"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1670 ஆதவன் 03.09.2025 புதன்
"கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிரகோபம் தணியாது: கடைசி நாட்களில் அதை உணர்ந்துகொள்வீர்கள்." ( எரேமியா 30 : 24 )
நம் ஒவ்வொருவரையும் குறித்து தேவன் ஒரு திட்டம் வைத்துள்ளார். நம் ஒவ்வொருவரையும் குறித்து மேலான எண்ணம் கொண்டுள்ளார். ஆனால் மனிதர்கள் தேவனது சித்தத்தை அறிவதில்லை, அதன்படி நடப்பதுமில்லை. நமது வாழ்வில் தேவனது கோபம் வெளிப்பட இதுவே காரணமாக இருக்கின்றது இதனையே, "கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிரகோபம் தணியாது" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது நாம் அவரது திட்டத்துக்கு நேராக வரும்வரை அவரது கோபம் நம்மேல் இருக்கும்.
இந்த உலகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக்குறித்து மேலான திட்டங்கள் வைத்து செயல்படுகின்றனர். அதற்காகத் தாங்கள் உழைக்கும் உழைப்பின் பணத்தைச் செலவிடுகின்றனர். லட்சக்கணக்கான பணத்தை பிள்ளைகளின் படிப்புக்காகச் செலவழித்தும் அந்தப் பிள்ளைகள் தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்து பெற்றோரின் எண்ணத்துக்கு முரணாக நடந்தால் அந்தப் பெற்றோருக்கு எத்தகைய மனவேதனையும் கோபமும் ஏற்படுமென்று எண்ணிப்பாருங்கள்!
இதுபோலவே நம்மைக்குறித்த தேவ திட்டத்துக்கு முரணாக நாம் நடக்கும்போது தேவன் கோபம் கொள்கின்றார். ஆனால் மனிதர்களாகிய நாம் பலவேளைகளில் துன்பங்கள் பலவற்றை அனுபவித்தபின்னர் நம்மைக் குறித்தத் தேவனது திட்டத்துக்கு நேராக வருகின்றோம். அப்போதுதான் தேவன் நம்மை ஏன் துன்பங்களுக்கு உள்ளாக்கினர் என்பதனை உணர்ந்து கொள்கின்றோம். இதனையே சங்கீத ஆசிரியர், "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." ( சங்கீதம் 119 : 71 ) என்று கூறுகின்றார்.
இன்றைய தியான வசனத்தில் இதனையே நாம், "கடைசி நாட்களில் அதை உணர்ந்துகொள்வீர்கள்." என்று வாசிக்கின்றோம். இது, பெற்றோரின் திட்டத்துக்கு எதிராகச் செயல்பட்ட பிள்ளைகள் தங்களது வாழ்வின் பல தோல்விகளுக்குப்பின் பெற்றோரின் நல்ல நோக்கத்தை உணர்ந்துகொள்வதைப்போல இருக்கின்றது. அப்போது அவர்கள், "எனது அப்பாவும் அம்மாவும் என்னிடம் கோபப்பட்டபோது நான் அவர்களுக்குச் செவிகொடாமல் இருந்தேன், இப்போது அவர்கள் கோபம் நியாயமானது என்பதனை உணர்கின்றேன்" என்று கூறுவார்கள். இதுபோலவே தேவனது கோபத்தின் காரணத்தை நாம் பின்னாட்களில் உணர்ந்துகொள்வோம்.
அன்பானவர்களே, எனவே நாம் முதலிலேயே நம்மைக்குறித்த தேவ சித்தத்தை உணர்ந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். அப்போஸ்தலராகிய பவுல் "இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்..." ( கொலோசெயர் 1 : 9 ) ஜெபிக்கின்றோம் என்று கொலோசெய சபையார் இப்படி தேவசித்தம் அறிந்தவர்களாக வாழ ஜெபிப்பதாகக் கூறுகின்றார்.
நாமும் நமது அன்றாட வாழ்வில், "தேவனே என்னைக்குறித்த தேவ சித்தத்தை எனக்கு காண்பியும், அதன்படி நான் வாழ எனக்கு உதவி செய்யும்" என்று வேண்டுதல் செய்வோம். "தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்." ( லுூக்கா 12 : 47 ) என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. நாம் ஏன் இன்னும் அடிக்கப்படவேண்டும்?
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
“Inside the Seeds” 🌳
Scripture Meditation No. 1670
AATHAVAN – Wednesday, 03.09.2025
“The fierce anger of
the Lord shall not return, until he have done it, and until he have performed
the intents of his heart: in the latter days ye shall consider it.” (Jeremiah
30:24 KJV)
God has a plan for
each one of us. He holds higher thoughts concerning our lives. But men do not
know His will, nor do they walk in it. This becomes the reason for God’s wrath
to be revealed in our lives. That is why today’s verse declares, “The fierce
anger of the Lord shall not return, until he have done it, and until he have
performed the intents of his heart.” Meaning, until we align ourselves with
His divine plan, His displeasure will rest upon us.
In this world,
parents make the best plans for their children, spending their hard-earned
money—even in lakhs—for their education and future. But when those children
live recklessly, against their parents’ hopes, what kind of grief and anger
fills the parents’ hearts?
In the same way, when
we live contrary to God’s plan, He is displeased. Yet, as humans, it is often
only after we have passed through many troubles that we come to align ourselves
with His divine plan. Then we understand why He allowed us to go through afflictions.
Thus, the Psalmist says: “It is good for me that I have been afflicted; that
I might learn thy statutes.” (Psalm 119:71 KJV)
Today’s verse also
confirms this when it says: “In the latter days ye shall consider it.”
This is like children who go against their parents’ counsel, and only after
many failures realize the goodness of their parents’ intentions. Then they
confess, “When my father and mother were angry with me, I did not listen, but
now I understand that their anger was just.” Likewise, only later do we realize
the reason behind God’s anger.
Dearly beloved, let
us learn to discern God’s will for our lives at the very beginning itself. The
Apostle Paul writes of his prayer: “For this cause we also, since the day we
heard it, do not cease to pray for you, and to desire that ye might be filled
with the knowledge of his will in all wisdom and spiritual understanding.”
(Colossians 1:9 KJV)
So, let our daily
prayer be: “Lord, reveal to me Your will concerning my life, and help me to
live according to it.” For Jesus Christ Himself warned: “And that servant,
which knew his lord's will, and prepared not himself, neither did according to
his will, shall be beaten with many stripes.” (Luke 12:47 KJV) Why should
we suffer more stripes?
God’s Message: – Bro. M.
Geo Prakash
.jpg)
No comments:
Post a Comment