Friday, January 05, 2024

நிச்சயமான கிருபை / SURE MERCIES

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,072     💚 ஜனவரி 16, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚 


"உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்." ( ஏசாயா 55 : 3 )

அன்பானவர்களே, இன்றையவசனம் நாம் தேவனது வார்த்தைகளுக்கு  முற்றிலும் செவிசாய்த்து நடக்கவேண்டும் என்பதனை எடுத்துக்கூறுகின்றது. செவியைச் சாய்த்து என்னிடம் வாருங்கள் என்பது எனது  மேலான கட்டளை.

"என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள்" என்று இன்றைய வசனத்தில் நாம் வாசிக்கின்றோம். அதாவது நாம் முதலில் நாம் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து அவரிடம் செல்லவேண்டும்.  ஏனெனில் தேவன் ஏற்கெனவே எழுதப்பட்ட கட்டளைகளின்படி மட்டும் எப்போதும் நம்மை நடத்துவதில்லை. மாறாக பரிசுத்த ஆவியானவர் மூலம் அவர் நித்தம் நம்மை நடத்துகின்றார். 

எனவே முதலில் நமது ஆவி, ஆத்துமா சரீரங்களை அவருக்கு ஒப்புக்கொடுத்து ஆவியானவர் நடத்தும் வழியில் நடக்கவேண்டும். அதுபோல   தேவ வார்த்தைகளை வாசிப்பதும் கேட்பதும் தவிர, அவைகளின்படி  நடக்கவேண்டும்.  

அப்படி நாம் நடக்கும்போது "தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்." என்கிறார் கர்த்தர். தாவீதுக்கு அருளிய கிருபைதான் என்ன? அது வாக்களிக்கப்பட்ட கிறிஸ்து அவரது சந்ததியில் பிறந்தது. தாவீதின் மகன் என்று கிறிஸ்து  அழைக்கப்பட்டது தேவன் அவருக்குப் பாராட்டிய கிருபை. 

மேலும், தாவீது பல்வேறு பாவங்களை செய்தார். விபச்சாரம் அதனைத் தொடர்ந்த கொலை,  மட்டுமல்ல, மனித இரத்தத்தை அதிகம் சிந்தினார் (அதிகமான கொலைகள்). எனவே தேவனே அவர் தனக்கு ஆலயம் கட்டவேண்டாம்  என்று கட்டளையிட்டார்.  ஆனால் அப்படி இருந்தும் தேவன் அவர்மேல்கொண்ட கிருபையினை விட்டுவிடவில்லை. தாவீதை நேசித்தார். இவையெல்லாம் தாவீதுக்குத் தேவன் அருளிய கிருபைகள். 
 
இப்படி தாவீது தனது ஆவிக்குரிய வாழ்வில் அழிந்திடாமல்  நித்திய கிருபையினை தேவன் அவருக்கு அளித்தார். அதே கிருபையினை உங்களுக்கும் அருள்வேன் என்கிறார் கர்த்தர். இதனையே, "இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக் குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம் பற்றினார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 13 : 34 ) என்று வாசிக்கின்றோம்.

இதனை வாசித்துவிட்டு, நாமும் தாவீதைப்போல பாவம் செய்துவிட்டு மன்னிப்பு கேட்கலாம் என்று பொருள் கொண்டுவிடக்கூடாது. மாறாக தேவ கிருபைக்கு நாம் வேண்டுதல்செய்யவேண்டும். நாம் கிருபையால்தான் இரட்சிப்பைப் பெறுகின்றோம். 

மேலும், இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொண்டுள்ளோம் என்று கூறி விசுவாசத்தோடு ஆலயங்களுக்கு வரும் எல்லோரும் இரட்சிப்பு எனும் மீட்பு அனுபவத்தைப் பெறுவதில்லை. தேவனது கிருபையினால்தான் நாம் அந்த அனுபவத்தைப் பெறுகின்றோம். எனவேதான் பவுல் அப்போஸ்தலர்,  "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;" ( எபேசியர் 2 : 8 ) என்று கூறுகின்றார். 

கட்டளைகளுக்குக் கீழ்படிவதால் மட்டும் நாம் நீதிமானாக முடியாது. கிறிஸ்து இயேசுவினால் உண்டான கிருபையினால்தான் நாம் இரட்சிப்பு அடைகின்றோம்.  "எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின." ( யோவான் 1 : 17 ) எனவே நாமும், "ஆண்டவரே, தாவீதுக்கு அளித்த கிருபையினைப்போல எனக்கும் கிருபைசெய்யும் என்று வேண்டுவோம். அவரது கிருபையினால் மீட்பு அனுபவம் பெறும்போதே நாம் வெற்றியுள்ள கனிதரும் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ முடியும்.  எனவே நாமும், "ஆண்டவரே, தாவீதுக்கு அளித்த கிருபையினைப்போல எனக்கும் கிருபைசெய்யும் என்று வேண்டுவோம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்     

                  SURE MERCIES

'AATHAVAN'📖BIBLE MEDITATION - No:- 1,072    January 16, 2024 💚 Tuesday 💚

"Incline your ear, and come unto me: hear, and your soul shall live; and I will make an everlasting covenant with you, even the sure mercies of David." ( Isaiah 55 : 3 )

Beloved, today's verse tells us that we must obey God's words and walk accordingly. Listen and come to me is God’s supreme command.

"Come unto me: hear," we read in today's verse. That means we must first surrender ourselves to Him and go to Him. Because God does not always lead us according to pre-written commandments. Rather, He guides us eternally through the Holy Spirit.

So, first of all we should surrender our spirit, soul and body to Him and walk in the way of His Spirit. Similarly, apart from reading and listening to God's words, we must act according to them. When we walk like that, " I will make an everlasting covenant with you, even the sure mercies of David." says the Lord. What is the grace given to David? It was in his seed that the promised Christ was born. That Christ was called the son of David was a grace bestowed upon him by God.

Also, David committed various sins. Not only was adultery followed by murder, more human blood was shed by him (more murders). So, God commanded him not to build a temple. But even so, God did not leave his grace. He loved David. These are all graces that God bestowed on David.

In this way, David was not destroyed in his spiritual life and God gave him eternal grace. I will give you the same grace, says the Lord. This is also mentioned, And as concerning that he raised him up from the dead, now no more to return to corruption, he said on this wise, I will give you the sure mercies of David.” ( Acts 13 : 34 )

After reading this, we should not think that we can sin like David and ask for forgiveness. Instead, we should pray for God's grace. We are saved by grace.

Also, not everyone who comes to churches claiming to have faith in Jesus Christ will experience salvation. It is by God's grace that we get that experience. That is why the apostle Paul said, "For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God:" (Ephesians 2: 8) 

We cannot be righteous just by obeying the commandments. We are saved by the grace of Christ Jesus. "For the law was given through Moses, but grace and truth came through Jesus Christ." (John 1: 17) So we also pray, "Lord, be gracious to me as you were to David. We can live a successful Christian life when we experience salvation by His grace." So we also pray, "Lord, be gracious to me as you were to David.

God's Message :- Bro. M. Geo Prakash                                        

No comments: