இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Tuesday, January 30, 2024

உயிர்தெழுதலுக்குத் தகுதி / QUALIFY FOR RESURRECTION

 ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,089        💚 பிப்ரவரி 02, 2024 💚 வெள்ளிக்கிழமை  💚 

"அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கு...," ( பிலிப்பியர் 3 : 10 )

அப்போஸ்தலரான பவுல் தனது ஆவிக்குரிய வாழ்வின் இலக்கு எது என்பதை இன்றைய வசனத்தில் குறிப்பிடுகின்றார். அதாவது, கிறிஸ்துவின் பாடுகள் தன்னை அவரோடு எப்படி ஐக்கியப்படுத்தியுள்ளது என்பதனையும் அவரது உயிர்தெழுதலின் வல்லமையினையும் அறிந்து அவரது மரணத்துக்குத் தானும் ஒப்பாகி எப்படியாவது உயிர்தெழுதலுக்குத் தகுதியுள்ளவர் ஆகவேண்டும் என்பதே தனது நோக்கம் என்கின்றார்.. 

கிறிஸ்துவின் மரணம் நாம் பாவத்துக்கு மரிப்பதைக் குறிக்கின்றது. உயிர்த்தெழுதல் பாவத்துக்கு விலகி வாழ்வதைக் குறிக்கின்றது.  "கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்." ( ரோமர் 14 : 9 ) இங்கு மரித்தல் உயிர்தல் எனும் வார்த்தைகள் ஆவிக்குரிய பொருளில் கூறப்பட்டுள்ளன.  ஆவிக்குரிய வாழ்வில் மரித்திருப்பவர்களுக்கும் உயிரோடு இருப்பவர்களுக்கும் அவரே ஆண்டவர். எனவேதான் ஆவியில் மரித்திருப்பவர்கள் உயிரடைந்து அவை அறியவேண்டியது அவசியமாய் இருக்கிறது. 

இப்படிக்  கிறிஸ்துவின் வல்லமையை அடைந்திட முயலுகின்றேனேத்  தவிர அதனை இன்னும் தான் பிடித்துக்கொள்ளவில்லை என்று கூறும் பவுல் அடிகள் அதனை அடைந்திடத் தான் என்ன செய்கின்றேன் என்பதனையும் இப்படிக் கூறுகின்றார்;-  "சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்." ( பிலிப்பியர் 3 : 13, 14 )

ஆம், நமது ஆவிக்குரிய பயணம் ஒரு தொடர் பயணம். அந்த பயணத்தில் நாம் பவுல் அப்போஸ்தலர் கூறுவதுபோல பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடிச் செல்பவர்களாக இருக்கவேண்டும். 

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வை நாம் ஆரம்பிக்குமுன் வாழ்ந்த பழைய பாவ வாழ்க்கையின் செயல்களை நாம் மறந்துவிடவேண்டும். அவற்றை விட்டுவிடவேண்டும். அவற்றை முற்றிலும்  மறந்து மகிமையான கிறிஸ்துவின் பந்தயப்பொருளை மட்டுமே நாடி நாம் ஆர்வமாகத் தொடரவேண்டும். தான் அப்படி கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர்வதாகக் கூறுகின்றார். 

ஆவிக்குரிய வாழ்வில் நாம் தேறினவர்கள் என்றால் இப்படியே இருப்போம். இல்லாவிட்டால் வெறுமனே உலக ஆசைகளை நிறைவேற்றிட ஜெபித்துக்கொண்டு ஆத்துமாவை இழந்தவர்களாகவே இருப்போம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்." ( பிலிப்பியர் 3 : 15 )

எனவே அன்பானவர்களே, எப்படியாவது அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும்  மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கு முயற்சி செய்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


                 QUALIFY FOR RESURRECTION 

‘AATHAVAN' 📖 BIBLE MDITATION No :- 1,089 💚 February 02, 2024 💚 Friday 💚

"That I may know him, and the power of his resurrection, and the fellowship of his sufferings, being made conformable unto his death;" (Philippians 3: 10)

In today's verse, the apostle Paul mentions the goal of his spiritual life. That is, he says that his purpose is to become like Christ in his death and become somehow worthy of resurrection by knowing how Christ's sufferings have united him with him and the power of his resurrection.

Here, Christ's death means our death to sin. Resurrection means turning away from sin. "For to this end Christ both died, and rose, and revived, that he might be Lord both of the dead and living." (Romans 14: 9) Here the words death and resurrection are said in a spiritual sense. He is the Lord of the dead and the living in the spiritual life. That is why it is necessary for those who are dead in spirit to come alive and know them.

Paul, who says that he is trying to attain the power of Christ, but has not yet grasped it, says what he does to reach it; - Brethren, I count not myself to have apprehended: but this one thing I do, forgetting those things which are behind, and reaching forth unto those things which are before, I press toward the mark for the prize of the high calling of God in Christ Jesus." (Philippians 3: 13, 14)

Yes, our spiritual journey is a continuous journey. In that journey, we should be those who forget the things that are behind and seek the things that are ahead, as the Apostle Paul says.

Yes beloved, we must forget the deeds of the old sinful life that we lived before we started the spiritual life. Let them go. We must forget them altogether and pursue only the glorious prize of Christ. He says that he continues towards the goal for the goal of the supreme calling that God has called in Christ Jesus.

If we are chosen in the spiritual life, we will be like this. Otherwise, we will be soulless, simply praying to fulfill worldly desires. That is why the apostle Paul says, "Let us therefore, as many as be perfect, be thus minded: and if in anything ye be otherwise minded, God shall reveal even this unto you." (Philippians 3: 15)

Therefore, beloved, let us endeavor to somehow know Him and the power of His resurrection and the unity of His sufferings, and to become worthy of His death, and yet to be raised from the dead.

God’s Message :- Bro. M. Geo Prakash

No comments: