வேதாகமத் தியானம் - எண்:- 1,510
'ஆதவன்' 💚மார்ச் 26, 2025. 💚புதன்கிழமை
"நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." ( யோவான் 15 : 7 )
நாம் பலவேளைகளில் பல்வேறு விண்ணப்பங்களுடன் தேவனை நோக்கி ஜெபிக்கின்றோம். ஆனால் தேவன் எப்போதும் நமது ஜெபங்களுக்கு உடனடியாகப் பதில் தருவதில்லை. ஆனால் மக்கள் ஜெபிக்காத பல காரியங்களை மனிதர்களுக்குத் தேவன் கொடுத்துக்கொண்டுதானிருக்கிறார். தன்னை ஆராதிப்பவர்களுக்கு மட்டுமல்ல, உலகத்திலுள்ள அனைவருக்கும் தேவன் பல காரியங்களைக் கொடுத்து வாழவைத்துக் கொண்டுதானிருக்கிறார்.
ஆனால் இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்துக் குறிப்பிடுவது குறிப்பிட்ட நமது ஜெப விண்ணப்பங்களைக் குறித்துத்தான். மட்டுமல்ல, இந்த வசனம் பொதுவான மக்களுக்கான வசனம்போல இருந்தாலும், இது ஆவிக்குரிய அர்த்தமுள்ள வசனமாகும். கேட்டுக்கொள்வது அனைத்தையும் தேவன் தனது பிள்ளைகளுக்குக் கொடுப்பதில்லை. ஒரு தாய்க்குத் தனது குழந்தைக்கு எதனை எப்போது கொடுக்கவேண்டுமென்று தெரிந்திருப்பதுபோல தேவனுக்கும் தெரியும். எனவே, ஏற்றவேளையில் அதனை அவர் தந்து மகிழ்ச்சிப்படுத்துவார்.
அப்படித் தேவன் நமது ஜெபத்துக்குப் பதிலளிக்க அவர் கூறும் நிபந்தனைதான் இன்றைய தியான வசனம். அதாவது, நாம் தேவனது வார்த்தைகளை மனதில் கொண்டு அவற்றின்படி வாழ்ந்து அவற்றில் நிலைத்திருப்போமானால் நமது வேண்டுதல்களை அவர் நிறைவேற்றுவார். இதனையே அவர், "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." என்று கூறுகின்றார்.
வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பல வசனங்களில் நமக்குத் தேவையான குறிப்பிட்ட ஒரு சில வசனங்களைப் பொறுக்கியெடுத்து நாம் தேவனது வார்த்தைகளுக்கு அர்த்தம் எடுக்கக்கூடாது. தேவன் கூறிய பல வசனங்களை ஒப்பிட்டு அவற்றைப் புரிந்துகொண்ட மனிதர்களாக வாழவேண்டும். இதற்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு கண்களைத் திறந்திட முதலில் ஜெபிக்கவேண்டும்.
ஆவிக்குரிய மெய்யான வாழ்வு வாழும் மனிதன் எப்போதும் உலகத் தேவைகளுக்காக மட்டுமே ஜெபித்துக்கொண்டிருக்கமாட்டான். மேலான இறை அனுபவங்கள், ஆவிக்குரிய வாழ்வில் மேலும் முன்னேறிச்செல்லும் ஆர்வம் இவைகளின் அடிப்படையிலேயே ஆவிக்குரிய மக்களது ஜெபம் இருக்கும். இப்படி ஜெபித்து வாழ்பவர்களுக்குத் தேவன் அவர்கள் கேட்காத ஆசீர்வாதங்களையும் கொடுத்து மகிழ்விப்பார். இதனையே, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்." (மத்தேயு 6:33) என்று கூறினார் இயேசு கிறிஸ்து.
மனதில் நூறு சதவிகிதம் உலக ஆசையை வைத்துக்கொண்டு நாம் விண்ணப்பம் பண்ணும்போது அது தேவனுக்கு விருப்பமில்லாத ஜெபமாக மாறுகின்றது. இதனால்தான், "நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்". (யாக்கோபு 4:3) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு.
ஆம் அன்பானவர்களே, இன்றைய தியானத்தில் ஜெபத்தைக்குறித்த மூன்று காரியங்களை உணர்த்துவது அவசியமென்று எண்ணுகின்றேன்.
1. நாம் நமது வாழ்வில் தேவனுடைய வார்த்தைகளுக்கு முன்னுரிமைகொடுத்து, அவற்றுக்குக் கீழ்ப்படிந்து ஜெபிக்கவேண்டும்.
2. நமது ஜெபங்களில் ஆவிக்குரிய காரியங்களைக்குறித்த ஆர்வம் இருக்கவேண்டும்.
3. வெறும் உலக ஆசைகளை நிறைவேற்ற மட்டுமே ஜெபித்துக் கொண்டிருக்கக் கூடாது.
இப்படி நாம் வாழ்வோமானால் "நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." என்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Bible Meditation - No: 1,510
AATHAVAN 💚 March
26, 2025 💚
Wednesday
"If ye abide in me, and
my words abide in you, ye shall ask what ye will, and it shall be done unto
you." (John 15:7, KJV)
Many times, we pray to God
with various requests. However, God does not always respond to our prayers
immediately. Yet, we see that God provides many things to people, even when
they do not pray for them. He gives not only to those who worship Him but also
to everyone in the world, sustaining them with various blessings.
However, in today’s meditation
verse, Jesus Christ specifically speaks about our prayer requests. Though this
verse may appear general, it carries a deep spiritual meaning. God does not
grant all that we ask for, just as a mother knows what and when to give to her
child. Similarly, God knows what is best for us and blesses us at the right
time.
The condition that Jesus sets
for answered prayers is found in today’s verse—if we abide in His words and
live according to them, then our prayers will be fulfilled. That is why He
says, "If ye abide in me, and my words abide in you, ye shall ask what ye
will, and it shall be done unto you."
We should not take isolated
Bible verses out of context to interpret them as we please. Instead, we must
understand God’s Word in its fullness. To do so, we need to pray for the Holy
Spirit to open our spiritual eyes.
A person who leads a truly
spiritual life will not pray only for worldly needs. Their prayers will be
based on the desire for a deeper divine experience and spiritual growth. Those
who pray with such a heart will receive even the blessings they have not asked
for. This aligns with what Jesus said:
"But seek ye first the
kingdom of God, and his righteousness; and all these things shall be added unto
you." (Matthew 6:33, KJV)
When we pray while being fully
consumed by worldly desires, our prayers become unacceptable to God. This is
why Apostle James says:
"Ye ask, and receive not,
because ye ask amiss, that ye may consume it upon your lusts." (James 4:3,
KJV)
Dearly beloved, today’s
meditation highlights three important aspects of prayer:
1. We must prioritize God's Word in our
lives, obey it, and pray accordingly.
2. Our prayers should have a desire for
spiritual matters.
3. We should not pray only for worldly
desires to be fulfilled.
If we live in this manner, "ye
shall ask what ye will, and it shall be done unto you," says our Lord
Jesus Christ.
God’s Message: Bro.
M. Geo Prakash
No comments:
Post a Comment