"விதைகளின் உள்ளே" 🌳
வேதாகமத் தியானம் எண் - 1610 ஆதவன் 05.07.2025 சனி
"உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்." ( மத்தேயு 6 : 21 )
மனிதர்களது இருதயம்தான் தேவன் வாழும் மெய்யான இல்லமாக உள்ளது. ஆனால் பொதுவாக பலரும் இந்தச் சத்தியத்தை மறந்தவர்களாக ஆலயங்களுக்குச் சென்று கடவுளை வழிபட்டால் தங்களது அனைத்துத் தேவைகளும் சந்திக்கப்படும் என நம்பிகொண்டிருக்கின்றனர்; அவ்வாறே ஆலயங்களைத் தேடி ஓடி ஜெபிக்கின்றனர்.
நமது இதயமானது உலகப் பொருளாசை ஒன்றை மட்டுமே விரும்பி வாழுமானால் நமது இறை வேண்டுதல்களும் உலகப்பொருட்களை மையப்படுத்தியே இருக்கும். இதனையே இன்றைய தியான வசனத்தில் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்." என்று கூறினார்.
நாம் தேவனை உண்மையாக அன்பு செய்வோமானால் அவரை மட்டுமே விரும்புவோம். அவர் நம்மோடு இருக்கவேண்டும், நம்மை வழிநடத்தவேண்டும், நம்மைவிட்டு அவர் விலகாமல் இருக்கவேண்டுமானால் நாம் எத்தகைய வாழ்வு வாழவேண்டும் போன்ற எண்ணங்கள் நமக்குள் இருக்கும். அவரது பிரசன்னம் நம்மைவிட்டு விலகும்போது நமக்கு வேதனையாக இருக்கும். நம்மை அறியாமல் அவருக்கு எதிராக ஏதாவது பாவம் செய்துவிட்டோமோ என நம்மை நாமே ஆராய்ந்து பார்க்கின்றவர்களா இருப்போம்.
ஆனால் வெறும் உலக பொருளுக்காகவும், உலக ஆசீர்வாதங்களுக்காகவும் தேவனைத் தேடுபவர்களுக்கு இத்தகைய எண்ணங்கள் ஏற்படாது. "ஆண்டவரே, எனக்கு நீர் இந்தக் காரியத்தை வெற்றியடையச் செய்வீரானால் நான் உமக்கு எனது ஒருமாத சம்பளப் பணத்தைக் காணிக்கையாகத் தருவேன்" என்பதுபோன்று கடவுளிடம் பேரம்பேசி பொருத்தனை செய்யும் அற்பமான எண்ணம்தான் அத்தகைய மனிதர்களுக்கு இருக்கும்.
இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுவதுபோல பணத்தையே தனது பொக்கிஷமாகக் கருதுபவன் பணத்தின் அடிப்படையிலேயே அனைத்தையும் பார்ப்பவனாக இருப்பான். இத்தகைய மனிதர்கள் தேவனை வாழ்வில் அறிய முடியாது. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது". ( லுூக்கா 16 : 13 )
ஆனால் இயேசு கிறிஸ்து தெளிவாகக் கூறிய சத்தியத்தை பண ஆசைகொண்ட பரிசேயர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவேதான், "இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம் பண்ணினார்கள்." ( லுூக்கா 16 : 14 )
இதனை வாசிக்கும் அன்பான சகோதரனே, சகோதரியே, உங்களது பொக்கிஷம் எங்கே இருக்கின்றது என்பதனை ஆராய்ந்து பார்த்து கிறிஸ்துவுக்கு உகந்த இருதயமாக அதனை மாற்றவேண்டியது அவசியம் என்று ஆவியானவர் கட்டளையிடுகின்றார். பணத்துக்காகவும் உலக ஆசீர்வாதங்களுக்காகவும் தேவனைத் தேடுகின்கிறீர்களா அல்லது தேவனுக்காக, தேவன்மேலுள்ள அன்பினால் அவரை மேலும் அறிந்து அவரோடு ஐக்கியமாக வாழவேண்டுமென்று தேடுகிறேர்களா? பொருளாசைக்காரராகிய பரிசேயர் அவரைப் பரியாசம் பண்ணினதுபோல பரியாசம்பண்ணாமல் ஆவியானவரின் குரலுக்குச் செவிகொடுக்க உங்களை அழைக்கின்றார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
“Inside the Seeds” 🌳
Scripture Meditation No. 1610
AATHAVAN – Saturday, 05 July 2025
“For where your treasure is,
there will your heart be also.”(Matthew 6:21, KJV)
The human heart is the true
dwelling place where God desires to reside. However, many forget this truth and
believe that going to temples or places of worship and offering their rituals
will ensure that all their needs are met. With such belief, they run to sacred
places to pray.
If our heart is driven only
by worldly desires, then even our prayers will revolve around material things.
This is exactly what our Lord Jesus Christ meant when He said, “For where
your treasure is, there will your heart be also.”
If we truly love God, we
will desire Him alone. Our hearts will long for His presence, His guidance, and
His nearness in our lives. We will be concerned about living a life pleasing to
Him. Whenever His presence seems distant, we will feel a deep sorrow and begin
to examine ourselves to see whether we have unknowingly sinned against Him.
But those who seek God only
for material gain and worldly blessings will not have such spiritual thoughts.
Their prayers often turn into transactional bargains with God: “Lord, if You
make this endeavor successful, I will give my entire one-month salary as an
offering.” These are shallow and unspiritual mindsets.
As Jesus points out in
today's verse, the one who considers money his treasure will view everything in
life through that lens. Such people will never come to truly know God. That’s
why Jesus also warned:
“No servant can serve two
masters: for either he will hate the one, and love the other; or else he will
hold to the one, and despise the other. Ye cannot serve God and mammon.” (Luke
16:13, KJV)
However, the Pharisees, who
were lovers of money, could not accept this truth spoken clearly by Jesus. The
Scripture says:
“And the Pharisees also, who
were covetous, heard all these things: and they derided him.” (Luke 16:14, KJV)
Dear brother, dear sister
who is reading this today — the Holy Spirit is urging you to examine where your
treasure truly lies. Is your heart seeking God for the sake of money and
worldly blessings, or are you seeking God out of love, desiring to know Him
more and walk in union with Him?
The Holy Spirit is calling
you to listen — not with mockery, as the covetous Pharisees did — but with a
heart open to His voice. May your heart be transformed into one that pleases
Christ.
Gospel Message: Bro. M. Geo
Prakash
No comments:
Post a Comment