INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Thursday, March 20, 2025

❤️Meditation verse - 2 கொரிந்தியர் 12 : 7 / 2 Corinthians 12:7

 வேதாகமத் தியானம் - எண்:- 1,511   

'ஆதவன்' 💚மார்ச் 27, 2025. 💚வியாழக்கிழமை

"அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது." ( 2 கொரிந்தியர் 12 : 7 )

பொதுவாக மனிதர்கள் தங்களுக்கு வரும் நோய்கள், துன்பங்களை தேவன் அளிக்கும் தண்டனையாக எண்ணுகின்றனர். வெகுசிலர் தேவன் தங்களைப் புடமிட்டு மேன்மைப்படுத்துவதற்காகத் துன்பங்களைக் கொடுத்துள்ளார் என எண்ணுகின்றனர். 

நாம் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது சிலவேளைகளில் நமக்குத் துன்பங்கள் தொடரவேச்  செய்யும். ஆனால் அதனால் நமது வாழ்க்கை சரியல்ல, ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று கலங்கவேண்டியதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஒருவேளை யோபுவைபோல நம்மைப் புடமிடவும் மேலான ஆவிக்குரிய வாழ்க்கையை நாம் அனுபவிக்கத் தகுதியுள்ளவர்கள் ஆகும்படிக்கும்  தேவன் துன்பங்களை நமது வாழ்வில் அனுமதிக்கலாம். 

ஆனால் இன்றைய தியான வசனத்தில் இவைகளுக்கு அப்பாற்பட்டக் கருத்தைத் தனது அனுபவத்தில் உணர்ந்து கொண்டதாக  அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். அதாவது, அப்போஸ்தலரான பவுலுக்கு தேவன் மேலான ஆவிக்குரிய அனுபவங்களைக் கொடுத்திருந்தார். அவர் மூன்றாம் வானம் வரை எடுக்கப்பட்டு பரலோக தரிசனத்தைப் பெற்றவர். மனிதர்கள் பேசாத மகிமையான தேவ வார்த்தைகளைக் கேட்டவர்.  இதனால் அவர் ஆவிக்குரிய பெருமை கொண்டுவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு உடலில் ஒரு முள்ளை தேவன் கொடுத்திருந்தார் என்று குறிப்பிடுகின்றார். 

"மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன். கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.  அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்". (2 கொரிந்தியர் 12:1-3)

இப்படித் தனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் தன்னைத் தான் உயர்த்தாதபடிக்குத்  தனது  மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் அவர். 

ஒருமுறை ஒரு ஆவிக்குரிய சபையில் நான் சந்தித்த பாட்டி ஒருவர் தனது குடும்பத்துத் துன்பங்களையும் தனது நோய்களையும் குறிப்பிட்டு என்னிடம், "பவுலுக்குத் தேவன் கொடுத்ததுபோன்ற முள்ளை எனக்குக் கொடுத்திருக்கிறார்" என்று புலம்பினார். ஆனால், அந்தப் பாட்டியின் மருமகளோ பாட்டியைக்குறித்துப்  பல குறைகளைக் கூறி, "அவள் ஒரு சூனியகாரக் கிழவி" என்று சபித்தாள். அந்த மருமகள் கூறுவது உண்மைதான் என்பது பலரிடம் கேட்டபோது புரிந்தது. 

ஆம் அன்பானவர்களே, நம்மில் யாரும் பவுல் பெற்றதுபோன்ற மேலான தேவ அனுபவங்களைப்  பெறவில்லை. எனவே அவரோடு நம்மை ஒப்பிட்டு,  "பவுல் அனுபவித்த முள்ளைப்போல நான் அனுபவிக்கிறேன்" என்று கூறுவோமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாக இருப்போம். 

நமது ஆவிக்குரிய வாழ்வில் துன்பங்கள் வருகின்றதென்றால், நம்மை நாமே நிதானித்துப்பார்த்துத் தவறைத் திருத்திக்கொள்ளவேண்டும். எந்தத் தவறும் செய்யாதபோதும் துன்பங்கள் தொடர்கின்றன என்றால் தேவன் நம்மைப் புடமிடுகின்றார் என்று பொருள்.  இதற்கு மேலாக, பவுல் அப்போஸ்தலருடன் நம்மை ஒப்பிட்டு நமது துன்பங்களை நியாயப்படுவதுவோமானால் நாம் பரிதபிக்கக்கூடியவர்களாகவே  இருப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்             

Bible Meditation - No. 1,511

AATHAVAN 💚 March 27, 2025 (Thursday) 💚

"And lest I should be exalted above measure through the abundance of the revelations, there was given to me a thorn in the flesh, the messenger of Satan to buffet me, lest I should be exalted above measure." (2 Corinthians 12:7, KJV)

People generally perceive sickness and suffering as God’s punishment. A few, however, consider them as trials that God allows to refine and elevate them spiritually.

At times, when we lead a spiritual life, sufferings may persist. This does not necessarily mean that our life is not right or that we have committed some sin. There can be multiple reasons behind it. Perhaps, like Job, God allows afflictions to refine us and make us worthy of experiencing a higher spiritual life.

However, today's meditation verse presents a different perspective, as Apostle Paul shares his personal experience. God had granted Paul profound spiritual revelations—he was caught up into the third heaven and had heavenly visions. He heard inexpressible words that no man could utter. To prevent him from becoming spiritually proud, God allowed a thorn in his flesh.

"It is not expedient for me doubtless to glory. I will come to visions and revelations of the Lord. I knew a man in Christ above fourteen years ago, (whether in the body, I cannot tell; or whether out of the body, I cannot tell: God knoweth;) such an one caught up to the third heaven. And I knew such a man, (whether in the body, or out of the body, I cannot tell: God knoweth;) How that he was caught up into paradise, and heard unspeakable words, which it is not lawful for a man to utter." (2 Corinthians 12:1-4, KJV)

Thus, Paul acknowledges that he was given a thorn in his flesh to keep him from being exalted due to the greatness of the revelations he had received.

Once, during a spiritual meeting, I met an elderly woman who lamented about the hardships and illnesses in her life. She said, "God has given me a thorn in the flesh, just like He did to Paul." However, her daughter-in-law accused her of being a sorceress, and upon inquiry, I realized that the accusations against her were indeed true.

Dearly beloved, none of us have received the extraordinary divine experiences that Paul had. Therefore, if we compare ourselves to him and claim, "I suffer the same thorn as Paul did," we deceive ourselves.

When we face sufferings in our spiritual life, we must examine ourselves, correct our mistakes, and seek God's guidance. If sufferings persist even when we are blameless, it means God is refining us. However, if we compare our afflictions with those of Apostle Paul and justify them as similar, we may only be fooling ourselves.

God’s Message: Bro. M. Geo Prakash                                      

No comments: