வேதாகமத் தியானம் - எண்:- 1,520
'ஆதவன்' 💚ஏப்ரல் 05, 2025. 💚சனிக்கிழமை
"பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்." (2 இராஜாக்கள் 6: 16)
சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு எதிராகப் போர்ச்செய்யும்படி ஆலோசனை செய்து எந்த வழியாக இஸ்ரவேலுக்குள் செல்லலாம் என திட்டம் வகுக்கும்போதெல்லாம் எலிசா தீர்க்கதரிசி அதனைத் தனது தேவ வெளிப்படுத்துதல்மூலம் அறிந்து இஸ்ரவேல் ராஜாவுக்கு முன்கூட்டியே அறிவித்துவிடுவார். எனவே சீரியாவின் ராஜாவால் இஸ்ரவேலரை மேற்கொள்ள முடியவில்லை. இதனைத் தனது ஊழியர்கள்மூலம் அறிந்துகொண்ட சீரியாவின் ராஜா எலிசாவைப் பிடிக்க வகைதேடினான்.
எலிசா தோத்தானில் இருக்கிறார் என்பதை அறிந்துகொண்ட சிரியாவின் ராஜா அவரைப்பிடிக்கத் தனது படைவீரர்களை அனுப்பினான். அதிகாலமே எழுந்த எலிசாவின் வேலைக்காரன் அந்த மலை முழுவதும் இராணுவமும் குதிரைவீரர்களும் இரதங்களும் நிற்பதைக்கண்டு பயந்து, "ஐயோ என் ஆண்டவனே! என்னச்செய்வோம்?" என்று அலறினான். தாங்கள் இருவரும் அழிந்துவிடுவோம் என்று அஞ்சினான் வேலைக்காரன். ஆனால் எலிசா தைரியமாக அவனிடம் கூறினார், "பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்."
ஆம் அன்பானவர்களே, நாமும் எலிசாவின் வேலைக்காரனைப்போல பலவேளைகளில் நமது சூழ்நிலைகளைப் பார்த்துப் பயப்படுகின்றோம். "ஐயோ, இந்தப் பிரச்னை அல்லது இந்த நோய் என்னைத் தாக்கிவிட்டதே, நான் என்னசெய்வேன்? எவ்வளவு கொடிய நோய் இது !" என்று புலம்புகின்றோம். ஆனால் தேவன் சொல்கின்றார், "பயப்படாதே, உன் பிரச்சனையைவிட, உன் நோயைவிட உன்னோடு இருக்கும் நான் பெரியவராய் இருக்கிறேன். உன்னை நான் விடுவிப்பேன்.
ஆனால், தேவனது வல்லமையினை நாம் கண்டுணர எலிசாவின் வேலைக்காரனது கண்கள் திறக்கப்பட்டதுபோல நமது கண்களும் திறக்கப்படவேண்டியது அவசியம். ஆம், "அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்." (2 இராஜாக்கள் 6: 17)
தேவன் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் எலிசாவைச் சுற்றிலும் இறங்கிப் பாதுகாத்ததுபோல நம்மையும் பாதுகாப்பார். "யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன் என்றார்." ( ஓசியா 1: 7) தேவனாகிய கர்த்தர்.
ஆம் அன்பானவர்களே, நம்மில் இருக்கும் தேவன் அனைத்தையும்விடப் பெரியவர். "பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்." (1 யோவான் 4 : 4) என்று நம்மை அறிவுறுத்துகின்றார் அப்போஸ்தலராகிய யோவான். எனவே நாம் பயத்தைத் தள்ளி தேவன்மேலுள்ள விசுவாசத்தைப் பலப்படுத்துவோம். "பயப்படாதே; அவர்களோடிருக் கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்."
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation - No. 1,520
AATHAVAN 💚 April 05, 2025 💚
Saturday
"Fear not: for they that be with us are
more than they that be with them." (2
Kings 6:16)
The king of Syria devised
plans to war against Israel and strategized routes to invade. However, every
time he made such plans, the prophet Elisha, through divine revelation,
informed the king of Israel in advance. As a result, the king of Syria could not
succeed against Israel. Upon discovering that Elisha was the source of this
divine intelligence, the king of Syria sought to capture him.
Learning that Elisha was in
Dothan, the Syrian king sent his army, including horses and chariots, to seize
him. Early in the morning, when Elisha’s servant woke up, he saw the army
surrounding the mountain. Overcome with fear, he cried out, "Alas, my
master! How shall we do?" Believing that they were doomed, he
panicked. But Elisha reassured him with courage, saying, "Fear not: for
they that be with us are more than they that be with them."
Dear beloved, like Elisha’s
servant, we often look at our circumstances and become afraid. We cry out in
despair, "Oh no! This problem or illness has struck me. What shall I
do? This is such a terrible disease!" But God speaks to us today: "Fear
not! I am greater than your problem and your sickness. I will deliver
you."
However, just as Elisha’s
servant needed his eyes opened to see God’s power, we too must have our
spiritual eyes opened. The Scripture says, "And Elisha prayed, and
said, Lord, I pray thee, open his eyes, that he may see. And the Lord opened
the eyes of the young man; and he saw: and, behold, the mountain was full of
horses and chariots of fire round about Elisha." (2 Kings 6:17)
Just as God sent fiery
chariots and horses to protect Elisha, He will protect us as well. "But
I will have mercy upon the house of Judah, and will save them by the Lord their
God, and will not save them by bow, nor by sword, nor by battle, by horses, nor
by horsemen." (Hosea 1:7)
Yes, beloved, the God who is
in us is greater than everything. The apostle John assures us: "Ye are
of God, little children, and have overcome them: because greater is he that is
in you, than he that is in the world." (1 John 4:4) Therefore, let us
cast out fear and strengthen our faith in God. "Fear not: for they that
be with us are more than they that be with them."
Message of God - Bro.
M. Geo Prakash
No comments:
Post a Comment