Sunday, December 08, 2024

Christian Verses for Meditation - Meditation - Psalm 42:11 / சங்கீதம் 42: 11

வேதாகமத் தியானம் - எண்:- 1,405

'ஆதவன்' 💚டிசம்பர் 13, 2024. 💚வெள்ளிக்கிழமை


"என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்." ( சங்கீதம் 42: 11)

துன்பங்கள் சோதனைகள் வரும்போது நாமே நமக்கு தைரியமான வார்த்தைகளைக் கூறிக்கொள்ளவேண்டும். நமது ஆத்துமாவுக்கு அது பெலனைத் தருகின்றது. தாவீது ராஜா இந்த அனுபவத்தில் இருந்ததால் பல்வேறு இக்கட்டான வேளைகளில் நம்பிக்கை இழக்காமல் இருந்தார். இப்படித் தனது ஆத்துமாவுக்குத் தானே ஆறுதல் கூறுவதை அவர் சங்கீதமாக எழுதிவைத்தார்.  

ஆம் அன்பானவர்களே, நமது ஆத்துமாவில் சோர்வு ஏற்படும்போது நாமும் தாவீதைப்போல நமக்குள் பேசவேண்டும். என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன் என்று  கூறப் பழகவேண்டும். ஏனெனில்,  "சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்." ( ஏசாயா 40: 29) என்று வேதம் கூறுகின்றது. 

தாவீது தனது ஆத்துமாவுக்குச் சொல்வதுபோல நமக்கு கலக்கங்கள் ஏற்படும்போது நாம் தேவனை நோக்கி அமர்ந்திருந்து காத்திருக்கவேண்டியது அவசியம். காரணம் அவர்மேல் நாம் கொள்ளும் விசுவாசம் நம்மை வெட்கப்படுத்திடச் செய்யாது. "நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்." ( யூதா 1: 20, 21) என்று வாசிக்கின்றோம். 

தாவீதின் வாழ்க்கை போராட்டம் நிறைந்த வாழ்க்கையாக இருந்தாலும் அவர் தனது ஆத்துமாவோடு பேசித் தானே தன்னைத் தேவனுக்குள் திடப்படுத்திக்கொண்டார். எனவே மகிழ்ச்சியுடன்  "என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்". என்று கூறுகின்றார்,

இந்த உலகத்தில் நமக்கு பலர் ஆறுதல் சொல்ல இருந்தாலும் அவர்கள் எப்போதும் நம்மோடு இருப்பதில்லை. ஒரு சில மணி நேரங்கள் அல்லது ஒருசில நாட்கள் நம்மோடு இருந்து நமக்கு ஆறுதலான வார்த்தைகளைக் கூறலாம், உதவிகள் செய்யலாம். ஆனால் நமது ஆத்துமாவுக்கு நிரந்தரமாக ஆறுதல் தரக்கூடியவர் தேவன் ஒருவரே. எனவே இத்தகைய துன்பநேரங்களில் நாம் அவரை நோக்கிக் காத்திருந்து துதிக்கவேண்டியது  அவசியம். 

துன்பங்கள் பிரச்சனைகள் கலக்கங்கள் வரும்போது நாமும் நமது ஆத்துமாவுக்குக் கூறுவோம், "என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு" என்று. அவரே நமக்கு ஆறுதலும் தேறுதலும் தந்து உறுதிப்படுத்துவார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

Scripture Meditation - No: 1,405    

AATHAVAN Date: December 13, 2024 | Friday

"Why art thou cast down, O my soul? And why art thou disquieted within me? Hope thou in God: for I shall yet praise him, who is the health of my countenance, and my God." (Psalm 42:11, KJV)

When trials and tribulations come, we must speak words of courage to ourselves. These words strengthen our souls. King David, having gone through such experiences, did not lose hope even during critical moments. He wrote this psalm as an encouragement to his own soul.

Yes, dear ones, when we feel weary in our souls, we too must speak to ourselves like David did. Let us learn to say, “Why art thou cast down, O my soul? And why art thou disquieted within me? Hope thou in God: for I shall yet praise him, who is the health of my countenance, and my God.”

The Bible declares, "He giveth power to the faint; and to them that have no might he increaseth strength." (Isaiah 40:29, KJV).

Just as David spoke to his soul, we must also sit before God and wait on Him when faced with turmoil. Our faith in Him will never put us to shame. "But ye, beloved, building up yourselves on your most holy faith, praying in the Holy Ghost, keep yourselves in the love of God, looking for the mercy of our Lord Jesus Christ unto eternal life." (Jude 1:20-21, KJV).

Although David’s life was filled with battles, he fortified himself in God by speaking to his soul. Hence, he declared joyfully, "for I shall yet praise him, who is the health of my countenance, and my God."

In this world, though many may comfort us, they are not always by our side. They may spend a few hours or days offering soothing words or assistance. But the only one who can provide permanent comfort to our soul is God. Therefore, during times of distress, we must look to Him and praise Him.

When troubles, problems, and anxieties arise, let us also speak to our souls: “Why art thou cast down, O my soul? And why art thou disquieted within me? Hope thou in God.” He will comfort, heal, and strengthen us.

Devotional Message by: Brother M. Geo Prakash

No comments: