வேதாகமத் தியானம் - எண்:- 1,493
'ஆதவன்' 💚மார்ச் 09, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை
"கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்." ( லுூக்கா 11: 34)
ஒரு மனிதனுக்கு கண்ணானது மிக முக்கிய உறுப்பாகும். கண்ணை நாம் இழப்போமானால் வாழ்வே இருளாகிவிடும். மற்றவர்களின் உதவியின்றி நம்மால் எந்தச் செயலையும் செய்யமுடியாது. இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெறும் உலக பொருளில் இந்த வசனத்தைக் கூறாமல் ஆவிக்குரிய பொருளில் கூறுகின்றார்.
கண்கள், விளக்கு, வெளிச்சம், இருள் என்று இயேசு கிறிஸ்து கூறும் வார்த்தைகள் உருவக வார்த்தைகளாகும். அதாவது வேத சத்தியங்களை கூர்ந்து பார்க்கும் அறிவாகிய கண்கள், அந்த சத்தியங்களை அறிந்துகொண்ட அறிவாகிய விளக்கு, அதன்மூலம் நாம் பெற்றுக்கொள்ளும் மனத்தெளிவாகிய வெளிச்சம், இவைகள் எதுவுமற்ற மனத்தின் இருள் இவைகளையே இயேசு கிறிஸ்து குறிப்பிடுகின்றார்.
தேவனது வார்த்தைகளைக் கவனித்துப்பார்கும்படி நமது கண்ணானது தெளிவாக இருக்குமானால் நமது உடலானது பாவக்கறையின்றி முழுவதும் வெளிச்சமாக இருக்கும். காரணம் தேவனது வார்த்தைகள் நம்மைத் தெளிவான பாதையில் நடத்திடும். "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 119: 105) என்று சங்கீத ஆசிரியர் கூறுகின்றார்.
இப்படி நமது கண்கள் தேவனது வார்த்தைகளைத் தெளிவாகக் கண்டுகொண்டு அவரது வார்த்தையின்படி நாம் நடப்போமானால் நமது உடலானது முற்றிலும் ஒளிபொருந்தியதாக இருக்கும். இருளான இடத்தில் ஒரே ஒரு விளக்கு இருந்தாலும் அது தனது ஒளியால் மற்றவர்களுக்கு உதவியாக ஒளிகொடுத்து உதவுவதுபோல இருளான மக்கள் மத்தியில் ஒளியுடன் வாழும் மெய்யான கிறிஸ்தவனும் இருப்பான். இதனை, "உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்" ( லுூக்கா 11: 36) என்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
இதனால்தான் அப்படி வாழ்பவர்களை இயேசு கிறிஸ்து, "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது." ( மத்தேயு 5: 14) என்றார்.
இதற்கு மாறாக தேவ வார்த்தைகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்போமானால் நமது கண்கள் கெட்டுப்போய்விட்டன என்று பொருள். இப்படி நமது கண் கெட்டதாயிருந்தால் நமது சரீரம் முழுவதும் பாவத்தில் மூழ்கி இருளாயிருக்கும். "உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!" (மத்தேயு 6:23)
ஆம் அன்பானவர்களே, "கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வாழும் நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே." (1 தெசலோனிக்கேயர் 5:5) என்கிறார் அப்போஸ்தலரான பவுல். எனவே தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருந்து இருள் நம்மைப் பற்றிக்கொள்ளாமல் வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழ்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation - No. 1,493
AATHAVAN 💚 March
09, 2025 💚
Sunday
"The light of the body is
the eye: therefore when thine eye is single, thy whole body also is full of
light; but when thine eye is evil, thy body also is full of darkness."
(Luke 11:34, KJV)
The eye is one of the most
vital organs for a human being. If we lose our eyesight, our life becomes
filled with darkness. Without the help of others, we would be unable to perform
even the simplest tasks. In today’s meditation verse, the Lord Jesus Christ is
not speaking merely about the physical eye but is addressing a spiritual truth.
The words used by Jesus—eyes,
lamp, light, and darkness—are metaphorical. They refer to the spiritual
understanding of God’s truths. The "eyes" symbolize the discernment
to perceive divine truths, the "lamp" represents the knowledge of
those truths, the "light" signifies the clarity and enlightenment
gained from them, and the "darkness" denotes the absence of such
understanding.
If our eyes are clear and
focused on God’s Word, our whole body will be free from sin and filled with
light. This is because God’s Word guides us on the right path. As the Psalmist
says, "Thy word is a lamp unto my feet, and a light unto my path."
(Psalm 119:105, KJV)
When our eyes are fixed on
God’s Word and we walk according to His teachings, our entire being will be
filled with light. Just as a single lamp in a dark place can provide light and
help to others, a true Christian who lives in the light will shine among those
in darkness. As Jesus said, "If thy whole body therefore be full of light,
having no part dark, the whole shall be full of light, as when the bright
shining of a candle doth give thee light." (Luke 11:36, KJV)
This is why Jesus calls such
people, "Ye are the light of the world. A city that is set on a hill
cannot be hid." (Matthew 5:14, KJV)
On the contrary, if we neglect
God’s Word and fail to perceive its truths, our eyes become spiritually blind.
If our eyes are evil, our whole body will be plunged into the darkness of sin.
"But if thine eye be evil, thy whole body shall be full of darkness. If
therefore the light that is in thee be darkness, how great is that
darkness!" (Matthew 6:23, KJV)
Yes, dear friends, "Ye
are all the children of light, and the children of the day: we are not of the
night, nor of darkness." (1 Thessalonians 5:5, KJV), says the Apostle
Paul. Therefore, let us be sober-minded and live as children of light, ensuring
that darkness does not overtake us.
God’s Message: Bro.
M. Geo Prakash
No comments:
Post a Comment