'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,075 💚 ஜனவரி 19, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚
"நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டியதில்லை" ( 1 யோவான் 2 : 27 )
நாம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குரியவர்களாக மாறும்போது அவர் தனது பரிசுத்த ஆவியானவரை நமக்கு அளிக்கின்றார். இந்தப் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் நம்மைச் சரியான பாதையில் நடத்துகின்றது. இயேசு கிறிஸ்து இதனையே, இன்றைய வசனத்தில் தொடர்ந்து கூறுகின்றார், "......அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக." ( 1 யோவான் 2 : 27 )
இன்று கிறிஸ்தவத்தில் இத்தனை ஆயிரம் பிரிவினைகள் இருக்க மூலகாரணம் ஆவியானவருக்குச் செவிகொடுக்காமல் ஆளாளுக்கு தங்கள் மனதில் தோன்றியபடி ஒரு வேத விளக்கத்தைக்கொடுத்து அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனிதர்களைத் தங்களுக்குச் சேர்த்துக்கொள்வதே.
வேதாகமம் பரிசுத்த ஆவியானவரால் பரிசுத்த மனிதர்கள்மூலம் எழுதப்பட்டது. எனவே, வேதாகமத்துக்குச் சரியான விளக்கம் ஆவியானவர்தான் தரமுடியும். எனவே நாம் மனிதர்களது போதனைகளுக்கல்ல, ஆவியானாவரின் வழி நடத்துதலுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். தேவையற்ற உண்மையில்லாத விளக்கங்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகமில்லாமல் வெறும் இறையியல் கல்வி மட்டும் கற்ற போதகர்களால் அளிக்கப்படுவதே இன்றைய பெரும்பாலான குழப்பங்களுக்குக் காரணம்.
இயேசு கிறிஸ்து கூறினார், "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 ) ஆம், உண்மையின் ஆவியாகிய அவர் வரும்போது அனைத்து உண்மைகளுக்குள்ளும் நம்மை நடத்திச் செல்வார்.
மட்டுமல்ல, "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்." ( யோவான் 16 : 8 )
அன்பானவர்களே, எனவே நாம் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெறவேண்டியது அவசியமாகும். ஆவியானவரின் வழி நடத்துதல் இல்லாமல் நாம் மேலான ஆவிக்குரிய வாழ்வு நடத்தமுடியாது. மட்டுமல்ல, "நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டியதில்லை" என்றபடி ஆவியானவரே நமக்குத் போதித்து நடத்துவார். தவறான போதனைகளை, பிரசங்கங்களைக் கேட்கும்போது அது தவறு என்று நமக்கு உணர்த்துவார்.
ஆவியானவர் இப்படி நம்மை உணர்த்துவது தவறான கருத்துக்களைக் கூறுபவர்களிடம் வாக்குவாதம் செய்வதற்கல்ல, மாறாக நாம் நமது ஆத்துமாவைக் காத்துக்கொள்வதற்காக. எனவே, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்துக்காகத் தாகத்தோடு வேண்டுதல் செய்வது நமது கடமையாகும்.
"தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்." ( ஏசாயா 44 : 3 ) என்கின்றார் பரிசுத்தரான கர்த்தர்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்
ANOINTMENT
'AATHAVAN' 📖✝ BIBLE MEDITATION -
No:- 1,075 💚
January 19, 2024 💚
Friday 💚
"But
the anointing which ye have received of him abideth in you, and ye need not
that any man teach you: " ( 1 John 2 : 27 )
When we are forgiven of our
sins and become Christ's, He gives us His Holy Spirit. This anointing of the
Holy Spirit guides us on the right path. Jesus Christ continues to say this in
today's verse, "but as the same anointing teacheth you of all
things, and is truth, and is no lie, and even as it hath taught you, ye shall
abide in him." (1 John 2: 27)
The root cause of the
thousands of divisions in Christianity today is not heeding the voice of the Holy
Spirit. That is, the so-called Christian
preachers give a scriptural interpretation as it appears in their minds and
make people accept them without listening to the Spirit.
The Bible was written by the
Holy Spirit through holy men. Therefore, only the Spirit can give the correct
interpretation of the Scriptures. So, we must yield to the guidance of the
Spirit and not to the teachings of men. Much of today's confusion is caused by
unnecessary and untrue explanations given by preachers who are only
theologically educated without the anointing of the Holy Spirit.
Jesus Christ said, "Howbeit
when he, the Spirit of truth, is come, he will guide you into all truth: for he
shall not speak of himself; but whatsoever he shall hear, that shall he speak:
and he will shew you things to come." (John 16: 13) Yes,
when, the Spirit of truth, comes, He will lead us into all truth.
Not only that, "And
when he is come, he will reprove the world of sin, and of righteousness, and of
judgment:" (John 16: 8)
Beloved, therefore it is
necessary for us to receive the anointing of the Holy Spirit. Without the
guidance of the Spirit, we cannot lead a more spiritual life. Not only that,
but the Spirit himself will teach us, saying, "The anointing you received
from Him remains in you, and no one needs to teach you." He will make us
realize that when we listen to false teachings and sermons, it is wrong.
The Spirit prompts us in
this way, not to argue with those who assert false teachings, but to guard our
souls. Therefore, it is our duty to pray with thirst for the anointing of the
Holy Spirit.
"For I
will pour water upon him that is thirsty, and floods upon the dry ground: I
will pour my spirit upon thy seed, and my blessing upon thine
offspring:" (Isaiah 44: 3)
God’s Message :- Bro. M. Geo
Prakash
No comments:
Post a Comment