Saturday, December 07, 2024

Christian Verses for Meditation - James 2:19 / யாக்கோபு 2: 19

வேதாகமத் தியானம் - எண்:- 1,404

'ஆதவன்' 💚டிசம்பர் 12, 2024. 💚வியாழக்கிழமை


"தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன." ( யாக்கோபு 2: 19)

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் நாம் விசுவாசம் கொண்டுள்ளோம். அப்படி விசுவாசிப்பதால்தான் நாம் கிறிஸ்தவர்கள் என்று நம்மைக் கூறிக்கொள்கின்றோம்.  ஆனால் இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலராகிய யாக்கோபு அது போதாது என்று கூறுகின்றார். காரணம், பிசாசுகளும் தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கின்றன என்கிறார். எனவே,  நமது விசுவாசம் பிசாசுகளின் விசுவாசத்தைவிட மேலானதாக இருக்கவேண்டியது அவசியம் என்கின்றார் அவர். 

பிசாசுகள்  தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசித்தாலும் அவற்றின் செயல்பாடுகள் அவலட்சணமானவை. இயேசு யூதர்களிடம் பேசும்போது கூறினார், "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்." ( யோவான் 8: 44)

அதாவது பிசாசு மனுஷ கொலைபாதகன், பொய்யன் என்று கூறுகின்றார் இயேசு. ஆனால் இந்தப் பிசாசுகள் தேவன் ஒருவர் உண்டு என்பதை விசுவாசிக்கின்றன. இப்படி நாம் இருக்கக்கூடாது, கர்த்தர்மேல் நமக்குள்ள விசுவாசத்தை நாம் நமது செயல்களினால் உறுதிப்படுத்தவேண்டும் என்கின்றார். வெறுமனே நாம் தேவனை விசுவாசத்தால் மட்டும் போதாது நமது செயல்கள் அவரை நாம் விசுவாசிப்பதை உறுதிப்படுத்துபவனவாக இருக்கவேண்டும். பிசாசின் செயல்பாடுகளாக இருக்கக்கூடாது.  எனவே,  "வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுடாமோ? நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?" ( யாக்கோபு 2: 20, 21) என்கின்றார். 

அதாவது ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார்  மட்டுமல்ல, தனது மகன் இறந்தாலும் அவனைத்  தான் விசுவாசிக்கும் தேவன் உயிரோடு எழுப்ப வல்லவர் என்று உறுதியாக நம்பினார்.  "ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாகுத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்." ( எபிரெயர் 11 : 18, 19 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம், "விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே." ( யாக்கோபு 2: 22) இது நமக்கு உதாரணமாக வேதம் கூறியுள்ள சம்பவம். நாமும் தேவனை விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொண்டால் போதாது, நமது வாழ்வின் இக்கட்டான நிலைகளிலும் நமது உறுதியான செயல்பாடுகளால் நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தவேண்டும். 

பிரச்சனைகள், துன்பங்கள், வியாதிகள் நம்மைத் தொடரும்போது தேவன்மேல் நாம் கொண்டுள்ள விசுவாசத்தில் உறுதியாக இருப்போம். வெறுமனே தேவனை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டு இருப்பதைவிட அந்த விசுவாசத்தை உறுதிப்படுத்தும் செயல்களை செய்யும்போதுதான்  தேவன்மேல் நாம் கொண்டுள்ள நமது விசுவாசம் பிசாசுகளின் விசுவாசத்தைவிட மேலானதாக இருக்கும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

Scripture Meditation - No: 1,404

AATHAVAN 💚 December 12, 2024 💚 Thursday

"Thou believest that there is one God; thou doest well: the devils also believe, and tremble." (James 2:19)

We believe in our Lord Jesus Christ, and this belief is what identifies us as Christians. However, in today’s scripture meditation, Apostle James reminds us that mere belief is insufficient. He notes that even the devils believe in God and tremble. Therefore, he urges that our faith must surpass the kind of belief held by devils.

The devils believe in God’s existence, but their actions are inherently wicked. Jesus Himself said to the Jews: "Ye are of your father the devil, and the lusts of your father ye will do. He was a murderer from the beginning, and abode not in the truth, because there is no truth in him. When he speaketh a lie, he speaketh of his own: for he is a liar, and the father of it." (John 8:44)

Jesus describes the devil as a murderer and a liar. Yet, these devils still acknowledge the existence of God. James instructs us not to follow their example; instead, we must affirm our faith through our deeds. It is not enough to merely believe in God; our actions must demonstrate the authenticity of our faith.

James emphasizes: "But wilt thou know, O vain man, that faith without works is dead? Was not Abraham our father justified by works, when he had offered Isaac his son upon the altar?" (James 2:20–21)

Abraham is a prime example of faith combined with works. He not only believed in God but was willing to sacrifice his son Isaac, fully trusting that God had the power to raise him from the dead. As the Scripture says: "Of whom it was said, That in Isaac shall thy seed be called: Accounting that God was able to raise him up, even from the dead; from whence also he received him in a figure." (Hebrews 11:18–19)

James concludes: "Seest thou how faith wrought with his works, and by works was faith made perfect?" (James 2:22)

This example serves as a powerful reminder. Merely professing faith in God is insufficient. We must confirm our faith through steadfast actions, especially in life’s challenging circumstances.

When we face trials, hardships, or illnesses, we should remain unwavering in our faith. It is not enough to simply say, "I believe in God." Instead, we must demonstrate our faith through actions that reflect our trust in Him. Only then will our faith rise above the faith of devils.

Devotional Message: Bro. M. Geo Prakash   

No comments: