Tuesday, December 03, 2024

Bible Verses - ஏசாயா 64: 6 / Isaiah 64:6

 வேதாகமத் தியானம் - எண்:- 1,400

'ஆதவன்' டிசம்பர் 08, 2024. 💚ஞாயிற்றுக்கிழமை


"நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது." ( ஏசாயா 64: 6)

எல்லா மதங்களும் நீதியுள்ள வாழ்க்கையைத்தான் போதிக்கின்றன. அதுபோல பல்வேறு அறிஞர்கள் நீதிகளை போதித்துள்ளார். தமிழில் மற்ற மொழிகளைவிட நீதிநூல்கள் அதிகம் உள்ளன. ஆனால் இவையெல்லாம் மனித நீதிகள் அல்லது மனிதர்கள் போதித்த நீதிகள். இவை சிறப்பானவைகளாக இருந்தாலும் தேவனது பார்வையில் இவை அழுக்கான கந்தையைப்போல இருக்கின்றது என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

மேலும், இந்த மனித நீதிகளைப் பின்பற்றி வாழ்வதால் நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது இந்த மனித நீதிகளால்  நம்மை அக்கிரமங்களுக்கு முற்றிலும் நீங்கலாக்க முடியவில்லை. இவை நியாயப்பிரமாண கட்டளைகளைப்போல இருக்கின்றன. 

ஆனால் வேதாகமம் நமக்கு கிறிஸ்து இயேசுவின்மேல் கொள்ளும் விசுவாசத்தையே மேலானதாகக் கூறுகின்றது. அப்படி அவர்மேல்கொள்ளும் விசுவாசம் அவரை விசுவாசிப்பவர்கள் அனைவர்மேலும் பலிக்கும். "அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை." ( ரோமர் 3: 22)

மனிதர்கள் தங்கள் மனதும் அறிஞர்களும் கூறியுள்ள நீதிகளை பற்றிக்கொண்டு தேவ நீதியை புறம்பே தள்ளிவிடுகின்றனர். எனவே அவர்கள் தேவ நீதிக்குக் கீழ்படியாமலிருக்கிறார்கள். "எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்." ( ரோமர் 10: 3) 

இன்று பெரும்பாலான நீதிமன்றங்கள் இத்தகைய சுய நீதியின் அடிப்படையிலேயே மக்களுக்குத் தீர்ப்பளிக்கின்றன. எனவேதான் ஒரு நீதிபதி கொடுக்கும் தண்டனையை மேல் நீதிமன்றத்தில் முறையிடும்போது அடுத்த நீதிபதி மாற்றி தீர்ப்பு எழுதுகின்றார்.  ஆம், மனித நீதி மனிதன், மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மனிதர்களது முகத்தையும் பணத்தையும் பார்த்து மாறுபடுகின்றது.  

இப்படி இருப்பதால், "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது." ஆனால் தேவனது நீதி எதார்த்தமானது அவர் கண் கண்டபடியும் காது கேட்டபடியும் தீர்ப்பிடமாட்டார். 

".................அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்." ( ஏசாயா 11: 3, 4)

கந்தையான மனித நீதிகளைவிட்டு கிறிஸ்துவின் மேல் கொள்ளும் விசுவாசத்துடன் ஏற்படும் தேவ நீதிக்கு நேராக நாம் திரும்பவேண்டியது அவசியம். தேவ நீதி எதார்த்தமானது. தேவ நீதிக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது நமது அக்கிரமங்கள் நம்மைக்  காற்றைப்போல் அடித்துக்கொண்டு போகாது.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                

Scripture Meditation No. 1,400

AATHAVAN - December 8, 2024 (Sunday)

"But we are all as an unclean thing, and all our righteousnesses  are as filthy rags; and we all do fade as a leaf, and our iniquities, like the wind, have taken us away." (Isaiah 64:6, KJV)

All religions advocate for a righteous life, and many philosophers have taught principles of righteousness. Tamil literature, in particular, boasts an abundance of ethical writings compared to other languages. However, these are human righteousnesses - man-made principles. As valuable as they might seem, today's scripture reminds us that in God's sight, these are like filthy rags.

Furthermore, by following these human principles, "we all do fade as a leaf, and our iniquities, like the wind, have taken us away," as the verse declares. In other words, these human codes cannot fully free us from sin and iniquity. They are like the Law, which cannot lead to salvation.

The Bible, however, proclaims that faith in Christ Jesus is superior. Faith in Him applies to all who believe: "Even the righteousness of God which is by faith of Jesus Christ unto all and upon all them that believe: for there is no difference." (Romans 3:22, KJV)

Unfortunately, many reject God's righteousness, clinging instead to human teachings and philosophies. As the Bible says: "For they being ignorant of God's righteousness, and going about to establish their own righteousness, have not submitted themselves unto the righteousness of God." (Romans 10:3, KJV)

Today, even our judicial systems are often rooted in human righteousness. A judge's verdict can be overruled by another in a higher court, revealing the fallibility of human justice. It changes based on appearances, biases, or wealth.

Because of this, Isaiah's declaration rings true: "But we are all as an unclean thing, and all our righteousnesses are as filthy rags; and we all do fade as a leaf, and our iniquities, like the wind, have taken us away."

Unlike human righteousness, God's righteousness is impartial and perfect. God does not judge by appearances or hearsay: "And shall make him of quick understanding in the fear of the LORD: and he shall not judge after the sight of his eyes, neither reprove after the hearing of his ears: But with righteousness shall he judge the poor, and reprove with equity for the meek of the earth: and he shall smite the earth with the rod of his mouth, and with the breath of his lips shall he slay the wicked." (Isaiah 11:3-4, KJV)

We must turn away from the flawed and inconsistent righteousness of humans and embrace the righteousness of God through faith in Christ. Only then can we stand firm, unshaken by the winds of iniquity.

Gospel Message by - Brother M. Geo Prakash

No comments: