Tuesday, January 09, 2024

அகந்தை / PRIDE

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,078      💚 ஜனவரி 22, 2024 💚 திங்கள்கிழமை 💚 


"அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்." ( தானியேல் 4 : 37 )

இன்றைய வசனம் பாபிலோனின் மன்னன் நேபுகாத்நேச்சார் தனது அனுபவத்தில் உணர்ந்து கூறியவை. நாம் வேதாகமத்தில்  பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார் என்று வாசிக்கின்றோம். தேவன் இப்படி எதிர்த்து நின்றாலும் அதற்கு ஈடாக அவர் கிருபையினை அளிக்கின்றார். அதாவது அவர் அதிகமான கிருபையினை அளிப்பதால் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கின்றார்.       

இதனை நாம் "அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது." ( யாக்கோபு 4 : 6 ) என்று வாசிக்கின்றோம். அதாவது நாம், "என்னால்தான் இது சாத்தியமாயிற்று" என்று பெருமை பாராட்டாமல் அவரது கிருபையால்தான் எல்லாம் சாத்தியமாயிற்று என்று கருதி வாழவேண்டும்.

பாபிலோன் மன்னன் நேபுகாத்நேச்சார் தனது அரண்மனையில் உலாவும்போது அவனுக்கு  அவனது வல்லமையை நினைத்துப் பெருமை வந்தது. அதனால் அவன், "இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரண்மனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்." ( தானியேல் 4 : 30 ) ஆனால் அவன் இப்படிச் சொல்லவும் தேவன் அவனைச் சிறுமைப்படுத்தி, மாட்டைப்போலப்  புல்லை மேய வைத்தார். 

அப்படிப் புல்லை மேய்ந்து, தான் ஒன்றுமில்லை எல்லாம் தேவனால்தான் என்பது உணர்ந்துகொண்டான். அப்போது புத்தித் தெளிந்தவனாகக் கூறுகின்றான், "பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்." ( தானியேல் 4 : 35 )

அன்பானவர்களே, எந்தச் சூழ்நிலையிலும் பெருமை நம்மை மேற்கொள்ளாமல் காத்துக்கொள்வோம். அவருடைய செயல்களெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; பெருமையுடனும் அகந்தையாகவும் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும். 

இன்று நாம் நல்ல பதவியில் இருக்கலாம், நல்ல உடல் நலத்துடன் இருக்கலாம், செல்வச் செழிப்பில் வாழலாம், உடல் அழகைப் பெற்றிருக்கலாம். ஆனால் அதற்காக மற்றவர்களை அற்பமாகவும் ஏளனமுமாக எண்ணவேண்டாம். கர்த்தரது கிருபையால் இதனை நாம் பெற்றுள்ளோம் என்ற தாழ்மை எப்போதும் நமக்கு இருக்கவேண்டியது அவசியம். ஒரே நொடியில் நாம் நேபுகாத்நேச்சாரைபோல புல்லைத்தின்னும் நிலைமைக்கு வரலாம்.

அவர் பெருமையுள்ளவர்களை தாழ்த்துகின்றவர் மட்டுமல்ல, தாழ்மையுள்ளவர்களை உயர்த்துகின்றவர். நாம் அற்பமாக எண்ணும்  ஒருவரை தேவன் மிகவே உயர்த்தி மகிமைப்பட வைக்கவும் முடியும். "அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; " ( 1 சாமுவேல் 2 : 8 )

எனவே அன்பானவர்களே, நாம் எவ்வளவு பெரிய பதவியிலோ, செல்வதிலோ, உடல் வலிமையிலோ, அழகிலோ  இருந்தாலும் தாழ்மை குணத்தை நாம் சுதந்தரித்துக் கொள்வோம். ஏனெனில், தேவனுடைய வழிகள் நியாயமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களை ஒரே நொடியில்  தாழ்த்த அவராலே ஆகும். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்            

                       PRIDE

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION - 1,078        💚January 22, 2024 💚 Monday 💚

"all whose works are truth, and his ways judgment: and those that walk in pride he is able to abase." (Daniel 4: 37)

Today's verse is what Nebuchadnezzar, the king of Babylon, uttered after realizing it in his experience. We read in the Bible that God opposes the proud. Even though God resists the proud like this, He gives grace in return. That is, He opposes the proud because He bestows abundant grace.

We read this "But he giveth more grace. Wherefore he saith, God resisteth the proud, but giveth grace unto the humble." (James 4: 6) That is, we should live with the assumption that everything is possible only because of His grace, without boasting, "This was made possible only because of me."

Babylonian king Nebuchadnezzar was proud of his power as he strolled through his palace. And so, he said, "The king spake, and said, Is not this great Babylon, that I have built for the house of the kingdom by the might of my power, and for the honour of my majesty?" (Daniel 4: 30) As soon as he said this, God humbled him and made him graze on grass like a cow.

As he grazed the grass, he realized that he is nothing and everything is because of God. Then the enlightened one says, "And all the inhabitants of the earth are reputed as nothing: and he doeth according to his will in the army of heaven, and among the inhabitants of the earth: and none can stay his hand, or say unto him, What doest thou?" (Daniel 4: 35)

Beloved, let us guard ourselves against pride in any situation. All his works are truth, and his ways are justice; It is He who humbles those who walk proudly and arrogantly.

Today we may be in a good position, be in good health, live in wealth and have physical beauty. But don't look down on others for that. We must always be humble that we have received this by God's grace. In an instant we can be like Nebuchadnezzar.

He not only humbles the proud but exalts the humble. God can greatly exalt and glorify someone we think little of. "He raiseth up the poor out of the dust, and lifteth up the beggar from the dunghill, to set them among princes, and to make them inherit the throne of glory:"(1 Samuel 2: 8)

Therefore, dear ones, no matter how great our position, wealth, physical strength or beauty, let us inherit the character of humility. For God's ways are just; He is the one who brings down in a moment those who walk proudly.

God’s Message :- Bro. M. Geo Prakash                                       

No comments: