"விதைகளின் உள்ளே" 🌳
"தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்."( யூதா 1 : 21 )
காத்திருக்கும் ஆவிக்குரிய அனுபவம் குறித்து இன்றைய தியான வசனம் கூறுகின்றது. ஆவிக்குரிய உன்னதமான ஒரு ஆலோசனையாக இன்றைய தியான வசனம், நாம் முதலில் தேவனுடைய அன்பைவிட்டு விலகிடாமல் நம்மைத் தற்காத்துக்கொண்டு கிறிஸ்துவின் இரகத்தைப் பெறுவதற்குக் காத்திருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றது. தேவனை ஆராதிப்பது என்பது வேறு, அவரது அன்பில் நம்மைக் காத்துக்கொள்வது என்பது வேறு. தேவனை யாரும் ஆராதிக்கலாம்; அவரைத் தனிப்பட்ட விதத்தில் அறியாதவர்களும் ஆராதிக்கலாம். ஆனால், அவரது அன்பில் நாம் நம்மில் நிலைத்திருந்தால் மட்டுமே நாம் மெய்யான கிறிஸ்தவர்கள்.
தேவனை ஆராதிப்பவர்கள் அனைவரும் அவரை உண்மையாக அன்பு செய்வதில்லை. காரணம், வேத வசனம் கூறுகின்றது, "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்" ( 1 யோவான் 5 : 3 ) தேவன் தன்னை ஒருவர் ஆராதிப்பதைவிட ஆராதிக்கும் மனிதனின் தனிப்பட்ட சுபாவ மாற்றத்தை அதிகம் விரும்புகின்றார்; அவரது வசனங்களுக்குக் கீழ்ப்படிந்து பொறுமையாக காத்திருந்து வாழும் வாழ்வை விரும்புகின்றார்.
இன்றைய தியான வசனத்தில், துன்பங்களை மேற்கொண்டு தேவ வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து தேவனுடைய அன்பிலே நம்மைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டும் என்கின்றார் அப்போஸ்தலரான யூதா. கிறிஸ்துவின் இரகத்தைப் பெறுவதற்குக் காத்திருக்கவேண்டும் என்பது, நாம் நம்மில் தேவ அன்புள்ளவர்களாய் பொறுமையாய் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்து வரவேண்டியதைக் குறிக்கின்றது.
அப்போஸ்தலரான பவுல், "ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்." ( ரோமர் 8 : 23 ) என்று கூறுகின்றார். அதாவது, தேவனுடைய புதல்வரும் புதல்வியருமாக மாறிட நாம் காத்திருந்து, ஆர்வமுடன் தவித்து இருக்கவேண்டும் என்று கூறுகின்றார். அதனையே அப்போஸ்தலரான யூதா இன்றைய தியான வசனத்தில், "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்" என்று கூறுகின்றார்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தனது சீடர்களிடம், "ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 5 ) எருசலேம் என்பது பரிசுத்த நகரம். உங்களது பரிசுத்தத்தை இழந்துவிடாமல் அதில் நிலைத்திருந்து காத்திருங்கள் என்றும் நாம் பொருள் கொள்ளலாம்.
"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்". (ஏசாயா 40:31) காத்திருந்து ஆவிக்குரிய பெலனை பெற்றுக்கொள்வோம். அப்போது நமது ஆவிக்குரிய ஓட்டம் சிறப்பானதாக, தேவனுக்கு ஏற்றதாக இருக்கும். சீடர்கள் காத்திருந்துதான் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றார்கள்; உலகம் எத்திசையிலும் சாட்சியாக விளங்கினார்கள்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
"Inside the Seeds" 🌳
Scripture Meditation No. 1639
AATHAVAN | Sunday, 03.08.2025
“Keep yourselves in the love of God, looking for the mercy of our Lord Jesus Christ unto eternal life.” — Jude 1:21 (KJV)
Today's meditation verse speaks about the spiritual experience of waiting. As a divine counsel, it first urges us to guard ourselves, not straying away from the love of God, and then to wait for the mercy of Christ that leads us to eternal life.
There’s a difference between worshipping God and keeping oneself in His love. Anyone can worship God—even those who don’t know Him personally. But only those who abide in His love are true Christians.
Not everyone who worships God truly loves Him. The Scripture says,
“For this is the love of God, that we keep his commandments: and his commandments are not grievous.” — 1 John 5:3 (KJV)
God desires not just our external worship, but our inward transformation. He longs for a life that submits patiently to His Word and lives in obedience.
In today’s verse, the apostle Jude exhorts believers to endure trials, obey the Word of God, and remain in His love—waiting to receive the mercy of our Lord Jesus Christ unto eternal life. To wait for Christ’s mercy means to live a life of patience, testimony, and divine love.
The apostle Paul also echoes this waiting: “And not only they, but ourselves also, which have the first fruits of the Spirit, even we ourselves groan within ourselves, waiting for the adoption, to wit, the redemption of our body.”— Romans 8:23 (KJV)
This speaks of a holy yearning—groaning inwardly with anticipation, waiting to be transformed into sons and daughters of God. This is the same longing Jude refers to in today’s verse: “Looking for the mercy of our Lord Jesus Christ unto eternal life.”
Our Lord Jesus Christ also instructed His disciples:
“But wait for the promise of the Father, which, saith he, ye have heard of me.” — Acts 1:4 (KJV)
Jesus told them not to depart from Jerusalem—a holy city. We may also interpret it as a call to remain in holiness, not losing our sanctification.
The Word says: “But they that wait upon the LORD shall renew their strength; they shall mount up with wings as eagles; they shall run, and not be weary; and they shall walk, and not faint.” — Isaiah 40:31 (KJV)
Let us wait to be strengthened spiritually. Then our spiritual journey will be fruitful and pleasing unto God. It was through waiting that the disciples received the Holy Spirit, and thereafter they became witnesses to the ends of the earth.
📖 Spiritual
Message by: Bro. M. Geo Prakash
.jpeg)
No comments:
Post a Comment