DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, August 17, 2025

🦋 Meditation verse - யாக்கோபு 4 : 8 / James 4:8

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1655                                          ஆதவன் 19.08.2025 செவ்வாய்         


"தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்." ( யாக்கோபு 4 : 8 )

மகிமையின் தேவனானவர் அழையா விருந்தாளியாக எவரிடமும் வரும் அற்ப மனிதனல்ல. அவருக்கான மகிமையினை நாம் கொடுக்கும்போது மட்டுமே அவர் நம்மிடம் வருவார். அவருக்கு மகிமையைச் செலுத்துவது என்பது உலகத் தலைவர்களைப் புகழ்வதுபோல புகழ்வதல்ல, மாறாக அவருக்குப் பயந்து அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வது. இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் "உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்" என்று வாசிக்கின்றோம். 

அதாவது பாவக்கறைகள் முற்றிலும் நீங்கிட நாம் சுத்திகரிக்கப்படும்போது மட்டுமே அவர் நமக்குள் வந்து நம்மைச் சேர முடியும். இந்த உலகத்தில் வாழும் நாமே அசுத்தமான இடங்களில் வாழ விரும்புவதில்லை. நமது உறவினர்கள் சிலரது  வீடுகள் சுத்தமற்று, கழிவறைகள் நாம் பயன்படுத்த முடியாதபடி அருவெறுப்பான நிலையில் இருக்கும். ஆனால் அவர்களை நாம் பார்க்கச் செல்லும்போது அவர்கள் நம்மை அங்கு இரண்டுநாள் தங்கிச்செல்ல வற்புறுத்துவார்கள். அவர்கள் அன்பினால் அப்படி நம்மை அழைத்தாலும் அந்த வீடுகளின் சுகாதார நிலைமை நம்மை அங்கு தங்கிட  நமது மனதை அனுமதிக்காது. 

மனிதர்களாகிய நாமே இப்படியென்றால் பரிசுத்தரான தேவன் எப்படி அவலட்சணமான குணங்களுள்ள மனித இருதயத்தில் தங்க வருவார்? ஆம் பல மனிதர்கள் தேவனை அறிந்தும் அவர்களுக்குள் தேவன் வந்து மீட்பினைத் தர முடிவதில்லை. "அவர்கள் தேவனை அறிந்தும்,  அவரை  தேவனென்று  மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது." (ரோமர் 1:21) என்று வாசிக்கின்றோம். 

இங்கு அப்போஸ்தலரான பவுல், "அவர்கள்  அவரை  தேவனென்று  மகிமைப்படுத்தாமலும்" என்று கூறுவது கவனிக்கத்தக்கது. ஆம், நமது வாழ்க்கையால் அவரை நாம் மகிமைப்படுத்தவேண்டியது அவசியம். அவரை மகிமைப்படுத்துவது என்பது வெறும் ஆராதனை செய்வதல்ல, "உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்." என்று கூறியுள்ளபடி நம்மைப் பரிசுத்தமாக்குவது. எனவேதான் நமது பரிசுத்தத்துக்கு அழைப்பு விடுக்கின்றது இன்றைய தியான வசனம். 

நாம் நமது பாவங்களை கிறிஸ்துவிடம்  அறிக்கையிட்டு அவரது இரத்தத்தால் கழுவப்படும்போது தூய்மையடைகின்றோம். அவரை அறிந்திட நமது பாவங்களே தடையாக இருக்கின்றன. எனவே, நமது பாவங்கள் அவரால் மன்னிக்கப்படும்போது நாம் கர்த்தரோடு  இருப்போம் அவரும் நம்மோடும் இருப்பார். வெளி அடையாளங்களான சடங்குகள் நம்மைத் தேவனை அறியவோ அவரிடம் நாம் சென்று சேரவோ உதவாது. 

இப்படி நாம் வெறும் சடங்குகளை ஆசரிக்கும் மனிதர்களாக அல்லாமல் அவரை அறிந்து வாழ்ந்தால் மட்டுமே அவரோடு இருப்போம்; அவரும் நம்மோடு இருப்பார். நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு அவரைத் தேடினால் நமக்கு அவர் வெளிப்படுவார்.   "........சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார். (2 நாளாகமம் 15:2) நமது பாவக்கறைப்படிந்த கைகளை சுத்திகரித்து  இருதயத்தைப் பரிசுத்தமாக்கி அவரைத் தேடுவோம். அப்போது அவர் நமக்கு வெளிப்படுவார்.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                        

"Inside the Seeds" 🌳

Scripture Meditation No. 1655
AATHAVAN – Tuesday, 19.08.2025

"Draw nigh to God, and he will draw nigh to you. Cleanse your hands, ye sinners; and purify your hearts, ye double minded." (James 4:8)

The God of glory is not a lowly guest who comes uninvited to dwell with anyone. He comes to us only when we give Him the glory due unto His name. Giving glory to God is not like praising worldly leaders, but living a life of reverence and holiness before Him. Today’s verse reminds us: “Cleanse your hands, ye sinners; and purify your hearts, ye double minded.”

Only when the stains of sin are cleansed from us can God dwell within us. Even we humans do not wish to stay in unclean places. Sometimes, our relatives may live in homes that are unclean and unhygienic, with restrooms unfit for use. Though they may lovingly insist that we stay with them, our hearts do not permit us to remain there because of the unhygienic state.

If this is true for us as humans, how much more will the Holy God refuse to dwell in the defiled hearts of men! Many know God, yet He cannot dwell in them because of sin. As it is written: “Because that, when they knew God, they glorified him not as God, neither were thankful; but became vain in their imaginations, and their foolish heart was darkened.” (Romans 1:21)

Notice Paul’s words—“they glorified him not as God.” Yes, our lives must glorify Him. To glorify God is not merely offering worship with words, but living a purified life—“Cleanse your hands, ye sinners; and purify your hearts, ye double minded.” That is why today’s verse is a call to holiness.

When we confess our sins to Christ and are cleansed by His blood, we are made pure. It is our sins that hinder us from knowing Him. But when forgiven, we abide in Him, and He abides in us. Outward rituals cannot bring us to God.

Therefore, we must not be mere performers of rituals, but live knowing Him personally. Then only will He be with us, and we with Him. When we confess our sins and seek Him, He will reveal Himself to us: “The LORD is with you, while ye be with him; and if ye seek him, he will be found of you; but if ye forsake him, he will forsake you.” (2 Chronicles 15:2)

Let us cleanse our sin-stained hands, purify our hearts, and seek Him—then He will surely reveal Himself to us.

Message by: Bro. M. Geo Prakash

             

No comments: