INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Wednesday, March 05, 2025

❤️Meditation verse - எபிரெயர் 11: 31 / Hebrews 11:31

 வேதாகமத் தியானம் - எண்:- 1,495    

'ஆதவன்' 💚மார்ச் 11, 2025. 💚செவ்வாய்க்கிழமை  


"விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுக்காரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்." ( எபிரெயர் 11: 31)

வரி வசூல் செய்யும் மக்களையும் பாலியல் தொழிலாளர்களையும் பாவிகள் என்று யூத சமுதாயம் ஒதுக்கி வைத்திருந்தது. அவர்களோடு பழகுவதற்குத் தயக்கம் காட்டியது. ஆனால் அவர்களும் மனம்திரும்பும்போது தேவனுக்கு உகந்தவர்கள் ஆகின்றனர். இதனால்தான் மனம் திரும்பிய சகேயுவைக்குறித்து இயேசு கிறிஸ்து, "இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே" (லூக்கா 19:9)  என்று  பாராட்டிக் கூறினார். விபச்சாரத்தில் கையும்மெய்யுமாய் பிடிபட்டப்  பெண்ணை மன்னித்தார். ஆம் அன்பானவர்களே, "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்" (லூக்கா 19:10)  

நாமும் பலவேளைகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களை வேசிகள் எனும் கொச்சையான வார்த்தையால் குறிப்பிடுகின்றோம். ஆனால் இத்தகைய பெண்களோடு பழகிப்பார்க்கும்போது அவர்கள் பலவிதங்களில்சாதாரண வாழ்க்கை நடத்தும் பெண்களைப் போலவே இருக்கின்றனர். அவர்களும் ஜெபிக்கின்றனர், தர்மம் செய்கின்றனர், ஆராதனைகளில் கலந்துகொள்கின்றனர், இரக்கச்செயல்கள் பலச்செய்கின்றனர்.     

நான் ஒரு தொண்டு நிறுவனத்தில்  பணியாற்றியபோது இத்தகைய பெண்களோடு பழகும்  வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். தேவனது சத்தியங்களை அறிந்துகொள்வதற்காகவே இந்த வாய்ப்பினை தேவன் எனக்குத் தந்திருந்தார் என எண்ணுகிறேன்.  அந்த நிறுவனம் இந்தப் பெண்களின் வாழ்க்கைக் கதையைத் தொகுத்து புத்தகமாக வெளியிடமுயன்றபோது அந்தப்பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது நான் நூற்றுக்கணக்கான பாலியல் தொழில் செய்யும் பெண்களோடு பேசி, கண்டுகொண்டது, விருப்பத்தோடு இந்தச் செயலில் ஈடுபடுபவர்கள் வெகுசிலர்தான். மற்றவர்கள் அவர்கள் வளர்ந்த சுற்றுச்சூழல், குடும்பச் சூழ்நிலை காரணமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பதே. 

ஆம் அன்பானவர்களே, இன்று தியான வசனத்தில் குறிப்பிடப்படும் ராகாப் என்பவளும் அப்படிப்பட்டவள்தான். அவள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தபோதும் கர்த்தரையும் அவரது வல்லமையையும் உணர்ந்திருந்தாள். இஸ்ரவேல் மக்களில் பலர் விசுவாசித்ததைவிட அதிகமாக கர்த்தர் எரிகோவை இஸ்ரவேல் மக்களுக்கு நிச்சயமாகக் கொடுப்பார் என்பதை அவள் விசுவாசித்தாள். மட்டுமல்ல,  ".........உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்." ( யோசுவா 2:11) என்று தனது விசுவாசத்தை அறிக்கையிட்டாள். 

எனவேதான் எபிரெய நிருப ஆசிரியர் அவளை விசுவாசிகளின் பட்டியலில் சேர்த்துள்ளார். இதனையே நாம், "விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுக்காரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்." என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, எனவே நாம் பாவிகள் என்று  யாரையும் அற்பமாக எண்ணவேண்டாம். இந்தச் சமுதாயத்தில் நல்லவர்கள் என்று பெயர்பெற்றவர்கள், போதகர்கள், கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்ளும்  பலர் ரகசிய பாவங்களில் விழுந்து கிடக்கின்றனர். ஆனால் அவர்களை சமுதாயம் உயர்வாகக் கருதுகின்றது. இஸ்ரவேல் மக்களிடையேயும் இப்படிப்பட்ட எண்ணமே இருந்தது. எனவேதான் இயேசு கிறிஸ்து அவர்களிடம் கூறினார், ".........ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 21: 31)

எத்தகைய கொடிய பாவத்தில் விழுந்திருந்தாலும் தேவனிடம் முழு இருதயத்தோடு மன்னிப்பை வேண்டுவோம். மன்னிப்பதற்கு அவர் தயை மிகுந்தவராகவே இருக்கிறார். "துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்." (ஏசாயா 55;7)

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                           

Scripture Meditation - No. 1,495
AATHAVAN
💚 March 11, 2025 💚
Tuesday

"By faith the harlot Rahab perished not with them that believed not, when she had received the spies with peace." (Hebrews 11:31, KJV)

The Jewish society often marginalized tax collectors and sex workers, labelling them as sinners and hesitating to associate with them. However, when they repent, they too become pleasing to God. This is why Jesus Christ praised Zacchaeus, saying, "This day is salvation come to this house, forsomuch as he also is a son of Abraham" (Luke 19:9, KJV). He also forgave the woman caught in adultery. Yes, beloved, "For the Son of man is come to seek and to save that which was lost" (Luke 19:10, KJV).

Often, we refer to women engaged in sex work with derogatory terms like "harlots." But when we interact with them, we find that they are much like ordinary women in many ways. They pray, give alms, participate in worship, and perform acts of compassion.

When I worked for a charitable organization, I had the opportunity to interact with such women. I believe God gave me this opportunity to understand His truths better. When that organization attempted to compile their life stories into a book, the responsibility was entrusted to me. During this time, I spoke with hundreds of women in the sex trade and realized that only a few willingly chose this profession. Most were driven into it due to their upbringing, family circumstances, or environment.

Yes, beloved, Rahab, mentioned in today’s meditation verse, was one such woman. Though she was engaged in sex work, she recognized the Lord and His power. She believed more firmly than many Israelites that the Lord would surely give Jericho to His people. Moreover, she declared her faith, saying, "...the Lord your God, he is God in heaven above, and in earth beneath" (Joshua 2:11, KJV).

This is why the author of Hebrews included her in the list of the faithful. As we read, "By faith the harlot Rahab perished not with them that believed not, when she had received the spies with peace."

Beloved, let us not look down on anyone as sinners. In this society, many who are considered righteous, preachers, or those who claim to serve Christ are secretly entangled in sin. Yet, society holds them in high regard. This was also the mindset among the Israelites. This is why Jesus Christ told them, "...Verily I say unto you, That the publicans and the harlots go into the kingdom of God before you" (Matthew 21:31, KJV).

No matter how grievous our sins, let us seek forgiveness from God with a sincere heart. He is abundant in mercy. "Let the wicked forsake his way, and the unrighteous man his thoughts: and let him return unto the Lord, and he will have mercy upon him; and to our God, for he will abundantly pardon" (Isaiah 55:7, KJV).

Gospel Message: Bro. M. Geo Prakash

                          

No comments: