தேவன் உலகத்திலுள்ள அனைவரையும் நேசிக்கிறார். நல்லவர்கள், கெட்டவர்கள், துன்மார்க்கர்கள் எல்லோரையும் நேசிக்கிறார். அதாவது அவர் பாவத்தை வெறுக்கிறார்; பாவிகளையோ நேசிக்கிறார். எனவே பாவத்தில் வாழும் மனிதர்கள் தங்களது பாவ வழிகளிலிருந்து மனம்திரும்ப அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறார். இன்றைய வசனத்துக்கு இணையாக, "நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்' ( எசேக்கியேல் 33: 11) என்றும் தேவன் கூறுவதையும் நாம் வேதாகமத்தில் வாசிக்கலாம்.
இயேசு கிறிஸ்து பாவிகளை மன்னித்து ஏற்றுக்கொண்டதை நாம் புதிய ஏற்பாட்டு நூலில் அதிக இடங்களில் வாசிக்கின்றோம். பாவிகளை தேவன் மன்னிப்பது குறித்து அவர் கூறிய கெட்ட குமாரன் உவமை மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது. அந்த உவமையை கூறுமுன் அவர் கூறுகின்றார், "மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 15: 7)
பாவம் மனிதனைக் கொல்லுகின்றது. மனம் திரும்பும்போதோ மனிதன் உயிரடைகின்றான். இதனையே அவர் அந்த உவமையின் இறுதியில் கூறுகின்றார், "உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்." ( லுூக்கா 15: 32)
ஆம் அன்பானவர்களே, சிறிய பாவமோ பெரிய பாவமோ தேவனுக்கு எதிராக அது இருப்பதால் நம்மை அது தேவனைவிட்டுப் பிரிக்கின்றது. ஆனாலும் அவர் தனது கிருபையால் மனிதர்கள் மனம் திரும்பி தன்னிடம் வரவேண்டுமென்று விரும்புகின்றார். இன்று புனிதர்களாக போற்றப்படுபவர்கள் மனம் திரும்பிய பாவிகள்தான். நாம் யாருமே பரிசுத்தவான்களல்ல. பாவங்களை தேவன் மன்னிப்பதால்தான் நாம் அவர்முன் நிற்கமுடிகின்றது. ஆம், "அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்." ( சங்கீதம் 103: 10)
மேலும், "மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்." ( சங்கீதம் 103: 12) என்று நாம் வாசிக்கின்றோம். நம்மில் யாரும் கெட்டு அழிந்துபோவதை தேவன் விரும்பவில்லை.
இயேசு கிறிஸ்து பூமியில் வந்த நோக்கமே நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காகத்தான். எனவே அன்பானவர்களே, நமது பாவங்களை எண்ணிக் கலங்கி தேவனைவிட்டு நாம் தூரப்போய்விடவேண்டாம். நம் தேவனிடம் இரக்கங்கள் உண்டு. எந்தப் பாவம் நம்மிடம் இருந்தாலும் அவரிடம் அறிக்கையிட்டு அவரது இரத்தத்தால் கழுவப்படும்படி மன்றாடுவோம். அவரே நம்மைக் கழுவி தந்து மகனாக மகளாக ஏற்றுக்கொள்வார். "...................அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." (1 யோவான் 1 : 7)
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
AATHAVAN 💚 December 17, 2024 💚
Tuesday
"Have I any pleasure at
all that the wicked should die? saith the Lord GOD: and not that he should
return from his ways, and live?" (Ezekiel 18:23, KJV)
God loves everyone in this
world—good people, sinners, and even the wicked. Although He hates sin, He
loves sinners. Therefore, He provides an opportunity for those living in sin to
turn away from their sinful paths and repent. In alignment with today's verse,
we also read in the Bible: "As I live, saith the Lord GOD, I have no
pleasure in the death of the wicked; but that the wicked turn from his way and
live: turn ye, turn ye from your evil ways; for why will ye die, O house of
Israel?" (Ezekiel 33:11, KJV).
In the New Testament, we
frequently see how Jesus Christ forgave and accepted sinners. The parable of
the Prodigal Son is a perfect example of God’s forgiveness. Before sharing this
parable, Jesus said: "I say unto you, that likewise joy shall be in heaven
over one sinner that repenteth, more than over ninety and nine just persons,
which need no repentance." (Luke 15:7, KJV).
Sin leads to death, but
repentance brings life. Jesus highlights this truth at the conclusion of the
parable, saying: "For this thy brother was dead, and is alive again; and
was lost, and is found." (Luke 15:32, KJV).
Yes, dear ones, whether it is
a small or great sin, it separates us from God. Yet, by His grace, God desires
that all people repent and return to Him. Even the saints we revere today were
once sinners who repented. None of us are inherently holy. It is only through
God’s forgiveness that we can stand before Him. As the Bible declares: "He
hath not dealt with us after our sins; nor rewarded us according to our
iniquities." (Psalm 103:10, KJV).
Furthermore, the Bible
reassures us: "As far as the east is from the west, so far hath he removed
our transgressions from us." (Psalm 103:12, KJV). God does not wish for
anyone to perish or be destroyed.
Jesus Christ came to earth
with the purpose of saving us from sin. Therefore, beloved, let us not dwell on
our sins and distance ourselves from God in guilt and shame. Our God is
merciful. Whatever sin may burden us, let us confess it to Him and seek to be
cleansed by His precious blood. He will wash us and accept us as His sons and
daughters. As it is written: "The blood of Jesus Christ his Son cleanseth
us from all sin." (1 John 1:7, KJV).
Message by: Brother
M. Geo Prakash
No comments:
Post a Comment