளிக் குதிக்கவைத்த ஆவி எது? பரிசுத்த ஆவி, "பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்."( யோவான் 16 : 8 ) என்றல்லவா கூறப்பட்டுள்ளது? "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்" ( யோவான் 16 : 13 ) என்று கூறப்பட்டுள்ளதே? அப்படியானால் ஆராதனை முடிந்து வெளியே வந்தவுடன் மற்றவர்களுக்கு எதிராகச் செயல்படுவதும், உண்மையற்ற வாழ்க்கை வாழ்வதும் ஏன்?
ஆனால் என்ன இருந்தாலும் கிறிஸ்தவம் ஆவிக்குரிய ஆராதனையையே வலியுறுத்துகின்றது என்பதே நிஜம். இயேசு கிறிஸ்து கூறினார், "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்." ( யோவான் 4 : 24 ) சமாரியா பெண்ணிடம் பேசும்போது இயேசு கிறிஸ்து இந்த மாபெரும் சத்தியத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், யூதர்கள் எருசலேமிலுள்ள ஆலயத்திலே தான் தேவனைத் தொழுதுகொள்ளவேண்டுமென நம்பினர். அவர்கள் தேவனை ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருப்பவர் என்றே நம்பினர். மேலும் தேவனைத் தொழுதுகொள்ள சில முறைமைகளையும் வைத்திருந்தனர். அந்த நம்பிக்கையையும் முறைமைகளையும் கடைபிடிப்பதுதான் ஆவிக்குரிய ஆராதனை என்று எண்ணிக்கொண்டனர்.
ஏவாளை வஞ்சித்த பாம்பு
'ஆதவன்' 💚அக்டோபர் 31, 2024. வியாழக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,362
இருளிலிருந்து வெளிச்சத்துக்கு
'ஆதவன்' 💚அக்டோபர் 30, 2024. 💚புதன்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,361
மேலான இரகசியம்
'ஆதவன்' அக்டோபர் 29, 2024. செவ்வாய்க்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,360
தேவன் தனக்கு வெளிப்படுத்தின இரகசியம் என்ன என்பதை அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். முற்காலங்களில் மட்டுமல்ல, இன்றும் மனிதர்கள் கடவுளை ஆலயங்களில் தேடி அலைகின்றனர். ஆலயங்களில் மட்டுமே தேவன் தங்கியிருப்பதாக எண்ணிக்கொள்கின்றனர். எனவேதான் சில புண்ணிய ஸ்தலங்களில் கூட்டம் அலைமோதுகின்றது. பொதுவாக எல்லா மதங்களிலும் இப்படித்தான் இருக்கின்றது.
ஆவியும் மாம்சமும்
'ஆதவன்' அக்டோபர் 28, 2024. 💚திங்கள்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,359
எல்லா மனுஷரும் சத்தியத்தை அறியவேண்டும்
'ஆதவன்' அக்டோபர் 27, 2024.ஞாயிற்றுக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,358
தேவ சித்தம்.
'ஆதவன்' 💚அக்டோபர் 26, 2024. 💚சனிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,357
ஆமென் (Amen)
'ஆதவன்' 💚அக்டோபர் 25, 2024. வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,356
வாழ்வின் நிகழ்வுகளுக்கு நமது செயல்பாடுகளே காரணம்
'ஆதவன்' அக்டோபர் 24, 2024. 💚வியாழக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,355
எல்லோருக்குள்ளும் ஒரே பிதா
'ஆதவன்' 💚அக்டோபர் 23, 2024. 💚புதன்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,354
"ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது". (எபேசியர் 4: 5 - 7 )
தங்களுக்குச் சொந்த விசுவாசமில்லாமல் எதெற்கெடுத்தாலும் ஊழியர்களைத் தேடி ஓடும் பல கிறிஸ்தவர்களை நாம் உலகில் பார்க்கின்றோம். இந்தக் கிறிஸ்தவர்கள் புகழ்பெற்ற ஊழியர்களை வானத்திலிருந்து வந்தவர்கள் என எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் தங்களுக்கு அடுத்திருக்கும் சக விசுவாசிகளை மதிப்பதில்லை. இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுவது நாம் அனைவரும் சிந்திக்கத்தக்கது.
ஊழியர்களுக்கென்றும் விசுவாசிகளுக்கென்றும் தனித்தனி பிரிவான கர்த்தரும், விசுவாசமும், ஞானஸ்நானமும் இல்லை. மாறாக, எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், நம் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். அதாவது, ஒரே தேவன்தான் நம் எல்லோருக்குள்ளும் இருந்து செயல்புரிகின்றார்.
ஆனால் அடுத்ததாக பவுல் அப்போஸ்தலர் இந்த வசனத்தில் கூறுகின்றார், "கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது" என்று. அதாவது தேவ கிருபை ஆளாளுக்கு வித்தியாசமாகச் செயல்படும். அது கிறிஸ்து பகிர்ந்து கொடுப்பது. மற்ற ஊழியர்களைப்போலவோ மற்ற விசுவாசிகளைப்போலவோ நாம் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் மனிதர்களிடம் வேற்றுமை பாராட்டாத தேவன் நாம் அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது நமக்கும் ஏற்ற கிருபையளிப்பார்.
இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூற விரும்பும் காரியங்கள்:-
வெவ்வேறு கர்த்தரல்ல ஒரே கர்த்தர்தான் உண்டு. எனவே இங்கு அங்கு என அலையவேண்டாம். விசுவாசம் என்பது எல்லோருக்கும் பொதுவானது; வேதம் கூறுவதை விசுவாசிக்கவேண்டும். ஒரே தேவன் எல்லோருக்குள்ளும் இருப்பதால் எல்லோரையும் மதிக்கவேண்டும். கிறிஸ்துவினுடைய விருப்பப்படி அவர் அவனவனுக்குக் கிருபை அளிக்கின்றார்.
இப்படியிருப்பதால் "மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்." ( எபேசியர் 4 : 2, 3 ) என்று இன்றைய தியான வசனத்தின் முன் குறிப்பிடுகின்றார்.
கிறிஸ்துவின் முன்பு நாம் அனைவரும் ஒன்றுதான். விசுவாசி, ஊழியன் என்று இல்லை. எனவே குறிப்பிட்ட ஊழியர்களை மட்டும் அன்பு செய்யாமல் நமக்கு அடுத்திருக்கும் சக விசுவாசிகளையும் அன்புசெய்து சமாதானத்தோடு ஒருமைப்பாட்டுடன் நாம் வாழவேண்டும். ஆனால் இந்த உணர்வில்லாததால் அடுத்த வீட்டில் உணவுக்காக ஏங்கித் தவிக்கும் மக்கள் இருந்தாலும் ஐந்துகாசுகூட உதவி செய்யாத பலர் தொலைவிலிருக்கும் ஊழியர்களுக்கு ஆயிரக்கணக்கான பணத்தை அனுப்பிவைக்கின்றனர்.
அன்பானவர்களே, எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் தான் உண்டு; அவரே எல்லார்மேலும், எல்லாரோடும், நம் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் என்ற உணர்வோடு வாழ்வோம்.
ஆகாயத்தில் சிலம்படித்தல்
'ஆதவன்' அக்டோபர் 22, 2024. செவ்வாய்க்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,353
"ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்." ( 1 கொரிந்தியர் 9 : 26 )
ஆவிக்குரிய வாழ்வில் நமக்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும்.நமது நோக்கத்தைப்பொறுத்தே நமது ஆவிக்குரிய வாழ்வு அமையும். அதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் விளக்குகின்றார். நமது ஆவிக்குரிய வாழ்வில் ஒரு நிச்சயம் வேண்டும். இந்த வாழ்க்கைக்குப் பின்னர் முடிவில்லாத நித்திய ஜீவன் உள்ளது. அதனைப் பெறுவதே நமது இலக்காக இருக்கவேண்டும்.
இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலருக்கும் இதுகுறித்து எந்த நிச்சயமும் கிடையாது. ஆவிக்குரிய காரியங்கள் செய்கின்றோம் என்று கூறிக்கொண்டு பல்வேறு பக்தி முயற்சிகளைச் செய்கின்றனர். பல்வேறு பக்தி அமைப்புகளில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால் நித்திய ஜீவனைப்பற்றிய எண்ணமோ ஆவிக்குரிய அறிவோ இவர்களுக்கு இருப்பதில்லை.
இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்." என்று. அதாவது மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது, ஆனால் நான் அப்படிச் செய்யமாட்டேன் என்கிறார்.
ஆவிக்குரிய வாழ்க்கையை அப்போஸ்தலரான பவுல் ஓட்டப்பந்தயத்துக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார். ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது முதல் பரிசைப்பெறவேண்டும் எனும் எண்ணம் நமக்கு இருக்கவேண்டும். அதுபோலவே சிலம்பம் பண்ணும்போது வெறுமனே ஆகாயத்தில் சிலம்பக்கம்பைச் சுழற்றிக்கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை. எதிலும் ஒரு நோக்கம் வேண்டும்.
அந்த நோக்கம் நமக்கு இருக்குமானால் நாம் அதற்காக சில முயற்சிகளும் பயிற்சிகளும் எடுத்திருப்போம். ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவன் பயிற்சியில்லாமல் திடீரென்று மைதானத்தில் ஓடி பரிசுபெற முடியாது. அதுபோல ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெற சில பயிற்சிகள் நமக்குத் தேவை, சில ஒறுத்தல்கள் தேவை.
"பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்." ( 1 கொரிந்தியர் 9 : 25 )
ஆம் அன்பானவர்களே, நமது ஆவிக்குரிய வாழ்க்கையினை ஆராய்ந்து பார்ப்போம். நாம் செய்யும் செயல்கள், நமது எண்ணங்கள் எதனை இலக்காகக் கொண்டு செய்யப்படுகின்றன என்று சிந்திப்போம். நிச்சயமில்லாத, குறிக்கோளற்ற வாழ்க்கை அர்த்தமில்லாதது. நான் நிச்சயமில்லாதவனாக இந்த ஆவிக்குரிய வாழ்க்கை வாழவில்லை. ஆகாயத்தில் சிலம்படிப்பவனாக வாழவில்லை மாறாக, மேலான மறுவுலக வாழ்க்கை எனக்கு உண்டு எனும் நிச்சயத்தோடு ஆவிக்குரிய வாழ்க்கையைத் தொடருகின்றேன் என்று அப்போஸ்தலரான பவுலைப்போல தெளிவோடு வாழ்வோம்.
சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)
🦋 Meditation verse - ரோமர் 6 : 7 / Romans 6:7
" ஆதவன் " தியானம் - 1951 2026 ஜூன் 11, வியாழன் "மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே." ...
-
- சகோ. எம்.ஜியோ பிரகாஷ் ஒ ரு முறை திரளான மக்கள் கூடி வந்திருந்தபோது இயேசு கிறிஸ்து அவர்களுக்குப் பல அறிவுரைகளைக் க...
-
'ஆதவன்' 💚நவம்பர் 29 , 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,391 "மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீ...
-
கர்த்தருக்குக் காணிக்கை - எம்.ஜியோ பிரகாஷ் கர்த்தருக்குக் காணிக்கை என்கின்ற இந்த நூல் 2005 ம் ஆண்டு சகோ. ஜியோ பிரகாஷ் ...
-
நம்மை விசாரிக்கிற தேவன் ! சகோ. எம். ஜியோ பிரகாஷ் ந மது தேவன் நம்மை விசாரிக்கி...
-
சிலுவையைப் பற்றிய உபதேசம் தேவ பெலனா அல்லது பைத்தியமா ? சகோ. டி . ஜான் ஜெயசீலன் இயேசு கிறிஸ்துவின் ரெகோபோத் ஊழியங்கள் சாத்த...
-
வேதாகமத் தியானம் - எண்:- 1,397 'ஆதவன்' 💚டிசம்பர் 05 , 2024. 💚வியாழக்கிழமை "சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்...
-
ஆவி, ஆத்துமா, சரீரம் - எது ஆவிக்குரிய வாழ்வு? - சகோ. எம். ஜியோ பிரகாஷ் தே வன் மனிதனை ஆவி, ஆத்துமா, சரீரம் எனும் மூன்று கூறுள்ளவனா...
-
வேதாகமத் தியானம் - எண்:- 1,573 'ஆதவன்' 💚மே 29 , 2025. 💚 வியாழக்கிழமை "நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோல...
-
சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் சகோ . எம் . ஜியோ பிரகாஷ் (இக்கட்டுரை சகோதரரால் எழுதப்பட்டு 'ஆதவன்' செப்டம்பர் 2013 இதழில் பி...
-
வேதாகமத் தியானம் - எண்:- 1,413 'ஆதவன்' 💚டிசம்பர் 21 , 2024. 💚சனிக்கிழமை "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக...
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpg)

.jpg)

.jpeg)
.jpeg)



