'ஆதவன்' வேதாகமத் தியானம் - எண்:- 1,040 டிசம்பர் 03, 2023 ஞாயிற்றுக்கிழமை
"தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்." ( ஏசாயா 44 : 3 )
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதன் மதிப்புத் தெரிந்து அதனை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும் எனும் ஆர்வம் உள்ளவனுக்குத்தான் அந்தப்பொருள் கிடைக்கும்போது மகிழ்ச்சியும் சமாதானமும் ஏற்படும். பாலைவனத்தில் அலைந்து திரிபவனுக்குத்தான் தண்ணீரின் மேலான மதிப்பும் நிழலின் அருமையும் புரியும். "நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்" என்று ஒரு பழமொழி உண்டு.
இதுபோலவே தேவனை அறியவேண்டும் எனும் ஆர்வமும் தாகமும் ஒருவனுக்கு இருக்கவேண்டியது அவசியம். பல்வேறு மதங்கள் உலகினில் இருக்கின்றன. இவற்றில் எது சரி என்று அறியவேண்டுமெனும் ஆர்வம் நமக்கு வேண்டுமல்லவா? நமது முன்னோர்கள் சொல்லிக்கொடுத்ததால் எந்தச் சொந்த அனுபவமும் இன்றி அவர்கள் கூறியதையே நம்பிச் சில சடங்குகளைச் செய்து நாம் தேவனை அறிய முடியாது. நாம் தேவனை வாழ்வில் தனிப்பட்டமுறையில் அறியவேண்டியது அவசியம். யானையைப் பார்த்தக் குருடர்களைப்போல அல்ல; மாறாக கண்கள் திறக்கப்பட்ட மனிதர்களாக தேவனை வாழ்வில் அறியவேண்டும்.
இப்படித் தேவனை அறியும் தாகம் நமக்கு இருக்குமானால் "தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்;" என்று வசனம் கூறுவதன்படி ஆவியானவர் நம்மேல் ஊற்றப்பட்டு நாம் தேவனை வாழ்வில் அறியமுடியும். மட்டுமல்ல, அப்படித் தேவனை அறியும்போது "உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்." என்கின்றார் கர்த்தர். ஆம், நாம் தேவனை அறிவது நமது சந்ததியினரும் அவரை அறிந்து ஆசீர்வாதம்பெற வழிச்செய்யும்.
வாழ்க்கையில் எந்த நம்பிக்கையுமின்றி பயத்துடனே வாழும் நம்பிக்கையற்ற மக்களுக்குத் தேவன் இன்றைய வசனத்தின் முந்தைய வசனத்தில் கூறுகின்றார், "உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணை செய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே." ( ஏசாயா 44 : 2 )
நான்தான் உன்னை உண்டாக்கினேன், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கியவரும் நான்தான். எனவே பயப்படாதே. இன்று உள்ளதுபோன்ற நிலைமை உனக்குத் தொடருவதில்லை. நீ என்னை அறியும் ஆர்வத்தைமட்டும் கொண்டு என்னைத் தேடினால் போதும் என்கின்றார் கர்த்தர்.
அன்பானவர்களே, கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கிறிஸ்துவைத் தனிப்பட்ட முறையில் அறியாதவாகவே வாழ்ந்துவந்தேன். சிறு வயதில் பக்திகாரியங்களில் ஈடுபட்டு பக்தி அமைப்புகளிலும் உறுப்பினராக இருந்தேன். ஆனால் கல்லூரிப் படிப்புக்குப்பின் எனது வாழ்க்கை மாறியது. எந்த கடவுள் அனுபவமும் இல்லாமல் செய்யும் சடங்குகள் எனக்கு வெறுப்பையும் கடவுள் இல்லை எனும் உணர்வினையும் தரவே தீவிர இடதுசாரி நூல்களை வாசித்து, பயிற்சிகள் பெற்று தேவனைவிட்டுத் தூரமானேன்.
வாழ்வில் சிக்கல்கள் வந்தபோதுதான் நண்பர் ஒருவரின் போதனையால் அவரைத் தேடும் உணர்வு வந்தது. "தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்" எனும் வசனம் எனது வாழ்வில் மெய்யானது. கடினமான வனாந்தர வாழ்க்கையாக இருந்த என்வாழ்வில் "உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்துவந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமல் இரு" ( உபாகமம் 8 : 16 ) என்று என்னோடுப்பேசி எனது தாய் தகப்பன் கிறிஸ்தவர்களாக இருந்தும் அவர்கள் அறியாத பல ஆவிக்குரிய காரியங்களை நான் அறியும்படி தேவன்கிருபை செய்தார்.
அந்த அனுபவத்துடன் கூறுகின்றேன், அன்பானவர்களே, சடங்குகள் பாரம்பரியங்களைவிட்டுத் தேவனை வாழ்வில் அறியவேண்டும் எனும் ஆர்வத்தில் தேடுங்கள். நிச்சயமாக தாகமுள்ள வறண்ட நமது இருதயத்தை அவர் தண்ணீரால் நிரப்புவார்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்
HIM THAT IS THIRSTY
‘AATHAVAN' BIBLE MEDITATION No: - 1,040 Sunday, December 03,
2023
"For
I will pour water upon him that is thirsty, and floods upon the dry ground: I
will pour my spirit upon thy seed, and my blessing upon thine offspring:"
(Isaiah 44: 3)
No matter what the object
is, the one who knows its value and is interested in getting it, gets happiness
and peace when that object is obtained. Only a wanderer in the desert
understands the supreme value of water and the pleasant value shade. There is a
proverb that says, "The beauty of the shade is seen in the sun."
Similarly, one must have the
desire and thirst to know God. There are many different religions in the world.
Aren't we curious to know which of these is correct? We cannot know God by
performing certain rituals and believing in what our forefathers have told us
without any personal experience. We need to know God personally in life. Not
like the blind who saw the elephant; Instead, we should know God in life as
people whose eyes are opened.
If we thirst to know God
like this, “I will pour water upon him that is thirsty, and
floods upon the dry ground” says the Lord. As the verse says, the
Spirit is poured out on us and we can know God in life. Not only that, but when
you know God like that, "I will pour my spirit on your offspring and my
blessing on your offspring." says the Lord. Yes, our knowing God will lead
our descendants to know Him and be blessed.
God says in the previous
verse of today's verse to the unbelieving people who live in fear without any
hope, "Thus
saith the LORD that made thee, and formed thee from the womb, which will help
thee; Fear not, O Jacob, my servant; and thou, Jesurun, whom I have
chosen." (Isaiah 44: 2)
I am the one who made you,
and I am the one who created you in the mother's womb. So don't be afraid. The
situation as it is today will not continue for you. It is enough if you seek Me
with only the curiosity to know Me, says the Lord.
Beloved, I was born in a
Christian family but lived without knowing Christ personally. I was involved in
devotional activities at a young age and was a member of devotional
organizations. But after college education my life changed. Rituals performed
without any experience of God gave me hatred and the feeling that there is no
God, so I read extreme leftist books, received trainings and distanced myself
from God.
It was only when problems
came in my life, that the teaching of a friend made me seek God. The verse
"I will pour water on the thirsty and rivers on the dry ground" has
come true in my life. My life was a difficult life like the wilderness. God comforted
me with the verses, do not forget the Lord your God "Who
fed thee in the wilderness with manna, which thy fathers knew not...” (Deuteronomy
8: 16) Yes, even though my parents were Christians, God gave me the
grace to know many spiritual things that they did not know in their life.
I say with that experience,
dear ones, leave the rituals and traditions and seek to know God in life. Surely,
He will fill our thirsty and dry hearts with water.
God’s Message:- ✍️ Bro. M. Geo Prakash