INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Thursday, March 27, 2025

🍒Meditation verse - ரோமர் 8: 36, 37 / Romans 8:36, 37

வேதாகமத் தியானம் - எண்:- 1,519  

'ஆதவன்' 💚ஏப்ரல் 04, 2025. 💚வெள்ளிக்கிழமை


"கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோமே." ( ரோமர் 8: 36, 37)

இன்று பல கிறிஸ்தவர்கள் தாங்கள் கிறிஸ்துவிடம் அன்பாக இருப்பதனாலும் அவருக்குக் கீழ்ப்படிந்த வாழ்க்கை வாழ்வதாலும் தங்களுக்கு வாழ்வில்  துன்பங்கள் வருவதில்லை என்று எண்ணிக்கொள்கின்றனர். எனவே அதற்கு மாறாக வாழ்வில் துன்பங்கள் வரும்போது ஆவிக்குரிய வாழ்வில் துவண்டு போகின்றனர். முதலில் ஆவிக்குரிய வாழ்வை சிறப்பாக ஆரம்பிக்கும் பலர் ஆவிக்குரிய வாழ்வில் பின்வாங்கிப்போக துன்பங்கள் வாழ்வில் வருவதே காரணமாக இருக்கின்றது.

ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்றுதான் கூறினார். ஆனால் நமது உபத்திரவம் நம்மை அழித்துவிடாது. கிறிஸ்து அவற்றில் ஜெயம் பெற்றதைப்போல நாமும் ஜெயம்பெறுவோம். எனவேதான் அவர்,  "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்." ( யோவான் 16: 33) என்று கூறினார். 
 
அப்போஸ்தலராகிய பவுல்,  "மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." (1 கொரிந்தியர் 10: 13) என்று நம்மை தைரியப்படுத்துகின்றார்.

ஆம் அன்பானவர்களே, உலகத்தில் நமக்குச் சில கடினமான சூழ்நிலைகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. அப்போஸ்தலரான பவுல் இப்படித் தான் அனுபவித்தத் துன்பங்களையும் அவற்றிலிருந்து தேவன் அவரை விடுவித்ததையும்  நினைவுகூருகின்றார்.  எனவேதான் அவர் இன்றைய தியான வசனத்தில், "கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோமே." என்று நமக்கு துன்பங்களை வெற்றிகொள்ள வழிகூறுகின்றார். 

ஒருசில துன்பங்களிலிருந்து மட்டும் சிறியதான விடுதலை பெறுவோம் என்று கூறாமல், எல்லாவற்றிலிருந்தும் முற்றிலும் ஜெயம் கொள்ளுகிறவர்களாக இருப்போம் என்கின்றார். இதனையே அவர், "இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோமே." என்கின்றார். அதாவது நம்மில் அன்புகூர்ந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அளிக்கும் வெற்றி முழுமையான வெற்றி; முற்றிலும் ஜெயம்கொடுக்கும் வெற்றி. ஆம், எந்தத் துன்பமும் கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரித்திடாமல் காத்துக்கொள்வோம். அதுவே நம்மை ஆவிக்குரிய வாழ்வில் தொடர்ந்து வெற்றிகொள்ள உதவியாக இருக்கும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்          

Scripture Meditation - No: 1,519

AATHAVAN 💚 April 04, 2025 | Friday

"Who shall separate us from the love of Christ? Shall tribulation, or distress, or persecution, or famine, or nakedness, or peril, or sword? Nay, in all these things we are more than conquerors through him that loved us." (Romans 8:36, 37 - KJV)

Many Christians today assume that because they love Christ and live a life of obedience to Him, they will not face troubles in life. However, when difficulties arise, they become discouraged in their spiritual walk. Many who start their spiritual journey with great enthusiasm begin to fall back due to the trials they face.

But our Lord Jesus Christ clearly said, "In the world ye shall have tribulation: but be of good cheer; I have overcome the world." (John 16:33 - KJV). This means that although we may face trials, they will not destroy us. Just as Christ overcame them, we too will emerge victorious.

The Apostle Paul reassures us, "There hath no temptation taken you but such as is common to man: but God is faithful, who will not suffer you to be tempted above that ye are able; but will with the temptation also make a way to escape, that ye may be able to bear it." (1 Corinthians 10:13 - KJV).

Dear beloved, difficult situations in life are inevitable. The Apostle Paul himself reflected on the trials he endured and how God delivered him from them. That is why, in today’s meditation verse, he asks, "Who shall separate us from the love of Christ? Shall tribulation, or distress, or persecution, or famine, or nakedness, or peril, or sword?" He then confidently declares that "In all these things we are more than conquerors through him that loved us."

Paul does not say that we will receive only a partial deliverance from some troubles, but rather that we will completely triumph over all of them. The victory given by Jesus Christ, who loves us, is a total and absolute victory. No suffering can separate us from the love of Christ. This assurance helps us to continue in our spiritual life with victory.

God’s Message - Bro. M. Geo Prakash                                           

No comments: