வேதாகமத் தியானம் - எண்:- 1,498
'ஆதவன்' 💚மார்ச் 14, 2025. 💚வெள்ளிக்கிழமை
"உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்." ( சங்கீதம் 84: 5)
நாம் மண்ணினாலான வெறும் மனிதர்கள்தான். தேவனது சித்தமில்லாமல் நம்மைக்கொண்டு எதனையும் செய்யமுடியாது. இந்த உண்மை எப்போதும் நமக்குள் நினைவிருக்கவேண்டியது அவசியம். இந்த எண்ணம் நமக்குள் இருக்குமானால் நாம் எதற்கும் தேவனையே சார்ந்திருப்பவர்களாக வாழ்வோம்.
நமது உடலில் பலமிருக்கும்போது, அல்லது பணம், நல்ல வேலை, நல்ல பதவி இருக்கும்போது இதனை நாம் எண்ணுவதில்லை. காரணம், நமது பணம், பதவி, செல்வாக்கு இவைகள் பல காரியங்களைச் சாதிக்க உதவக்கூடும். ஆனால் நாம் இவைகளை நிரந்தரம் என எண்ணி வாழும்போது இவைகளை இழக்கும்போது மிகவும் பாதிப்படைந்தவர்களாக மாறிவிடுவோம்.
ஆம் அன்பானவர்களே, அதனால்தான் இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்." என்று. அதாவது முதலில் நாம் தேவனில், தேவனது அன்பில், அவரது ஐக்கியத்தில் பலம்கொள்ளவேண்டும். இரண்டாவது, நமது இருதய சிந்தனை செம்மையானதாக இருக்கவேண்டும். அதாவது, நாம் இருதய சுத்தமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
தேவனோடுள்ள உறவில் நாம் பலப்படும்போது மட்டுமே நமது வாழ்க்கை வித்தியாசமான வாழ்க்கையாக மாறும். தேவனில் பலம்கொள்ளும்போது, நமது இருதய சிந்தனையும் செயல்பாடுகளும் இயல்பாகவே தேவனுக்கு உகந்தவையாக மாறும். நாம் நல்ல வழியில் வாழ்பவர்களாக மாறுவோம்.
இப்படி நாம் தேவனில் பலம்கொள்ளும்போது நமது வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதனை சங்கீத ஆசிரியர் தொடர்நது வரும் வசனத்தில் கூறுகின்றார், "அவர்கள் அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும். அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்." ( சங்கீதம் 84: 6, 7)
அதாவது, நாம் தேவனில் பலம் கொள்ளும்போது நமது வாழ்க்கையில் வரும் துன்பங்கள், பிரச்சனைகள், கண்ணீர்கள், கவலைகள் இவைகளை நாம் எளிதில் மேற்கொண்டு வாழ்க்கையில் களிப்பைக் காணும்படி தேவன் உதவிடுவார். வறண்ட குளம் போன்ற நமது வாழ்க்கையில் செழிப்பின் மழை பொழிந்து அதனை நிரப்பும். எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவோம் என்று கூறப்பட்டுள்ளது.
சுருங்கக் கூறினால், நாம் தேவனால் பலம்கொண்டவர்களாக வாழும்போது நமக்கு இம்மையிலுள்ள துன்பங்களுக்குத் தீர்வும், மகிழ்ச்சியும் மறுவுலக வாழ்வும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆம் அன்பானவர்களே, ஒருவேளை இதனை வாசிக்கும் நீங்கள் இன்று பல்வேறு துன்பங்களில் சிக்கிச் சோர்ந்து போயிருக்கலாம். இனி நமக்கு தேவ துணை கிடைக்குமா என்று எண்ணலாம். ஆனால் தேவ வசனம் கூறுகின்றது, "சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்." ( ஏசாயா 40: 29)
எனவே, சோர்வு வேண்டாம், தயக்கம் வேண்டாம், தேவ சந்நிதியில் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம். தேவ பலம் நம்மை நிரப்ப வேண்டுவோம். அவரில் பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள் எனும் வசனத்தின்படி தேவன் நம்மை பாக்கியவான்களாக மாற்றுவார்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation - Number: 1,498
AATHAVAN 💚 March
14, 2025 💚
Friday
"Blessed is the man whose
strength is in Thee; in whose heart are the ways of them." (Psalm 84:5,
KJV)
We are mere human beings made
of dust. Without God's will, we can do nothing. This truth must always remain
in our hearts. If this thought remains within us, we will live as those who
depend entirely on God.
When we have physical
strength, money, a good job, or a high position, we often forget this truth.
The reason is that our wealth, position, and influence can help us achieve many
things. But when we consider these things permanent and live accordingly, we
will be deeply affected when we lose them.
Yes, dear ones, that is why
today’s meditation verse says, "Blessed is the man whose strength is in
Thee; in whose heart are the ways of them." This means, first, we must
find our strength in God, in His love, and in His unity. Second, our heart's
thoughts must be upright. In other words, we must be pure in heart.
Only when we grow stronger in
our relationship with God will our lives become truly different. When we draw
strength from God, our heart's thoughts and actions will naturally align with
His will. We will become people who live righteously.
When we draw strength from
God, what happens in our lives is further explained by the Psalmist in the
following verses: "Who passing through the valley of Baca make it a well;
the rain also filleth the pools. They go from strength to strength, every one
of them in Zion appeareth before God." (Psalm 84:6-7, KJV)
This means that when we draw
strength from God, the sorrows, problems, tears, and worries in our lives will
be overcome, and we will find joy in life. God will pour out His abundant
blessings, filling our dry lives like a rain-filled pool. Above all, we will go
from strength to strength and appear before God in Zion.
In short, when we live as
those strengthened by God, we will find solutions to our troubles, joy in this
life, and eternal life in the world to come. Yes, dear ones, perhaps as you
read this, you may be weary and overwhelmed by various troubles today. You may
wonder if God’s help will ever come. But the Word of God says, "He giveth
power to the faint; and to them that have no might He increaseth
strength." (Isaiah 40:29, KJV)
Therefore, let there be no
weariness, no hesitation. Let us surrender ourselves to God’s presence. Let us
seek His strength to fill us. As the verse says, "Blessed is the man whose
strength is in Thee; in whose heart are the ways of them." God will
transform us into blessed people.
God's Message: -
Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment