Thursday, December 05, 2024

Bible Verses - மத்தேயு 4: 9 / Matthew 4:9

 வேதாகமத் தியானம் - எண்:- 1,402                           'ஆதவன்' டிசம்பர் 10, 2024. 💚செவ்வாய்க்கிழமை


"நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்" ( மத்தேயு 4: 9)

இந்த உலகம் தேவனால் படைக்கப்பட்டது என்றாலும் அது அலகை அல்லது சாத்தானின் கைவசமும் அதன் அதிகாரத்தின்கீழும் உள்ளது. வேதாகமத்தில் சாத்தானுக்கு  "பொல்லாங்கன்" (மத்தேயு 13:19, எபேசியர் 6:16 மற்றும் 1 யோவான் 5:18, 1 யோவான் 5:19) என்றும் "உலகத்தின் அதிபதி" என்றும் (யோவான் 12:31, யோவான் 14:30, யோவான் 16:11 மற்றும் ) பெயர்கள்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

உலகம் சாத்தானின் கையில் இருப்பதை, "நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்." (1 யோவான்  5 : 19) என்றும் கூறப்பட்டுள்ளது. உலகம் அவனது கையில் இருப்பதால் அவன் இயேசு கிறிஸ்துவிடம் வந்து, "நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்"

சாத்தான் இயேசு கிறிஸ்துவிடம் நேரடியாகக் கூறிய வார்த்தைகளை இன்றும் அவன் விசுவாசிகள் ஒவ்வொருவரிடமும் பலவழிகளில் கூறிக்கொண்டிருக்கின்றான்.   உனக்குப் பதவி வேண்டுமா? அரசியல் செல்வாக்கு வேண்டுமா?, அதிக அளவு பணமும் சொத்து சுகங்களும் வேண்டுமா? என்னைப் பணிந்துகொள் என்கின்றான்.  சாத்தானைப் பணிந்துகொள்வது என்பது சாத்தான் விரும்பும் தவறான வழிகளில் இவைகளை அடைய முயல்வதைக் குறிக்கின்றது. விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் பலரும் சாத்தானின் தந்திரத்துக்குப் பலியாகிக்கொண்டிருக்கின்றனர். 

பலரும் கிறிஸ்தவ ஆலய ஆராதனைகளில் பங்கெடுக்கின்றனர், ஜெபக் கூட்டங்களில் பங்கெடுத்து ஆலயங்களுக்கு அதிக பொருளுதவிகள் செய்கின்றனர். ஆனால் உலக வாழ்க்கையிலோ சாத்தானுக்கு ஊழியம் செய்துகொண்டிருக்கின்றனர். இப்படிக்  குறுக்கு வழிகளில் அதிகம் சம்பாதித்துவிட்டு "கர்த்தர் என்னை ஆசீர்வதித்துள்ளார்" என்கின்றனர். 

அன்பானவர்களே, கிறிஸ்து காட்டிய வழிகளைவிட்டு நாம் பணத்துக்காகவும், பதவிக்காகவும்,  புகழுக்காகவும், சொத்துசுகங்கள் சேர்ப்பதற்காகவும் தவறான காரியங்களில் ஈடுபடும்போது நாம் சாத்தானை வழிபடுகின்றவர்கள் ஆகின்றோம். இப்படிச் சாத்தானை வழிபடும்போது "என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்" என்று அவன் இயேசு கிறிஸ்துவிடம் கூறியதுபோல அவனை வழிபடும் அனைவருக்கும் கொடுக்கின்றான். 

குறுக்கு வழி, தவறான வழி என்று தெரியும்போது யார் நம்மைத் தூண்டினாலும் நாமும் இயேசு கிறிஸ்து கூறியதுபோல, "அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே." ( மத்தேயு 4: 10) என்று கூறிக்கொண்டு விலகிவிடுவோமானால் தேவன் நம்மை வேறு விதங்களில் ஆசீர்வதிப்பார். "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்." ( நீதிமொழிகள் 10 : 22 )

வேதனை இல்லாத ஆசீர்வாதம் பெற்று அனுபவிக்க கர்த்தரை மட்டுமே ஆராதிப்பவர்களாக வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                      

Scripture Meditation - No: 1,402                                                                              AATHAVAN💚 December 10, 2024 💚 Tuesday

"All these things will I give thee, if thou wilt fall down and worship me." (Matthew 4:9)

Even though this world was created by God, it is currently under the sway of Satan, who is referred to in the Bible as "the wicked one" (Matthew 13:19; Ephesians 6:16; 1 John 5:18–19) and "the prince of this world" (John 12:31; John 14:30; John 16:11).

The world being under Satan's influence is further highlighted in the verse: "And we know that we are of God, and the whole world lieth in wickedness." (1 John 5:19)

Since the world is in his grasp, Satan approached Jesus Christ and said: "All these things will I give thee, if thou wilt fall down and worship me."

The same words Satan directly spoke to Jesus, he still whispers today in various ways to believers: "Do you want power? Political influence? Great wealth and material comforts? Worship me." Worshiping Satan means seeking these things through unrighteous ways that align with his desires. Sadly, many who claim to be believers fall prey to Satan's deception.

Many participate in church services, prayer meetings, and generously support church activities, yet in their worldly lives, they serve Satan. Some amass wealth through dishonest means and claim, "The Lord has blessed me."

Beloved, when we stray from the path shown by Christ and engage in sinful acts for the sake of money, power, fame, or material possessions, we are essentially worshiping Satan. Just as Satan promised Jesus, "All these things will I give thee," he offers similar rewards to those who worship him.

However, when we recognize a path as crooked or sinful, let us respond as Jesus did: "Get thee hence, Satan: for it is written, Thou shalt worship the Lord thy God, and him only shalt thou serve." (Matthew 4:10)

By rejecting Satan’s temptations, God will bless us in ways far beyond what we could achieve through unrighteous means. As the Bible reminds us: "The blessing of the LORD, it maketh rich, and he addeth no sorrow with it." (Proverbs 10:22)

Let us live as people who worship God alone, so that we may receive and enjoy His blessings without sorrow.

Devotional Message by: Bro. M. Geo Prakash

No comments: