வேதாகமத் தியானம் - எண்:- 1,518
'ஆதவன்' 💚ஏப்ரல் 03, 2025. 💚வியாழக்கிழமை
"அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்." ( ரோமர் 5: 3, 4)
ஆவிக்குரிய வாழ்வில் நாம் தினம்தோறும் வளர்ச்சியடைந்து முன்னேறவேண்டியது அவசியம். இந்த வளர்ச்சியே நமக்கு தேவனை நெருங்கவும் மேலான அனுபவங்களை நாம் பெறவும் உதவிடும். நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் மேலும் வளரும்படிக்குத் தனது ஆவிக்குரிய அனுபவம் மூலம் கற்றுக்கொண்டதை அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வார்த்தைகள்மூலம் நமக்கு அறிவுறுத்துகின்றார்.
வாழ்க்கையில் ஏற்படும் உபத்திரவங்கள், துன்பங்கள் இவை நமக்குத் தேர்வுபோல (examination) இருக்கின்றன என்கின்றார் அவர். நாம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தேர்வுகள் நமக்கு நடத்தப்படுகின்றன. ஆண்டின் இறுதியில் ஆண்டு இறுதித்தேர்வு நமக்கு வைக்கப்படுகின்றது. இந்தத் தேர்வுகளில் நாம் எப்படி சாதித்துள்ளோம் என்பதனைப் பொறுத்தே நாம் மேல் வகுப்புக்கு மாற்றலாகிச் செல்கின்றோம்.
இதுபோலவே, வாழ்வில் ஏற்படும் உபத்திரவங்கள் நாம் பொறுமையைக் கற்றுக்கொள்ளவும் அந்தப்பொறுமை நாம் நமக்கு தேவன் வைத்துள்ள தேர்வை வெற்றிகொள்ளவும் அதன்மூலம் நமது நம்பிக்கை வளரவும் உதவுகின்றது. இந்தத் தெளிவு நமக்கும் வேண்டும். இந்தத் தெளிவு இருப்பதால் உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம் என்கின்றார்.
ஆனால், தொடர்ந்த உபத்திரவங்களும் துன்பங்களும் நம்மில் விசுவாசக் குறைவை ஏற்படுத்தக்கூடும். 'தேவனையே நம்பிக்கொண்டு இருக்கின்றோம், ஒருவேளை இறுதியில் அவமானமடைந்து வெட்கப்பட்டுப் போவோமோ?' என்று நமக்குள் எண்ணமெழலாம். ஆனால், நமது உள்ளத்தில் தேவனுடைய ஆவியானவர் இருப்பாரென்றால் நாம் அப்படிப் பயப்படத் தேவையில்லை. இதனையே அவர், "மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது." ( ரோமர் 5: 5) என்று கூறுகின்றார்.
எனவே அன்பானவர்களே, அப்போஸ்தலரான பவுல் கூறுவதுபோல, உபத்திரவம், துன்பங்கள் வாழ்வில் ஏற்படும்போது தேர்வைச் சந்திப்பதற்குத் தயாராவதுபோல நாம் தயாராகி அதனை வெற்றிகொள்ள ஆவியானவரின் உதவியை நாடுவோம். அப்படி நாம் அந்தத் துன்பங்களை மேற்கொண்டுவிட்டபின் அதுவே நமக்கு ஆவிக்குரிய வாழ்வில் புத்துணர்ச்சித்தரும் மேன்மையான காரியமாக இருக்கும். மற்றவர்களோடு நாம் அவற்றை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறவர்களாக மாறிவிடுவோம்.
அப்போஸ்தலரான பவுலின் நிரூபங்கள் இன்றும் வல்லமையுடன் நமது வாழ்வில் செயல்பட அவரது துன்பங்களை மேற்கொண்ட அனுபவங்களே காரணம். ஆம் அன்பானவர்களே, துன்பங்களை பொறுமையாகச் சகிப்போம்; அவை தேவன் நமக்கு வைத்துள்ள தேர்வு என எண்ணிக்கொண்டு சிறப்பாக அதனை எழுதுவோம். நிச்சயமாக நாம் வெட்கமடையமாட்டோம்; மாறாக தேர்வுக்குப்பின் அடுத்த உயர்ந்த நிலையினை நாம் அடைவோம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation - No: 1,518
AATHAVAN 💚 April 03, 2025. 💚
Thursday
"And not only so,
but we glory in tribulations also: knowing that tribulation worketh patience;
and patience, experience; and experience, hope."
(Romans 5:3-4)
In our spiritual life, it is
essential that we grow and progress daily. This growth enables us to draw
closer to God and experience greater spiritual blessings. The apostle Paul,
through today’s meditation verse, instructs us on how we can mature in our spiritual
journey through experience.
Paul compares the trials and
tribulations of life to an examination. Just as students in school or college
go through multiple tests each year, culminating in a final exam that
determines their promotion to the next grade, so also, the challenges we face
in life are tests that refine us.
Similarly, the trials we
encounter teach us patience, and that patience helps us endure God’s tests
successfully, ultimately strengthening our faith. We must gain this
understanding so that we, too, can glory in tribulations.
However, prolonged suffering
and continuous challenges may sometimes lead to doubts. We might wonder, "Even
though we trust God, what if we are put to shame in the end?" But Paul
reassures us that if the Holy Spirit dwells in us, we need not fear. As he
says:
"And hope maketh not
ashamed; because the love of God is shed abroad in our hearts by the Holy Ghost
which is given unto us." (Romans 5:5)
Dear beloved, just as Apostle
Paul teaches, when we face trials and difficulties, let us prepare ourselves as
students do for exams. Let us seek the help of the Holy Spirit to overcome
them. Once we endure these hardships with faith, they will bring spiritual
renewal and greater glory in our lives. We will become those who joyfully share
our experiences with others.
The powerful testimony of
Paul’s life was made possible because he endured tribulations with unwavering
faith. Yes, dear ones, let us endure suffering with patience, considering it as
God's test for us. Let us strive to pass the test with excellence. Surely, we
shall not be ashamed; instead, we will be promoted to a higher spiritual level.
Gospel Message: Bro.
M. Geo Prakash
No comments:
Post a Comment