"விதைகளின் உள்ளே" 🌳
"ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளையத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்."( யாத்திராகமம் 33 : 11 )
மோசே ஆசரிப்புக் கூடாரத்துக்குள் நுழையும்போது தேவன் மேகத்தில் எழுந்தருளி மோசேயோடு முகமுகமாய்ப் பேசினார். ஒரு நண்பனுடன் பேசுவதுபோல தேவன் மோசேயுடன் பேசினார் என்று கூறப்பட்டுள்ளது. மோசே இப்படி தேவனுடன் பேசும்போது அங்கு அவர் அருகில் நின்றுகொண்டிருந்த யோசுவா அவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார்.
இப்படி நமக்கு ஒரு வாய்ப்பு இருக்குமானால் எப்படியிருக்கும் என எண்ணிப்பாருங்கள்; அந்த மகிமையான காட்சியை மனதில் எண்ணிப்பாருங்கள். நமது அருகில் இருக்கும் மனிதனிடம் தேவன் பேசுவதை நாம் கேட்டால் எப்படி இருக்கும்? யோசுவாவினால் இந்த அற்புதமான காட்சியை மறக்கமுடியவில்லை. மட்டுமல்ல, அதுபோன்ற அனுபவம் தனக்கும் வேண்டும் எனும் ஆர்வம் யோசுவாவுக்கு இருந்தது. எனவேதான் அந்த இடத்தைவிட்டு மோசே பாளையத்துக்குத் திரும்பியபின்பும் யோசுவாவிற்கு திரும்ப மனமில்லை. எனவே அவன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தார். அதாவது, யோசுவா மோசேயின் பணியாளனாக இருந்தாலும் மேலான தேவ நோக்கம் கொண்டவராக இருந்தார்; ஆவிக்குரிய வளர்ந்த ஒரு நிலையை அவர் விரும்பினார்.
ஆம் அன்பானவர்களே, இத்தகைய தேவனைவிட்டுப் பிரியாத மனநிலை நமக்கும் இருக்க வேண்டியது அவசியம். இப்படிச் சொல்வதால், நமக்குக் குடும்பம் இல்லையா என்று ஒருவேளை நீங்கள் எண்ணலாம். யோசுவாவுக்கும் குடும்பம் இருந்தது, மனைவி மக்கள் இருந்தனர். ஆனால், அவற்றைவிட யோசுவா தேவனோடு பொழுதைக்கழிப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். "நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" ( யோசுவா 24 : 15 ) என்று தான் மட்டுமல்ல, தனது குடும்பமும் கர்த்தரையே சேவிப்போம் என்று உறுதியுடன் கூறினார்.
யோசுவாவின் இந்த அர்ப்பணிப்பான ஊழியத்தைத் தேவன் கனம்பண்ணத் தவறவில்லை. எனவேதான் மோசேக்குப்பின் யோசுவாவைத் தெரிந்துகொண்டார். "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." ( யோசுவா 1 : 5 ) என்று வாக்களித்தார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
"Inside the Seeds" 🌳
Scripture Meditation No. 1638
AATHAVAN | Saturday, 02.08.2025
“And the Lord spake unto Moses face to face, as a man speaketh unto his friend. And he turned again into the camp: but his servant Joshua, the son of Nun, a young man, departed not out of the tabernacle.” (Exodus 33:11, KJV)
When Moses entered into the Tabernacle of the congregation, God descended in the cloud and spoke with him face to face. The Scripture says, “as a man speaketh unto his friend.” Joshua, the young servant of Moses, stood nearby, witnessing this glorious moment.
Imagine if we were given such an opportunity — to see God speaking directly to a man near us. Imagine that majestic sight! Joshua could never forget this glorious encounter. More than that, he had an inner longing to experience such a divine encounter himself. That’s why even after Moses returned to the camp, Joshua had no desire to leave. The verse says he “departed not out of the tabernacle.” Though he was merely a servant to Moses, Joshua had a higher spiritual aspiration. He desired a deeper spiritual experience.
Dear beloved, we too must have this undivided longing never to be separated from such a God. You might wonder — “Does that mean we should not have families?” Joshua also had a family — a wife and children. Yet, he prioritized spending time with God above all. That is why he boldly declared:
“But as for me and my house, we will serve the Lord.” (Joshua 24:15, KJV)
God did not overlook Joshua’s dedicated service. That’s why He chose Joshua to lead after Moses. God assured him:
“There shall not any man be able to stand before thee all the days of thy life: as I was with Moses, so I will be with thee: I will not fail thee, nor forsake thee.” (Joshua 1:5, KJV)
Furthermore, the Lord gave him the great responsibility of dividing the Promised Land to the Israelites, saying:
“Be strong and of a good courage: for unto this people shalt thou divide for an inheritance the land, which I sware unto their fathers to give them.” (Joshua 1:6, KJV)
Whether it is a small task or a great one, what is entrusted to us must be carried out faithfully and sincerely. More importantly, like Joshua, we must cling to God. Joshua never stood in jealousy asking, “Does God speak only with Moses?” Nor did he murmur. Instead, he longed for the same experience himself.
To grow and advance in our spiritual life, Joshua stands as a beautiful example. Let us seek the things that are above just as he did.
“If ye then be risen with Christ, seek those things which are above, where Christ sitteth on the right hand of God.” (Colossians 3:1, KJV)
Let us aim for the moon, and we might hit the stars!
Divine Message: Bro. M. Geo Prakash

No comments:
Post a Comment