Sunday, January 14, 2024

மேசியாவைக் கண்டோம் / WE FOUND MESSIAH

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,080      💚 ஜனவரி 24, 2024 💚 புதன்கிழமை  💚 

"பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்." ( யோவான் 1 : 45 )

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அவரது உடனிருப்பையும் உணர்ந்தவர்களாக அவரை அறிவதே மேலான அனுபவம். அதாவது வெறும் அற்புதம் அதிசயங்களைக் கண்டு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொள்வதைவிட கிறிஸ்துவை உண்மையாய் வாழ்விலே அனுபவித்து அவரை அறிவதும் பிறருக்கு அறிவிப்பதும் மேலானது.

இன்றைய வசனம் பிலிப்பைப்பற்றி கூறுகின்றது. பிலிப்புவை இயேசு கிறிஸ்து, "என்னைப் பின்பற்றிவா" என   அழைக்கின்றார். உடனேயே அவரைப் பின்தொடர்ந்து சென்ற பிலிப்பு அவரோடு இருந்த அந்த ஒரு நாளிலேயே அவர்தான் மெய்யாக உலகினில் வரவேண்டிய மேசியா என்பதைக்   கண்டுகொண்டார். இயேசு கிறிஸ்து பெரிய அற்புதங்களையோ அதிசயங்களையோ பிலிப்புக்குக் காட்டவில்லை. ஆனால் கிறிஸ்துவோடு உடனிருந்த அனுபவத்தால் அவரே மேசியா என்பதைப் பிலிப்பு  கண்டுகொண்டார். 

பிலிப்பு இப்படி இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளக் காரணம் நியாயப் பிராமண நூல்களை அவர் நன்றாகக்  கற்று அறிந்திருந்ததால்தான். எனவேதான் அவர் இயேசுவைக் கண்டுகொண்ட உடனேயே நாத்தான்வேலைக் கண்டு,  "நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே." என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, இயேசுவை வேதபூர்வமாக அறிந்து அவரது உடனிருப்பையும் ருசித்தவர்கள் பிலிப்பைப் போலவே இருப்பார்கள். அவர்கள் தங்கள் கண்டு அனுபவித்த இயேசு கிறிஸ்துவை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். பிலிப்பு நாத்தான்வேலுக்கு இயேசு கிறிஸ்துவைப்பற்றி கூறியபோது அவன் நம்பவில்லை. அவன் பிலிப்புக்கு மறுமொழியாக, "நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான்." ( யோவான் 1 : 46 ) அதற்குப் பிலிப்பு: "வந்து பார்" என்றான்.

ஆம், நான் கூறுவதால் நீ நம்பவேண்டாம் நீயே வந்து பார். இதுபோலவே நாமும் இருக்கவேண்டும் அன்பானவர்களே. பாஸ்டர்களும் குருக்களும் கூறுவதால் அல்ல, மாறாக நாம் அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்து அனுபவிக்கவேண்டும். பிலிப்பு நாத்தான்வேலுக்கு பெரிய வேத  விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. "வந்து பார்" என்று கூறி நாத்தான்வேலைக் கிறிஸ்துவிடம் அழைத்து வருகின்றார்.  

பிலிப்பைப் போல நாமும் இயேசு கிறிஸ்துவை அறியவேண்டும். ஆதியாகமம் முதல் மல்கியா முடிய பழைய ஏற்பாட்டு நூல்களில் இயேசு கிறிஸ்துவைப்பற்றி கூறப்பட்டுள்ளது. பிலிப்பைப்போல நாமும் அதனைக் கண்டுகொள்ளவேண்டும். அப்படிக் காணும்போது தீர்க்கதரிசிகளின் மூலம் தேவன் பழைய ஏற்பாட்டில் பேசியுள்ளதை அறிய அறிய நமக்கு ஆச்சரியமும் கிறிஸ்துவின்மேல் விசுவாசமும் அதிகரிக்கும். பிலிப்பைப் போல நாமும் உறுதியாக அவரே மேசியா என்று பிறருக்கு அறிவிக்கத் துவங்கிவிடுவோம். 

கிறிஸ்துவிடமிருந்து அதிசயங்களைப் பெற்று அவர்மேல் விசுவாசம் கொள்வதைவிட அனுபவத்தால் அவரைக் கண்டு அவர் நம்மோடு இருந்து செயல்படுவதை உணர்ந்துகொள்வதே மேலானது.  அப்போது நாமும் பிலிப்பைப்போல, "நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே". என்று உறுதியாக அறிக்கையிடுவோம். மட்டுமல்ல, அப்போது, வேறு யாரையும் உதவிக்கு அழைத்து ஜெபிக்கமாட்டோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்        

                WE FOUND MESSIAH 

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION  No:- 1,080   💚 January 24, 2024 💚 Wednesday 💚

"Philip findeth Nathanael, and saith unto him, We have found him, of whom Moses in the law, and the prophets, did write, Jesus of Nazareth, the son of Joseph." (John 1: 45)

The best experience is to know the Lord Jesus Christ and to feel His presence. In other words, it is better to experience Christ in real life and to know Him and to announce Him to others than just seeing miracles and believing in Christ.

Today's verse is about Philip. Jesus Christ calls Philip, "Follow me." Philip, who immediately followed him, found out that he was indeed the Messiah who was to come into the world on that one day he was with him. Jesus Christ did not show Philip great miracles or wonders. But through his experience with Christ, Philip knew that He was the Messiah.

The reason why Philip recognized Jesus in this way was because he was well-learned and familiar with the Old Testament texts. That is why immediately after he found Jesus, he saw Nathanael and said, "We have found him of whom Moses and the prophets wrote in the books, this is Jesus of Nazareth, the son of Joseph."

Beloved, those who know Jesus scripturally and taste his presence are like Philip. They will be eager to tell others about the Jesus Christ they have seen and experienced. When Philip told Nathanael about Jesus Christ, he did not believe him. He answered Philip, "Can there any good thing come out of Nazareth? (John 1: 46) And Philip said: "Come and see."

Yes, don't believe what I say, come and see for yourself. So should we, dear ones. Not because pastors and priests say it, but because we need to know and experience Him personally. Philip was not giving Nathanael great scriptural explanations. He brings Nathanael to Christ by saying, "Come and see."

Like Philip, we need to know Jesus Christ. Jesus Christ is mentioned in the Old Testament books from Genesis to Malachi. Like Philip, we must see it. When we see what God has spoken through the prophets in the Old Testament, we will wonder and our faith in Christ will increase. Like Philip, we will begin to proclaim to others that He is the Messiah.

It is better to see Him by experience and realize Him. Then we shall also proclaim like Philip, "we found him of whom Moses and the prophets wrote in the law, Jesus of Nazareth, the son of Joseph." We will definitely report that. Moreover, then, we will not call anyone else for help and pray to them.

God’s Message :- Bro. M. Geo Prakash

No comments: