இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Sunday, January 07, 2024

அடைக்கலான் குருவிகளைவிட மேலானவர்கள்/ BETTER VALUE THAN SPARROWS

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,073    💚 ஜனவரி 17, 2024 💚 புதன்கிழமை 💚 

"ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிர்களெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன." ( மத்தேயு 10 : 29, 30 )

பல்வேறு பிரச்சனைகள், துன்பங்கள், கடன்பாரங்கள், நோய்கள் நம்மைப் பாதிக்கும்போது நமது விசுவாசம் குறைவுபடுகின்றது. தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்தும் எனக்கு ஏன் இந்தத் துன்பங்களும் பிரச்சனைகளும் என்று எண்ணிக் கலங்குகின்றோம். சிலர் இந்தத் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை எனும் விபரீத முடிவைத் தேடுகின்றனர். 

இப்படி ஒருவேளைக் கலங்கிக்கொண்டிருப்பீர்களென்றால் இயேசு கிறிஸ்து இன்று தரும் ஆறுதல் வார்த்தைகள் நிச்சயமாக இருதயத்தைத் தேற்றும்.  வானில் பறக்கும் பறவைகளை நாம் பார்க்கின்றோம். அவை அழகாகச்  சிறகடித்துச் செல்வதை ரசிக்கின்றோம்.  அவை அனைத்தும் பிதாவின் சித்தப்படியே அப்படிப் பறக்கின்றன.   அப்படி அவரது சித்தமில்லாமல் இருக்குமானால் அவை கீழே விழுந்துவிடும்.

அதுபோல நமது தலையிலுள்ள கோடிக்கணக்கான முடிகளை அவர் எண்ணிக்  கணக்கு வைத்துள்ளார். ஆங்கில மொழி பெயர்ப்பில், "hairs of your head are all numbered." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நாம் வீடுகளுக்கு வீட்டு எண்  கொடுப்பதுபோல ஒவ்வொரு தலை  முடிக்கும் எண்  கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பொருள் கொள்ளலாம். நாம் தலைவாரும்போது பல முடிகள் விழுவதுண்டு. எந்த எண் முடி விழவேண்டும் என்பதும் அவரது சித்தமே. 

அன்பானவர்கள், நாம் அற்பமாக என்னும் முடியைக்கூட தேவன் இவ்வளவு அக்கறையோடு கவனிப்பாரானால் நம்மைக்  கைவிடுவாரா? என்று நமக்குத் தைரியம் தருகின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

நாம் நமது பிரச்சனைகள் துன்பங்களை எண்ணியே கலங்கிக்கொண்டிருப்போமானால் மனதுக்கு ஆறுதல் கிடைக்காது. நமது துன்பங்களுக்கு முடிவு உண்டு. காரணம் தேவனது சித்தமில்லாமல் துன்பங்கள் நம்மைத் தொடரவில்லை. அவரது பார்வைக்கு அவை மறைவானவையல்ல.   அடைக்கலான்  குருவிகளை கீழே விழாமல் பறக்கச் செய்யும் தேவன், நமது தலை முடிகளை எண்ணிக்  கணக்கு வைத்துள்ள தேவன் நிச்சயமாக நமது துன்பங்களையும் கணக்கு வைத்திருப்பார். நிச்சயமாக அவற்றிலிருந்து நம்மை விடுவிப்பார். 

எனவேதான் தொடர்ந்து இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர் களாயிருக்கிறீர்கள்." ( மத்தேயு 10 : 31 ) ஆம், மனிதர்கள் நாம் குருவிகளைவிட மேலானவர்கள். நாம் தேவ சாயலாகப் படைக்கப்பட்டவர்கள். எனவே, குருவிகளையும் தலை முடியையும் மேலாகக் கருதி பாதுகாக்கும் தேவன் நிச்சயமாக நம்மையும் பாதுகாப்பார். 

நமது துன்ப வேளைகளில் இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகள் நமக்கு ஆறுதலையும் விசுவாசத்தையும் தரும். எனவே கலங்கிடவேண்டாம். குருவிகளையும் தலை முடியையும் விட நாம் மேலானவர்கள். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்     

     BETTER  VALUE THAN SPARROWS 

 'AATHAVAN' 📖 BIBLE MEDITATION  No:- 1,073         
 💚 January 17, 2024 💚 Wednesday 💚

"Are not two sparrows sold for a farthing? and one of them shall not fall on the ground without your Father. But the very hairs of your head are all numbered." (Matthew 10: 29, 30)

When various problems, sufferings, debts, diseases affect us, our faith decreases. Even though we are living a life according to God, when we are troubled, we may think “why I have all these sufferings and problems?” Some are unable to bear these sufferings and seek the tragic end of suicide.

If you are troubled like this, the comforting words of Jesus Christ today will surely comfort your heart. We see birds flying in the sky. We enjoy watching them flap their wings beautifully. They all fly like that according to the will of the Father. If it is not his will they will fall down.

Similarly, God has counted the millions of hairs on our head. In English translation it is mentioned, "hairs of your head are all numbered." It means that every hair is given a number just like we give number to houses. Many hairs fall out when we comb our hair. What number of hairs should fall is also his will.

Beloved, Lord Jesus Christ gives us courage that if God cares so much about even a hair that we count insignificant, will He abandon us?

If we are worried about our problems and sufferings, our mind will not get comfort. There is an end to all our sufferings. The reason is that sufferings do not follow us without God's will. They are not hidden from His view. God who makes sparrows fly without falling down, God who counts the hairs of our heads, surely counts our sufferings too. Surely, He will deliver us from them.

That is why Jesus Christ continues to say, "Fear ye not therefore, ye are of more value than many sparrows." (Matthew 10: 31) Yes, we humans are better than sparrows. We are made in God's image. Therefore, the God who protects the sparrows and the hair of the head will surely protect us too.

The words of Jesus Christ give us comfort and faith in our times of suffering. So don't panic. We are better than sparrows and hair.

God’s Message :- Bro. M. Geo Prakash                                    

No comments: