தாழ்மை / HUMBLENESS

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,071     ஜனவரி 15, 2024 💚 திங்கள்கிழமை 💚 

"நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்." ( ஏசாயா 57 : 15 )

நமது தேவன் உன்னதத்தில் சகல மகிமையுடனும் வாழ்கின்றார். கோடானகோடி வானதூதர் சூழ, அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய காத்துநிற்கின்றனர். பரிசுத்தர், பரிசுத்தர் என அவரைப் புகழ்ந்து பாடும் கீதம் விண்ணகத்தை நிரம்பியுள்ளது. இந்த அண்டசராரசங்களைப் படைத்து ஆண்டு வருபவர் அவர். அவரது ஆட்சி நித்தியமானது; அதற்கு முடிவே இல்லை.

ஆனால் இத்தகைய நித்திய பரிசுத்தர் கூறுகின்றார், "பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்." ஆம் இதுதான் அவரது சிறப்பும் மகிமையும். மேற்கூறிய சிறப்பும் மகிமையும் கொண்ட தேவாதி தேவன் அவரால் படைக்கப்பட்ட வெறும் மண்ணான மனிதன் தன்னைத் தாழ்த்தும்போது அவனுக்குள் வந்து வசிக்க ஆரம்பிக்கின்றார். 

தேவனோடு ஒப்பிடும்போது மனிதன் பாவித்தான். ஆனால் அவர் அவனது பாவங்களையே எப்போதும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன் என்கின்றார். அப்படிப் பார்ப்பாரானால் நாம் யாரும் அவர்முன் நிற்க முடியாது; அவரிடம் சேர முடியாது.  மட்டுமல்ல அவர் கோபமாய் எப்போதும் கோபமாய் இருப்பாரானால் மனிதர்கள்நாம் சோர்ந்துபோவோம்.  "நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." ( ஏசாயா 57 : 16 )

இப்படி மனிதர்கள் எல்லோருமே பரிசுத்தத்தை இழந்தவர்கள்தான். தேவனைவிட்டு தவறி இழந்துபோனவர்கள்தான். எனவே, இப்படி "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்." ( லுூக்கா 19 : 10 ) என்று இயேசு கிறிஸ்து கூறினார். எனவே அன்பானவர்களே, நாம் எப்போதும் தேவனுக்குமுன் நமது தகுதியில்லாமையை உணர்ந்தவர்களாக இருக்கவேண்டியது அவசியம்.  

சிலவேளைகளில் இந்த உலக வாழ்வின் சோதனைகள், துன்பங்கள் நம்மை நெருக்கி சோர்வடையச் செய்யலாம். ஆனால் நாம் தாழ்மையான குணமுள்ளவர்களாக வாழும்போது தேவன் நமக்குள் வந்து நொறுங்குண்ட நமது ஆவியையும் இருதயத்தையும்  உயிர்ப்பிப்பார். எனவேதான், "பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்." என்கிறார் பரிசுத்தரான கர்த்தர். 

தேவனுக்குமுன் தாழ்மையான வாழ்வு வாழ்வோம். கர்த்தர் நம்மைப் பலப்படுத்துவார்.  "அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது." ( யாக்கோபு 4 : 6 )

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                   

                   HUMBLENESS

'AATHAVAN' 📖 BIBLE MEDITATION No:- 1,071 💚 January 15, 2024 💚 Monday 💚

"For thus saith the high and lofty One that inhabiteth eternity, whose name is Holy; I dwell in the high and holy place, with him also that is of a contrite and humble spirit, to revive the spirit of the humble, and to revive the heart of the contrite ones." (Isaiah 57: 15)

Our God dwells in all glory. Surrounded by billions of angels, they wait to obey his orders. Hymns praising Him as Holy, Holy fill the sky. He is the creator of these universes. His reign is eternal; There is no end to it.

But such an eternal Holy says, "I dwell in the high and holy place, with him also that is of a contrite and humble spirit, to revive the spirit of the humble” Yes, this is His excellence and glory. The aforesaid great and glorious God comes and resides in the mere dust man created by Him when he humbles himself.

Man is a sinner. But he says that he will not always look at his sins. If he sees like that, none of us can stand before him; Can't join him. And if he is angry all the time, we humans will get fainted. "For I will not contend for ever, neither will I be always wroth: for the spirit should fail before me, and the souls which I have made." (Isaiah 57: 16)

In this way, all human beings have lost their sanctity. They are those who have strayed away from God and are lost. Therefore, thus said Jesus, "The Son of Man has come to seek and to save that which was lost." (Luke 19:10) So beloved, it is necessary that we always be aware of our unworthiness before God.

Sometimes trials and tribulations of this worldly life can make us feel overwhelmed and exhausted. But when we live with humility God will come into us and revive our broken spirit and heart. That is why, "I dwell in the spirit of the contrite, the heart of the contrite, and the spirit of the contrite." Says the Holy Lord.

Let us live a humble life before God. The Lord will strengthen us. "But he giveth more grace. Wherefore he saith, God resisteth the proud, but giveth grace unto the humble." (James 4: 6)

God’s Message :- Bro. M. Geo Prakash

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்