வேதாகமத் தியானம் - எண்:- 1,412
'ஆதவன்' 💚டிசம்பர் 20, 2024. 💚வெள்ளிக்கிழமை
"கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; " ( கொலோசெயர் 3: 16)
இன்றைய தியான வசனம் நாம் கிறிஸ்துவின் வசனத்தில் தேறினவர்களாக இருக்கவேண்டியதன் அவசியத்தை விளக்குகின்றது. இன்றைய தியான வசனம் வெறுமனே, "கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே வாசமாயிருப்பதாக" என்று கூறாமல், "சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக" என்று கூறுகின்றது.
நாம் வேதாகமம் மூலம் வேத வசனங்களை வாசிப்பது மட்டும்போதாது அந்த வசனங்களை அவை கூறும் சரியான பொருள் உணர்ந்து பூரணமாக நாம் அறிந்தவர்களாகவும் அதன்படி வாழ்பவர்களாகவும் இருக்கவேண்டும். அதாவது அவரது வசனம் நமக்குள் நிலைத்திருக்கவேண்டும். "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." ( யோவான் 15: 7) என்று கூறவில்லையா?
மேலும், நாம் தேவனுடைய வசனத்தில் தேறினவர்களாக இருந்தால் மட்டுமே மற்றவர்களுக்கு தேவனைப்பற்றி தெளிவாக அறிவிக்கவும் நம்மிடம் விளக்கங்களைக் கேட்பவர்களுக்கு ஏற்ற பதிலையும் கொடுக்க முடியும். எனவேதான் அப்போஸ்தலராகிய பவுல், "அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக." ( கொலோசெயர் 4: 6) என்று நமக்கு அறிவுறுத்துகின்றார்.
தேவனுடைய வசனங்களுக்குச் சரியான விளக்கங்கள் நமக்குக் கிடைக்கவேண்டுமானால் நாம் பரிசுத்த ஆவியானவரின் விளக்கத்தைப் பெறுவதற்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும். காரணம், வேத வசனங்கள் ஆவியானவரால் அருளப்பட்டவை. அவரே அவற்றுக்கான சரியான பொருளை நமக்குக் கொடுக்க முடியும். இப்படி ஆவியானவரின் துணையோடு வேத வசனங்களை நாம் அறியும்போதுதான் அது நமக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாகவும் செயல்படும்.
ஒரே தேவ வார்த்தை பல்வேறு சமயங்களில் பல்வேறு வித உணர்த்துதல்களை நமக்குத் தருவதற்கு வல்லமையுள்ளது. எனவேதான் வேத வார்த்தைகள் உயிருள்ளவையாக இருக்கின்றன. சுமார் நாலாயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த பரிசுத்தவான்களுக்குக் கூறப்பட்ட வார்த்தைகள் இன்றும் நமக்கு வழிகாட்டுவனவாக நமக்கு இக்கட்டான நேரங்களில் ஆறுதல் கூறுவனவாக உள்ளதை நாம் பலவேளைகளில் உணரலாம். அந்த ஜீவனுள்ள வார்த்தைகளே நமது ஆத்துமாவை உயிர்ப்பிக்கின்றது. "உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்." ( சங்கீதம் 119: 92, 93)
ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் வசனம் நமக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக இருக்குமானால் எந்த எதிர்மறையான சூழலும் நம்மைப் பாதிக்காது. நாமும் சங்கீத ஆசிரியர் கூறுவதுபோல "நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்." என அறிக்கையிட்டு வாழ்பவர்களாக இருப்போம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Bible Meditation - Number: 1,412
AATHAVAN 💚December
20, 2024, 💚Friday
"Let the word of Christ
dwell in you richly in all wisdom." (Colossians 3:16)
The verse for today's
meditation emphasizes the necessity of being rooted in the Word of Christ. It
doesn’t simply say, "Let the word of Christ dwell in you," but
adds the significant phrase, "richly in all wisdom."
Reading Scripture is not
enough; we must also understand its intended meaning and allow it to transform
us fully. This means the Word must remain in us consistently. As Jesus said, "If
ye abide in me, and my words abide in you, ye shall ask what ye will, and it
shall be done unto you." (John 15:7)
Only when we are grounded in
God's Word can we clearly proclaim Him to others and answer those who seek
explanations about our faith. This is why Apostle Paul advises, "Let
your speech be alway with grace, seasoned with salt, that ye may know how ye
ought to answer every man." (Colossians 4:6)
To gain a correct
understanding of God’s Word, we must prioritize receiving enlightenment from
the Holy Spirit, as He alone can reveal the true meaning of Scripture. The
Bible, being God-inspired, works powerfully when studied under the guidance of
the Spirit.
God's Word has the ability to
provide different insights at different times, relevant to our circumstances.
That’s why the Word of God is described as living and active. Words spoken to
saints thousands of years ago still comfort and guide us today. The living Word
revives our souls. As the Psalmist says:
"Unless thy law had been
my delights, I should then have perished in mine affliction. I will never
forget thy precepts: for with them thou hast quickened me."
(Psalm 119:92-93)
Yes, dear believers, when the
Word of Christ dwells in us richly in all wisdom, no adverse situation can harm
us. Like the Psalmist, we too will declare: "I will never forget thy
precepts: for with them thou hast quickened me."
Message from: Bro. M.
Geo Prakash
No comments:
Post a Comment