Tuesday, May 06, 2014
Inspirational Easter Quotes
Inspirational Easter Quotes
Easter brings us close to our family and friends, giving us another
reason to celebrate the joy and pleasure of unison. Observed throughout the
globe by the Christian community, Easter is welcomed with immense vigor,
grandeur and magnificence. People do not miss any chance to be together with
friends and relatives. Hence, parties and gifts form the main source of
celebrations on Easter. While presenting gifts, you can add a touch of
inspiration by including some inspirational quotes that would motivate the recipient
to think greatly about the significance of Easter. Given here are some
inspirational quotations and sayings that will help you move beyond your sins
and look forward for salvation.
- Easter says you can put truth in a grave, but
it won’t stay there. - Clarence W. Hall
- Easter is a time to rejoice, be thankful, be
assured that all is forgiven so life extends beyond the soil of earth. -
Byron Pulsifer
- The great gift of Easter is hope – Christian
hope which makes us have that confidence in God, in his ultimate triumph,
and in his goodness and love, which nothing can shake. - Basil C. Hume
- Prejudices subsist in people's imagination
long after they have been destroyed by their experience. - Ernest Dimnet
- Easter is the demonstration of God that life
is essentially spiritual and timeless. - Charles M. Crowe
- On Easter Day, the veil between time and
eternity thins to gossamer. - Douglas Horton
- But from this earth, this grave, this dust, My
God shall raise me up, I trust. - Walter Raleigh
- You give but little when you give of your
possessions. It is when you give of yourself that you truly give. - Kahlil
Gibran
- We live and die; Christ died and lived! - John
Stott
- The resurrection gives my life meaning and
direction and the opportunity to start over no matter what my
circumstances. - Robert Flatt
- Life is a great big canvas, and you should
throw all the paint on it you can. - Danny Kaye
- Think like a man of action, act like a man of
thought. - Henri Louis Bergson
- God loved the birds and invented trees. Man
loved the birds and invented cages. - Jacques Deval
- True silence is the rest of the mind, and is
to the spirit what sleep is to the body, nourishment and refreshment. -
William Penn
- Earth's saddest day and gladdest day were just
three days apart! - Susan Coolidge
- The joyful news that He is risen does not
change the contemporary world. Still before us lie work, discipline,
sacrifice. But the fact of Easter gives us the spiritual power to do the
work, accept the discipline, and make the sacrifice. - Henry Knox Sherrill
- Those have a short Lent, who owes money to be
paid at Easter. - Benjamin Franklin
Monday, February 10, 2014
மெய்யான கிறிஸ்துமஸ்
மெய்யான கிறிஸ்துமஸ்
(இக்கட்டுரை "ஆதவன்" டிசம்பர் 2013 இதழில் பிரசுரமானது)
- எம். ஜியோ பிரகாஷ்
பொய்யும் , கபடமும், ஏமாற்றும் நிறைந்த உலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இன்று ஆவிக்குரியவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும்கூட உலக மனிதர்களது போக்கிலேயே சென்றுகொண்டிருக்கின்றனர். ஜெபம், வழிபாடு, ஜெபக்கூட்டங்கள், காணி க்கையளிதல் போன்ற செயல்பாடுகள் இருந்தாலும் ஆவிக்குரியவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரிடமும் ஆவிக்குரிய நற்குனங்களி ல்லை.
"எல்லோரும் இப்படிதானே வாழ்கிறார்கள்?" எனத் தங்களை நியாயபடுதுவோ ரும், "வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளபடி எவரும் உலகில் வாழமுடியாது" எனக் கூறும் பலரும் உலகப் பிரகாரமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டேத் தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்றும் கூரிக்கொள்கின்றனர்.
இதனைப் பற்றிய ஒருத் தெளிவை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் பெற வேண்டியது இன்றையச் சூழ்நிலையில் அவசியமாகிறது.
"எல்லோரும் இப்படித்தான் வாழ்கிறார்கள்" என்றுக் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனெனில் மனிதர்கள் பலரும் தங்களைக்கொண்டே மற்றவர்களையும் அளவிடுகின்ற்றனர். காமாலைக் கண்ணனுக்குக் கண்ணுக்குக் காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும்.
விபசார எண்ணமும் செயல்பாடுகளும் உள்ளவனுக்கு எல்லோரும் தன்னைப்போல விபச்சாரம் செய்வதாகவும், ஏமாற்றும், புரட்டும், லஞ்சமும் பித்தலாட்டமும் செய்பவனுக்கு எல்லோரும் அதுபோலச் செய்வதாக்கவும்தான் தெரியும். ஆனால் இது ஒரு மாய எண்ணமே.
இதுபோலவே பலரும் வேதத்தில் கூறியுள்ளபடி யாரும் வாழ முடியாது எனக் கூறுகின்றனர். தேவன் தனது பிள்ளைகளுக்கு வாழ முடியாத ஒரு வழியைக் காட்டுவாரா என அவர்கள் எண்ணிப்பாரப்பதில்லை.
தனது ஒரு வயதுக் குழந்தையை எந்தத் தகப்பனும் ஆறு இட்லிகளைத் தின்ன வற்புறுதமாட்டான். அல்லது ஒரு மூன்று வயதுக் குழந்தையிடம் தெரு நல்லியில்போய் ஒரு குடம் தண்ணீர் எடுத்துவரச் சொல்லமாட்டான். தனது குழந்தையால் எதைச் செய்ய முடியும் என்றும் எதைச் செய்ய முடியாது என்றும் ஒரு உலகத் தகப்பனுக்கேத் தெரியும்போது பரமத் தகபனுக்குத் தனது குழந்தையின் சக்தி என்னவென்று தெரியாமலிருக்குமா? .
ஒருமுறை ஒரு பிரசங்கியாரே இப்படி பிரசங்கிக்கக் கேட்டேன்.. "இயேசு கிறிஸ்து தேவ குமாரன், எனவே அவர் பரிசுத்தமாய் வாழ்ந்தார். நாம் சாதாரண மனிதர்கள் எனவே அவரைப்போல வாழ முடியாது"
இயேசு கிறிஸ்துக் கூறினார், " பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தம் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" (அப்போஸ்தலர் -1:8)
பரிசுத்த ஆவி நம்மில் வரும்போது இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் சாட்சிகளாக வாழ முடியும் என்பதால்தான் இயேசுக் கிறிஸ்து இப்படிக் கூறினார்.
இயேசுக் கிறிஸ்துவின் வசனங்களை விசுவாசிப்போமெனில், அந்த வார்த்தைகள் உண்மையுளளவை என்று . ஏற்றுக் கொள்வோமெனில் சாட்சியுள்ள ஒரு வாழ்க்கை வாழ நம்மால் முடியும்.
பழைய ஏறபாட்டுப பரிசுத்தவான்கள் தவிர புதிய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களை எண்ணிப் பாருங்கள். இவர்களால் ஒரு பரிசுத்தமுள்ள சாட்சியுள்ள வாழ்க்கை வாழ முடிந்ததென்றால் ஏன் நம்மால் அப்படி வாழ முடியாது?
எனவே, இத்தகைய எண்ணங்களும் போதனைகளும் மாயையே. இப்படிப் "பொய்யான மாயையைப் பின்பற்றிக் கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்" (யோனா - 2:8). தேவனது வார்த்தைகளை ஏற்க மறுப்பது பொய்யான மாயையைப் பின்பற்றுவதுதான். இது தேவ கிருபையை நாம் இழக்கச் செய்கிறது.
அப்போஸ்தலரான பவுல் அடிகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராகச் செயல்பட்டு அந்த விசுவாசத்தைப் பின்பற்றுகிறவர்களை உலகத்திலிருந்து அழிக்கும் எண்ணம்கொண்டு அலைந்தவர். ஆனால் அததகையக் கொலைவெறி கொண் டப் பவுலைத் தேவன் சாந்த குணமுள்ளவராக மாற்றினார். இயேசு கிறிஸ்துவின் குணநலன்களைக் கொண்டவராக மாற்றினார். எனவேதான் அவர், "எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது:" (1 கொரிந்தியர் 2:16) என்று கூறுகிறார். மேலும், "நான் கிறிஸ்துவைப் பின் பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்" (1 கொரிந்தியர் 11:1) என்று நமக்கும் வழி காட்டுகிறார்.
பவுலை இத்தகையக் குணமுள்ளவராக மாற்றிய தேவன் நம்மை ஏன் மாற்ற முடியாது? தேவன் மனிதர்களுக்குள் வேற்றுமை பாராட்டுவதில்லையே?
யூதர்களால் கல்லெறியுண்டு மரணமடையும் வேளையிலும் இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலித்து, இயேசு கிறிஸ்து சிலுவை மரணமடையும்போது தன்னைச் சிலுவையில் அறையும்போது தன்னைச சிலுவையில் அறைந்த யூதர்களை மன்னிக்க பிதாவிடம் பரிந்து பேசி ஜெபித்ததைப்பொல பரிசுத்த ஸ்தேவானால் ஜெபிக்க முடிந்தது. "ஆண்டவரே, இவர்கள் மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும்" (அப் - 7:60) என்பது கிறிஸ்துவைப் பிரதிபலித்த வாழ்க்கைதானே ?
இயேசு கிறிஸ்துவைபபோல வாழ உண்மையான மன விருப்பம்கொண்டு வாழவோமெனில் தேவனது பரிசுத்த ஆவியினால் அது நமக்கு சாத்தியமாகும்.
இன்று பிரசங்கி மார்களும் பல ஊழியர்களும், விசுவாசிகளும் தேவன் நோயைக் குணமாக்குவார் என்று விசுவாசிக்கின்றனர்; பேயை ஓட்டுவார் என்று விசுவாசிக்கின்றனர்; அற்புத அதிசயங்களை தேவன் செய்வார் என்று விசுவாசிக்கின்றனர்; ஆனால் அவரைப்போல பரிசுத்தமாய் வாழ உதவி செய்வார் என்பதை மட்டும் விசுவசிக்க மறுக்கின்றனர்.
இதற்கு மூல காரணம் இயேசு கிறிஸ்துவின் போதனையைப் பின்பற்ற வேண்டுமானால் பொருளாதார இழப்பைச சந்திக்க வேண்டியிருக்கும் எனும் எண்ணமே. தங்கள் மனம் இந்தப் பொருளாதார இழப்பை ஏற்றுக்கொள்ளது யென்பதால் பலரும் ஏசுக் கிறிஸ்துவின் போதனையின்படி வாழ முடியாது என்று தங்களைத தாங்களே நியாயப் படுத்திக்கொள்கின்றனர்.
இயேசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி அற்புத அதிசயங்கள் நடந்ததாகக் காண்பித்தால் அதிகக் கூட்டமும் காணிக்கையும் சேர்கிறது. அவரைப்போல வாழ்வதால் பெரிதாக என்ன கிடைத்துவிடும் எனும் எண்ணமே இத்தகைய மனிதர்களின் ஆழ்மனதில் நிலைகொண்டுள்ளது.
ஒரு ஐ. ஏ. எஸ் அதிகாரி தனது பிள்ளைத தன்னைப்போல ஒரு .ஐ. ஏ. எஸ் அதிகாரியாக வேண்டுமென விரும்புகிறார். ஒரு மருத்துவர் தனது பிள்ளை மருத்துவராக வேண்டுமென விரும்புகிறார். ஏன் ஒரு சாதாரண வேலை செய்யும் மனிதன் கூடத் தனது பிள்ளை மேலான ஒரு உயரநத பதவியை அடைய வேண்டுமென விரும்புகிறார். இயேசு கிறிஸ்துவின் மன விருப்பமும் இதுதான்
அவர் பிதாவோடு இணைந்திருந்ததைபபோல நாமும் இணைந்திருக்க வேண்டுமென்று இயேசு கிறிஸ்து விரும்புகிறார். " நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாம் நம்மில் ஒன்றாய் இருக்கவும் வேண்டிக்கொள்கிறேன்" (யோவான் - 17:21) என்று பிதாவிடம் நமக்காக விண்ணப்பம் செய்தார்.
இயேசு கிறிஸ்துவின் ஜெபத்தில் நமக்கு விசுவாசம் இருக்குமானால் நம்மையும் அவர் தன்னைப்போல பரிசுத்தம் பண்ணுவார் என்பதையும் விசுவாசிக்க முடியும். இயேசு கிறிஸ்துவைப்போல வாழ உண்மையான மன விருப்பம்கொண்டு அதனை வாஞ்சித்து வாழ்வொமெனில் தேவனது பரிசுத்த ஆவியினால் அது நமக்கு சாத்தியமாகும்.
தேவனது வல்லமையென்பது நோயைக் குனமக்குவதிலும் பேயை ஓட்டுவதிலும் அற்புத அதிசயங்களைச செய்வதிலும் வெளிப்படுவதில்லை. ஏனெனில் இயேசு கிறிஸ்துவை விசுவாசியாதவர்களும் இவற்றைச செய்ய முடியும். பார்வோன்முன் நின்ற மந்திரவாதிகளும் மோசே மூலமாக கர்த்தர் செய்த அதிசயங்களுக்கு இணையான அதிசயங்களை முதலில் செய்தனர்.(யாத்திராகமம் - 7)
எனவே மெய்யான வல்லமை எனபது நமது உள்ளான மனிதனில் பெரிய மாற்றத்தை அடைவதும் அதன் மூலம் இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்வு வாழ்வதுமேயாகும். இத்தகைய ஒரு சாட்சி வாழ்வை கிறிஸ்துவை விசுவாசியாதவர்கள், பரிசுத்த ஆவியில் பங்கில்லதவர்கள் வாழ முடியாது.
சோதனைகள், துன்பங்கள், வேதனைகள் அனைவருக்கும் பொதுவான விஷயங்கள். இயேசு கிறிஸ்துவைப் போன்ற சாட்சி வாழ்க்கை வாழ விரும்புவோருக்கு இவை சவாலாக இருக்கும். ஆனால் கிறிஸ்து இத்தகைய துன்பங்களைக் கடந்தேச் சென்றார்.. " எல்லா விதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற பிரதான் ஆசாரியன்" (எபிரெயர் - 4:15) இயேசு கிறிஸ்து நமக்கு முன்மாதிரிகை. இயேசு கிறிஸ்துவிடம் இந்த வல்லமையையே முதன் முதலில் கேட்போம். இத்தகைய சாட்சி வாழ்வுக்கு வழி காட்டவும் உதவிடவுமே வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லவரான தேவன் இயேசு கிறிஸ்துவாக இந்த பூமியில் அவதரித்தார்.
இந்த கிறிஸ்துமஸ் நாளில் இத்தகைய ஒரு வாழ்வுக்கு நம்மை தேவனது பரிசுத்தக் கரத்தில் ஒப்புவிப்போம். இதுவே கிறிஸ்து நம் உள்ளத்தில் பிறக்கும் மெய்யான கிறிஸ்துமஸாக இருக்கும்.
இயேசு கிறிஸ்துவைபபோல வாழ உண்மையான மன விருப்பம்கொண்டு வாழவோமெனில் தேவனது பரிசுத்த ஆவியினால் அது நமக்கு சாத்தியமாகும்.
இன்று பிரசங்கி மார்களும் பல ஊழியர்களும், விசுவாசிகளும் தேவன் நோயைக் குணமாக்குவார் என்று விசுவாசிக்கின்றனர்; பேயை ஓட்டுவார் என்று விசுவாசிக்கின்றனர்; அற்புத அதிசயங்களை தேவன் செய்வார் என்று விசுவாசிக்கின்றனர்; ஆனால் அவரைப்போல பரிசுத்தமாய் வாழ உதவி செய்வார் என்பதை மட்டும் விசுவசிக்க மறுக்கின்றனர்.
இதற்கு மூல காரணம் இயேசு கிறிஸ்துவின் போதனையைப் பின்பற்ற வேண்டுமானால் பொருளாதார இழப்பைச சந்திக்க வேண்டியிருக்கும் எனும் எண்ணமே. தங்கள் மனம் இந்தப் பொருளாதார இழப்பை ஏற்றுக்கொள்ளது யென்பதால் பலரும் ஏசுக் கிறிஸ்துவின் போதனையின்படி வாழ முடியாது என்று தங்களைத தாங்களே நியாயப் படுத்திக்கொள்கின்றனர்.
இயேசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி அற்புத அதிசயங்கள் நடந்ததாகக் காண்பித்தால் அதிகக் கூட்டமும் காணிக்கையும் சேர்கிறது. அவரைப்போல வாழ்வதால் பெரிதாக என்ன கிடைத்துவிடும் எனும் எண்ணமே இத்தகைய மனிதர்களின் ஆழ்மனதில் நிலைகொண்டுள்ளது.
ஒரு ஐ. ஏ. எஸ் அதிகாரி தனது பிள்ளைத தன்னைப்போல ஒரு .ஐ. ஏ. எஸ் அதிகாரியாக வேண்டுமென விரும்புகிறார். ஒரு மருத்துவர் தனது பிள்ளை மருத்துவராக வேண்டுமென விரும்புகிறார். ஏன் ஒரு சாதாரண வேலை செய்யும் மனிதன் கூடத் தனது பிள்ளை மேலான ஒரு உயரநத பதவியை அடைய வேண்டுமென விரும்புகிறார். இயேசு கிறிஸ்துவின் மன விருப்பமும் இதுதான்
அவர் பிதாவோடு இணைந்திருந்ததைபபோல நாமும் இணைந்திருக்க வேண்டுமென்று இயேசு கிறிஸ்து விரும்புகிறார். " நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாம் நம்மில் ஒன்றாய் இருக்கவும் வேண்டிக்கொள்கிறேன்" (யோவான் - 17:21) என்று பிதாவிடம் நமக்காக விண்ணப்பம் செய்தார்.
இயேசு கிறிஸ்துவின் ஜெபத்தில் நமக்கு விசுவாசம் இருக்குமானால் நம்மையும் அவர் தன்னைப்போல பரிசுத்தம் பண்ணுவார் என்பதையும் விசுவாசிக்க முடியும். இயேசு கிறிஸ்துவைப்போல வாழ உண்மையான மன விருப்பம்கொண்டு அதனை வாஞ்சித்து வாழ்வொமெனில் தேவனது பரிசுத்த ஆவியினால் அது நமக்கு சாத்தியமாகும்.
தேவனது வல்லமையென்பது நோயைக் குனமக்குவதிலும் பேயை ஓட்டுவதிலும் அற்புத அதிசயங்களைச செய்வதிலும் வெளிப்படுவதில்லை. ஏனெனில் இயேசு கிறிஸ்துவை விசுவாசியாதவர்களும் இவற்றைச செய்ய முடியும். பார்வோன்முன் நின்ற மந்திரவாதிகளும் மோசே மூலமாக கர்த்தர் செய்த அதிசயங்களுக்கு இணையான அதிசயங்களை முதலில் செய்தனர்.(யாத்திராகமம் - 7)
எனவே மெய்யான வல்லமை எனபது நமது உள்ளான மனிதனில் பெரிய மாற்றத்தை அடைவதும் அதன் மூலம் இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்வு வாழ்வதுமேயாகும். இத்தகைய ஒரு சாட்சி வாழ்வை கிறிஸ்துவை விசுவாசியாதவர்கள், பரிசுத்த ஆவியில் பங்கில்லதவர்கள் வாழ முடியாது.
சோதனைகள், துன்பங்கள், வேதனைகள் அனைவருக்கும் பொதுவான விஷயங்கள். இயேசு கிறிஸ்துவைப் போன்ற சாட்சி வாழ்க்கை வாழ விரும்புவோருக்கு இவை சவாலாக இருக்கும். ஆனால் கிறிஸ்து இத்தகைய துன்பங்களைக் கடந்தேச் சென்றார்.. " எல்லா விதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற பிரதான் ஆசாரியன்" (எபிரெயர் - 4:15) இயேசு கிறிஸ்து நமக்கு முன்மாதிரிகை. இயேசு கிறிஸ்துவிடம் இந்த வல்லமையையே முதன் முதலில் கேட்போம். இத்தகைய சாட்சி வாழ்வுக்கு வழி காட்டவும் உதவிடவுமே வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லவரான தேவன் இயேசு கிறிஸ்துவாக இந்த பூமியில் அவதரித்தார்.
இந்த கிறிஸ்துமஸ் நாளில் இத்தகைய ஒரு வாழ்வுக்கு நம்மை தேவனது பரிசுத்தக் கரத்தில் ஒப்புவிப்போம். இதுவே கிறிஸ்து நம் உள்ளத்தில் பிறக்கும் மெய்யான கிறிஸ்துமஸாக இருக்கும்.
Thursday, January 02, 2014
மதுபானம் குடிக்கலாமா?
மதுபானம் குடிக்கலாமா?
பதில்: இதற்கான பதில் அனைவரும் அறிந்ததே.
கானாவூர் கலியாணத்தில் இயேசு செய்த முதல் அற்புதம் தண்ணீரை திராட்சரசமாக மாற்றியது. தண்ணீரை மதுபானமாக மாற்றவில்லை. ஆங்கிலத்தில் King James Version-ல் wine என்று மொழிபெயர்த்துள்ளதால் வந்த குழப்பங்கள்தான் இவை. கிரேக்க மொழியில் இங்கே oinos [οἶνος ] என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முழுக்க திராட்சை பழச்சாறு அதாவது PURE GRAPE JUICE என்றே பொருள்படும். YLT (Young Literal Translation) எனப்படும் மொழிபெயர்ப்பினை பார்க்கவும். தீமோத்தேயு என்பவர் தேவ ஊழியர் இவர் குடிக்க "தண்ணீர்மாத்திரம்" பயன்படுத்தி வைராக்கியமாக இருந்திருக்கிறார். மற்ற பானங்களை குடித்ததாக சொல்லப்படவில்லை.
ஆனால் தீமோத்தேயு சரீரத்தில் பலவீனமாக இருந்திருக்கிறார். எனவே பவுல் அக்கறைகொண்டவராக திராட்சைப்பழம் உடலுக்கு நல்லது என்ற யோசனையில் தீமோத்தேயுவுக்கு அப்படியாக சொல்கிறார். தீமோத்தேயுவுக்கு என்ன பலவீனம் என்று நமக்கு சொல்லப்படவில்லை. கிராமங்களில் "ஒரு ஆட்டுக்கால் சூப் வைத்து குடி" என்று சொல்வது போன்ற ஒரு யோசனையாக எடுத்துக்கொள்ளலாம்.
வேதாகமத்தில் இப்படியாக வாசிக்கிறோம்:
ஏசாயா 5:11 சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!
நீதி 23: 29. ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?
30. மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், [கலப்புள்ள] சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.நீதி 23: 20. மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே.
மதுபானம்(Wine) இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.இன்று உலக அளவில் "குடிப்பழக்கம் உடலுக்கு கேடு" என்று விளம்பரங்களே செய்யப்படுகின்றன.
"ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால் தேவன் அவனை அழிப்பார்(destroy). நீங்களே அந்த ஆலயம்" என்று வாசிக்கிறோமே. எனவே அன்புக்குரிய தேவனுடைய பிள்ளைகளே, நாம் வஞ்சிக்கப்படாதிருப்போமாக. உங்கள் சரீரம் தேவனுக்குச் சொந்தம். நீங்கள் கிரயத்துக்கு கொள்ளப்பட்டீர்களே (you were bought with a price). கிரயத்துக்கு கொள்ளப்பட்டவர்கள், கிரக்கத்திற்கு விலைபோகலாமா? நித்தியத்தை "சிறு துளி பேரிழப்பு" என்று தொலைக்காதிருப்போமாக. Wine மதுபானம் குடிக்காதீர்கள்.
கருவைக் கலைப்பது பாவமா?
கருவைக் கலைப்பது பாவமா?
ஆம் !
காரணங்கள் :-
[1] அது ஒரு கொலைக்குச் சமம் என்பதால்:
(உலக நாடுகளில்) சட்டத்தின்படி ஒருவர் ஒரு பெண்ணைக் கொலை செய்தால் அது ஒரு கொலையாகும். ஒரு கருவுற்ற பெண்ணைக் கொலைசெய்தால் நீதிமன்றத்தில் இரட்டைக்கொலை என்று தீர்ப்பு இன்றும் சொல்லப்படுகிறது. அப்படி என்றால் கருவை கலைப்பது சட்டப்படி கொலைதானே. இவர்கள் கருக்கலைப்பு தவறல்ல என்று வாதிடுவது எப்படி சரியாகும்? லூக்கா முதலாம் அதிகாரத்தில் எலிசபெத்து கர்ப்பமாயிருக்கும்போது அவள் வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று என்று வாசிக்கிறோம். அந்த குழந்தைக்கு உணர்வுகள் உண்டு. அதைக் கொல்வது கொலை.
[2] மனித உரிமையை மீறுகிறது. அந்த குழந்தை பிறக்கவிடாமல் தடுப்பது அந்த மனிதனுக்கு (குழந்தைக்கு) மதிப்பு இல்லை என்றும், என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என்றும் சொல்வதாக உள்ளது. இன்றைய விஞ்ஞானமே "தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கு தனிச்சுதந்திரம் கொடுக்கவேண்டும், அது பயப்படும்படி சண்டை பெற்றோர் சண்டைபோடாமல் இனிய சூழலில் தாய் இருக்கவேண்டும்" என்ற அளவுக்கு புத்தி சொல்லுகிறது. போகப்போக வயதானவர்களையும் நோயாளிகளையும் கொன்றாலும் தவறில்லை என்று ஒருநாள் ஒரு கூட்டத்தார் முடிவு செய்தால் எங்கே செல்லும் அந்தப் பாதை? அந்த நாடு தீங்கும் சாபமும் உள்ள நாடாகும் அல்லவா? அப்படி கருவைக்கலைக்க ஒத்துழைக்கும் நாடு அழிவை நோக்கி செல்கிறது என்பதில் ஐயம் வேண்டாம்.
[3] உங்களை ஒருவர் கையையும் காலையும் கட்டி ஒரு மூட்டையில் வைத்து ஒரு மிகச்சிறிய அறையில் அடைத்து பின்பு உங்களை இரத்தம் வடிய கொல்லுவது எப்படி சரியாகும்? உங்களுக்கு மற்றவர்கள் அப்படி செய்வதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதே! அதை ஒரு தாயின் வயிற்றிலுள்ள குழந்தைக்கு செய்வது எப்படி சரியாகும்? மத் 7:12 மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். எனவே கருக்கலைப்பு தேவனுடைய கற்பனையை மீறுதல் என்று ஆகின்றது
[4] கருக்கலைப்பு மீண்டும் மீண்டும் பாவம் செய்யத்தூண்டுகிறது. பிரசங்கி 8:11ல் "துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது." இது பொதுவாக எல்லாப்பாவங்களுக்கு சொன்னாலும், இதற்கும் பொருந்தும். எந்த தவறும் செய்யாதவர்களை கொல்லுவது தவறு என்றால் அந்த வயிற்றிலுள்ள சிசுவைக் கொல்வது எப்படி சரியாகும்?
[5] எல்லாம் சரிதான், ஆனால் திருமணத்துக்கு முன்பு கருவுற்றதை கலைப்பதில் பரவாயில்லை என்று சிலர் எண்ணலாம். நீங்கள் அங்கே முதலாவதாக வேசித்தனம் என்ற பாவம் நடந்ததை மறந்துவிட்டீர்களே! தாவீது மற்றவனின் மனைவியிடத்தில் பாவம் செய்தான். அங்கே ஒரு குழந்தை உண்டாகின்றது. இதை சரிசெய்ய தாவீது பத்சேபாளின் கணவனைக் கொன்று அவளை மனைவியாக்கிக்கொள்கிறான். பாவத்துக்குமேல் பாவம். தேவன் அவனிடம் ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு பேசிய போது அவன் சொல்கிறான்: "என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது." சங்கீத 51:3. ஒருமுறை கருக்கலைத்தவர்களைக் கேளுங்கள், நீங்கள் அடுத்தமுறை கலைப்பீர்களா? சற்றே யோசிக்காமல் செய்யலாம் என்பார்கள். அந்த மனசாட்சி நசுக்கப்பட்டுபோனதே. அங்கே ஒரு கெட்ட மாதிரி மற்றவர்களுக்கு வைக்கப்படுகின்றது. வருகிற தலைமுறைக்கு இப்படி ஒரு மாதிரியை வைப்பது தவறு.
[6] அப்படிப்பட்டவர்களிடம் அன்பு இல்லை என்று வெளிப்படையாகச் சொல்கிறது. அன்பு இல்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார். 2 தீமோ 3:1-3ல் கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும்,.. என்று வாசிக்கிறோம். இவர்களில் ஒருவர்தான் அவர்கள்.
[7] "ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய(innocent) இரத்தம் சிந்துங் கை." என்று வாசிக்கிறோமே இங்கே அந்த குழந்தை ஒன்றும் அறியாதது (innocent) , குற்றமற்றது. இந்த வசனத்தின்படி கருக்கலைப்பு தேவன் வெறுக்கும் செயலாக அமைகிறது. மேலும் அதைக்கலைக்கும் வேலையைச் செய்பவர்களும் (மருத்துவர்/செவிலியர் என்றும் சொல்லலாம்) சாபத்திற்கு ஆளாகிறார்கள் என்று உபாகமம் 27:25ல் வாசிக்கிறோம்: "குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்".
Monday, December 30, 2013
மற்றவர்களோடு இரட்சிப்பை பகிர்ந்துகொள்ளும்போது பயன்படுத்தவேண்டிய வசனங்கள்.
மற்றவர்களோடு இரட்சிப்பை பகிர்ந்துகொள்ளும்போது பயன்படுத்தவேண்டிய வசனங்கள்.
(The following are the verses that can be used while sharing the gospel of Salvation.
You may skip or quote more verses as you are led by the Holy Spirit for a given person.)
மாற்கு 8:36,37 (Mark 8:36,37)
36. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
37. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
லூக்கா 12:15 (Luke 12:15)
36. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
37. மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
லூக்கா 12:15 (Luke 12:15)
15. பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
ரோமர் 3:10-12,23 (Romans 3:10-12,23)
10. அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை;
11. உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
12. எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை
23. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
சங்கீதம் 53:1 (Psalms 53:1)
1. தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
மாற்கு 7:20-23 (Mark 7:20-23)
20. மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
21. எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,
22. களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், துாஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.
23. பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
கலாத்தியர் 5:19-21 (Galatians 5:19-21)
19. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
20. விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
21. பொறாமைகள், கொலைகள், வெறிகள்,களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவாகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
வெளிப்படுத்தல் 21:8 (Revelation 21:8)
21. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
சங்கீதம் 10:4 (Psalms 10:4)
4. துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.
யாத்திராகமம் 20:3-5 (Exodus 20:3-5)
3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழத் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
ஏசாயா 44:6,9-20 (Isaiah 44:6,9-20)
6. நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத் தவிரதேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
9. விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.
10. ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்?
11. இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள்;தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும், அவர்கள் ஏகமாய்த் திகைத்துவெட்கப்படுவார்கள்.
12. கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன்புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.
13. தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குக் குறிபோட்டு உளிகளினால் உருப்படுத்தி கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டி வைக்கிறான்.
14. அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருதமரத்தையாவது கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும்.
15. மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு உக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.
16. அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப்பொரித்து திருப்தியாகி குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி;
17. அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.
18. அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.
19. அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியானதுண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.
20. அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.
சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)
3. அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.
4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
5. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
6. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
7. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
8. இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்
ஏசாயா 59:1-4 (Isaiah 59:1-4)
1. இதோ, இரட்சிக்கக்கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை.
2. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
3. ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது, உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது.
4. நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள்.
நீதிமொழிகள் 28:13,9 (Proverbs 28:13,9)
13. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
9. வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
சங்கீதம் 32:1,2 (Psalms 32:1,2)
1. எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்.
2.எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
ரோமர் 6:23 (Romans 6:23)
23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.
யோவான் 17:3 (John 17:3)
3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
எசேக்கியேல் 18:23,32 (Ezek 18:23,32)
23. துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
32. மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
1 தீமோத்தேயு 1:15 (1 Timo 1:15)
15. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்.
1 கொரிந்தியர் 3:16,17 (1 Corinthians 3:16, 17)
16. நீங்கள் தேவனுடைய ஆலயமயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
17. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
எபிரெயர் 9:27 (Hebrews 9:27)
27. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
1 யோவான் 1:7-10 (1 John 1:7-10)
7. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
8. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
10. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
ஏசாயா 53:4-6 (Isaiah 53:4-6)
4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச்
சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே
போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.
யோவான் 3:16-18 (John 3:16-18)
16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
ரோமர் 5:8 (Romans 5:8)
8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
அப்போஸ்தலர் 17:30,31 (Acts 17:30,31)
30. அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
31. மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்
மத்தேயு 11:28 (Matt 11:28)
28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்.
வெளிப்படுத்தல் 3:20 (Rev 3:20)
20. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
யோவான் 10:9 (John 10:9)
9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
யோவான் 14:6 (John 14:6)
6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
அப்போஸ்தலர் 4:12 (Acts 4:12)
12. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுகுள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றா
1 தீமோத்தேயு 2:5 (1 Timothy 2:5)
5. தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
ஏசாயா 43:11 (Isaiah 43:11)
11. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
ரோமர் 10:9,10 (Romans 10:9,10)
9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.
அப்போஸ்தலர் 16:31 (Acts 16:31)
31. அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
யோவான் 1:12 (John 1:12)
12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
1 யோவான் 5:12,13 (1 John 5:12,13)
12. குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
13. உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், அவருடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவனுடைய குமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்
யோவான் 3:36 (John 3:36)
36. குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்
நீதிமொழிகள் 27:1 (Proverbs 27:1)
1. நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.
நீதிமொழிகள் 29:1 (Proverbs 29:1)
1. அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
நீதிமொழிகள் 1:23-33 (Proverbs 1:23-33)
23. என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
24. நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.
25. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
26. ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்.
27. நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கமும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.
28. அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.
29. அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.
30. என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்.
31. ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.
32. பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.
33. எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.
1 யோவான் 2:22 (1 John 2:22)
22. இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
1 யோவான் 4:3 (1 John 4:3)
3. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும்தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
வெளி 1:7,8 (Rev 1:7,8)
7. இதோ, மேகங்களுடனே வருகிறார்;கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.
8. இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமேகாவும் ஆதியும் அந்தமுமாயிக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
Subscribe to:
Posts (Atom)
சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)
🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 10 : 4, 5 / 1 Corinthians 10:4, 5
" ஆதவன் " தியானம் - 1993 ஜூலை 23 வியாழன் 2026 "எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச...
-
- சகோ. எம்.ஜியோ பிரகாஷ் ஒ ரு முறை திரளான மக்கள் கூடி வந்திருந்தபோது இயேசு கிறிஸ்து அவர்களுக்குப் பல அறிவுரைகளைக் க...
-
'ஆதவன்' 💚நவம்பர் 29 , 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,391 "மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீ...
-
கர்த்தருக்குக் காணிக்கை - எம்.ஜியோ பிரகாஷ் கர்த்தருக்குக் காணிக்கை என்கின்ற இந்த நூல் 2005 ம் ஆண்டு சகோ. ஜியோ பிரகாஷ் ...