வேதாகமத் தியானம் - எண்:- 1,512
'ஆதவன்' 💚மார்ச் 28, 2025. 💚வெள்ளிக்கிழமை
"அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள்." ( லுூக்கா 16: 31)
இயேசு கிறிஸ்து கூறிய செல்வந்தனும் லாசரும் உவமையின் இறுதியில் ஆபிரகாம் செல்வந்தனிடம் கூறுவதுதான் இன்றைய தியான வசனம். இந்த வார்த்தைகள்மூலம் மேலான ஒரு சத்தியம் நமக்கு அறிவிக்கப்படுகின்றது.
இன்று பெரும்பாலான மக்கள் அதிசயம், அற்புதங்களை நாடித்தான் தேவனிடம் வருகின்றார்களேத்தவிர தேவனையோ, அவரது அன்பினையோ நாடி வருவதில்லை. உண்மையான தேவ அன்பு என்பது ஒரு குழந்தை தனது பெற்றோரை நேசித்து அவர்களோடு எப்போதும் சேர்ந்திருக்க விரும்புவதுபோன்ற விருப்பச் செயலாகும். இப்படி நாம் அவரை அன்பு செய்யும்போது அவரது கட்டளைகளுக்குக் கீழ்படிகின்றவர்களாகவும் இருப்போம். ஆம், தேவனை அன்பு செய்வது என்பது அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாகும். "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." (1 யோவான் 5 : 3) என்று வாசிக்கின்றோம்.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் மோசேமூலமும் தீர்க்கதரிசிகள் மூலமும் பல்வேறு கட்டளைகளைக் கொடுத்த தேவன் இன்று இயேசு கிறிஸ்து மூலம் அன்புக் கட்டளைகளை நமக்குத் தந்துள்ளார். அவரது திருத்தூதர்கள் வழியாக பல்வேறு படிப்பினைகளைக் கொடுத்துள்ளார். இயேசு கிறிஸ்து செல்வந்தனும் லாசரும் உவமையில் கூறுவதுபோல இந்தப் புதிய நியமங்களுக்குக் கீழ்ப்படியாமல் வெறும் அற்புதம் அதிசயம் என அலைவோமானால் செல்வந்தனைப்போல பரிதபிக்கக்கூடியவர்களாக மாறிவிடுவோம்.
ஆம் அன்பானவர்களே, மரித்தவன் உயிர்த்து எழுந்ததுபோன்ற வல்லமையான அற்புதங்களை நாம் கண்ணால் கண்டாலும் அல்லது நமது வாழ்வில் அனுபவித்தாலும் தேவனிடம் மெய்யான அன்புகூராமல் போவோமானால் அதனால் என்ன பயன்? முதலில் மோசேக்கும் தீர்க்கதரிசிகளும் கீழ்படியவேண்டும் என்று கூறப்பட்டதுபோல புதிய ஏற்பாட்டுக்கால மக்களாகிய நாம் புதிய ஏற்பாட்டு நியமங்களுக்குக் கீழ்ப்படியவேண்டியது அவசியம்.
நாம் பல்வேறு ஜெபக் கூட்டங்களில் பங்கேற்று பல்வேறு தேவ மனிதர்களது செய்திகளைக் கேட்டிருக்கலாம். அல்லது ஆராதனைகளில் கலந்துகொண்டு நற்கருணை உட்கொண்டிருக்கலாம் அனால் அவைகள் நம்மை இறுதிநாளில் இரட்சிக்க உதவாது. அவற்றை நாம் தேவனிடம் எடுத்துக்கூறி அவரது இரக்கத்தைப் பெறமுடியாது.
இதனையே இயேசு கிறிஸ்து, "அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13: 26, 27) என்றார்.
தேவனிடம் மெய்யான அன்பு இல்லாத மனிதர்கள்; தேவனது அன்பை வாழ்வில் மெய்யாக உணராத மனிதர்கள், மரித்துப்போனவன் எழுந்து வந்து நிற்பதைக் கண்ணால் கண்டாலும் அந்த அற்புதத்தைக் கைதட்டி ரசிப்பார்களேத்தவிர வேதாகம சத்தியங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார்கள். இதனையே இயேசு கூறிய உவமையில், "ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்." ( லுூக்கா 16: 29) என்று ஆபிரகாம் கூறுவதாகக் கூறினார். அதிசய அற்புதங்களுக்கு அல்ல, மாறாக தேவ வார்த்தைகளுக்கு முன்னுரிமை கொடுப்போம்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation - No. 1,512
AATHAVAN 💚 March 28, 2025 💚
Friday
"If they hear not Moses
and the prophets, neither will they be persuaded, though one rose from the
dead." (Luke 16:31)
At the end of the parable of
the rich man and Lazarus, spoken by Jesus Christ, Abraham's response to the
rich man forms today’s meditation verse. Through these words, a profound truth
is revealed to us.
Today, many people seek God
only for miracles and wonders rather than seeking Him and His love. True divine
love is like a child loving its parents and desiring to always be with them.
When we love God in such a manner, we will also obey His commandments. Yes, to
love God means to obey His commandments. As it is written, "For this is
the love of God, that we keep his commandments: and his commandments are not
grievous." (1 John 5:3)
In the Old Testament, God gave
various commandments through Moses and the prophets. Today, through Jesus
Christ, He has given us the commandment of love and has taught us many lessons
through His apostles. As Jesus states in the parable of the rich man and
Lazarus, if we ignore these new commandments and run after miracles and wonders
alone, we may end up lamenting like the rich man.
Beloved, even if we witness
extraordinary miracles, such as the resurrection of the dead, or experience
such wonders in our own lives, what benefit will they bring if we do not love
God sincerely? Just as it was said that one must obey Moses and the prophets,
we, as people of the New Testament, must obey the commandments of the New
Covenant.
We may have attended many
prayer meetings, listened to numerous sermons by godly men, and participated in
worship services and took eucharists. However, in the end, these alone will not
save us. We cannot claim them before God to obtain His mercy.
Jesus Christ Himself warned, "Then
shall ye begin to say, we have eaten and drunk in thy presence, and thou hast
taught in our streets. But he shall say, I tell you, I know you not whence ye
are; depart from me, all ye workers of iniquity." (Luke 13:26-27)
Those who do not have true
love for God and have not genuinely experienced His love in their lives will
only applaud and admire miracles, even if someone rises from the dead before
their very eyes. But they will not heed the truths of the Scriptures. This is
why Jesus, in His parable, quotes Abraham saying, "Abraham saith unto him,
they have Moses and the prophets; let them hear them." (Luke 16:29)
Let us prioritize the Word of
God over signs and wonders.
Gospel Message by: Bro.
M. Geo Prakash
No comments:
Post a Comment