கர்த்தரைத் தேடுவது / SEEKING THE LORD

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,079        💚 ஜனவரி 23, 2024 💚 செவ்வாய்க்கிழமை  💚 

"கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்." ( ஆமோஸ் 5 : 4 )

கர்த்தரைத் தேடுவது என்பது உண்மையான மெய் அன்போடு அவரை அறிந்துகொள்ளவேண்டும் எனும் ஆவலில் தேடுவதைக் குறிக்கின்றது. என்னைத் தேடுங்கள்; என்னிடமிருந்து வரும் ஆசீர்வாதங்களையல்ல, என்கிறார் தேவனாகிய கர்த்தர். அப்படி அவரைத் தேடும்போது நமது  ஆத்துமா  பிழைக்கும். 

ஒரு பெண்ணை உண்மையாய்க்  காதலிக்கும் மனிதன் அந்தப் பெண்ணை நேசிப்பதால் அவள்  தனக்கு உரியவளாகவேண்டும் என்று எண்ணுவானேத் தவிர அவளை மணமுடித்தால் தனக்கு எவ்வளவு வரதட்சணை கிடைக்கும் என்று கணக்குப்போட்டு காதலிக்கமாட்டான். அப்படிக் காதலிப்பது உண்மையான காதலுமல்ல. ஆனால் இன்று இயேசு கிறிஸ்துவை அன்புசெய்கிறேன் என்று கூறிக்கொள்ளும் பலரும் அவரிடமிருந்து என்ன கிடைக்கும் என்றே எதிர்பார்த்து அவரை அன்பு செய்கின்றார். எனவே இப்படி அன்பு செய்வது கிறிஸ்துவை மெய்யாக அன்பு செய்வதல்ல.

"கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்." (சங்கீதம் 105: 4) என்று சங்கீதத்தில் வாசிக்கின்றோம். அவரையும் அவர் சமூகத்தையும் ஒருநாள் அல்ல, மாறாக தினமும் தேடவேண்டும் என்று இந்த வசனம் கூறுகின்றது. காரணம், மெய்யான ஒளியான அவர் இல்லாத வாழ்வு    இருளடைந்த வாழ்வாக அமைந்துவிடும்.

மேலும், உண்மை அன்பில்லாமல் கர்த்தரால் கிடைக்கும் உலக ஆசீர்வாதத்தைத் தேடுபவர்கள் பெரும்பாலும் ஊர் ஊராக கோவில் கோவிலாக அலைவது நாம் காணக்கூடிய ஒன்று. ஆனால் இது அர்த்தமற்றது. இதனையே ஆமோஸ் தீர்க்கதரிசி மூலம் தேவன் கூறுகின்றார், "பெத்தேலைத் தேடாதேயுங்கள், கில்காலிலும் சேராதேயுங்கள், பெயெர்செபாவுக்கும் போகாதேயுங்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான ஸ்தலமாகவும் போகும்."( ஆமோஸ் 5 : 5 ) ஆம் அன்பானவர்களே, தேவன்மேல் உண்மை அன்பு இல்லாத வாழ்வு நம்மை  இப்படி அலையவைக்கும். 

நாம் கர்த்தரைத் தேடி எங்கும் அலையவேண்டாம். நாம் இருக்குமிடத்தில் இருந்துகொண்டே அவரை அறியலாம், வழிபடலாம், அவரது பிரசன்னத்தை உணரலாம். ஆம், எங்கும் நிறைந்திருக்கும் கர்த்தரை நாம் எங்கும் தொழுதுகொள்ளலாம். இதனையே சமாரியா பெண்ணிடம் இயேசு கூறினார், "ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது." ( யோவான் 4 : 21 )

அப்படி நாம் ஏன் அவரைத் தேடவேண்டும்? இன்றைய வசனம்  அதற்கும் பதில் கூறுகின்றது, "அப்பொழுது பிழைப்பீர்கள்." என்று. அதாவது நமது வாழ்வில் கர்த்தர் இல்லையானால் நாம் பிழைக்கமுடியாது. நாம் எவ்வளவு சொத்து சுகங்களோடு வாழ்ந்தாலும் அது மெய்யான உயிருள்ள வாழ்வாக இருக்காது. நாம் இந்தப் பூலோக வாழ்விலும், மறுமையிலும் பிழைத்து  வாழ வேண்டுமானால் அவரைத் தேடவேண்டியதும் அவர் நம்மோடு இருக்கவேண்டியதும் அவசியமாகும். 

உலக ஆசீர்வாதங்களுக்காக தேவனைத் தேடி வாழ்பவர்களுக்கு அவரது பிரசன்னம் வாழ்வில் இருப்பதையோ தேவ பிரசன்னம் வாழ்வில் இல்லாமல் போவதையோ கண்டுணர முடியாது. உண்டு, உறங்கி, வேலைக்குப் போவதுபோல ஜெபத்தையும் ஆலய வழிபாட்டையும் அன்றாடப் பணிபோலச் செய்துகொண்டே இருப்பார்கள்.  ஆனால் கர்த்தரைத் தேடிக்  கண்டுபிடித்தார்களுக்கு அவரது உடனிருப்பும் அது இல்லாமல் போவதும் தெளிவாகவேத்  தெரியும்.

புதிய ஏற்பாட்டின்படி விசுவாச மார்க்கத்தாராகிய நாம்தான் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். எனவே, நமக்காகவே தேவன்  இதனைக் கூறுகின்றார், "இஸ்ரவேல் வம்சத்தாரே என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்." அனுதினமும் அவரைத் தேடுவோம். அவரது பிரசன்னத்தில் களிகூர்ந்து மகிழ்வோம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்            

                SEEKING THE LORD

‘AATHAVAN' 📖 Vedagam Dhyanam - No:- 1,079 💚 January 23, 2024 💚 Tuesday 💚

"For thus saith the LORD unto the house of Israel, Seek ye me, and ye shall live:" (Amos 5: 4)

Seeking the Lord means seeking to know Him with genuine love. Look for me; Not blessings from me, says the Lord God. When we seek Him like that, our soul will survive.

A man who truly loves a woman deserves that she should be his own because he loves her, but he does not fall in love by calculating how much dowry he will get if he marries her. Loving like that is not true love. But many who claim to love Jesus Christ today love Him expecting what they will get from Him. So, loving like this is not really loving Christ.

"Seek the LORD, and his strength: seek his face evermore." (Psalms 105: 4) we read in the Psalms. This verse tells us to seek him and his community not once, but daily. The reason is that life without Him, the true light, will be a life of darkness.

Also, what we see is that those who seek worldly blessings from the Lord without true love often wander from town to town and temple to temple. But this is pointless. This is what God says through the prophet Amos, "But seek not Bethel, nor enter into Gilgal, and pass not to Beersheba: for Gilgal shall surely go into captivity, and Bethel shall come to nought.' (Amos 5: 5) Yes dear, life without true love for God will make us wander like this.

We should not wander anywhere in search of God. We can know Him, worship Him, feel His presence right where we are. Yes, we can worship the omnipresent Lord anywhere. This is what Jesus said to the Samaritan woman, "Woman, believe me, the hour cometh, when ye shall neither in this mountain, nor yet at Jerusalem, worship the Father." (John 4: 21)

Why should we seek Him? Today's verse answers that too, "Then you shall live." that. That is, if there is no Lord in our lives, we cannot survive. No matter how many possessions we live with, it is not a truly living life. If we want to survive in this worldly life and in the hereafter, it is necessary to seek Him and for Him to be with us.

Those who live in search of God for worldly blessings cannot find His presence in their lives or realize the absence of God's presence in their lives. They eat, sleep, go to work and do prayer and temple worship as a daily routine. But those who seek and find the Lord know clearly His presence and His absence.

According to the New Testament we believers are spiritual Israelites. Therefore, God says this for us, “saith the LORD unto the house of Israel, Seek ye me, and ye shall live:" Let us rejoice in His presence.

God’s Message :- Bro. M. Geo Prakash                                      

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்