ஆதவன் 🌞 823🌻 ஏப்ரல் 30, 2023 ஞாயிற்றுக்கிழமை
"பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்." ( மாற்கு 16 : 15 ) என்றார். "And he said unto them, Go ye into all the world, and preach the gospel to every creature." ( Mark 16 : 15 ) CONTACT ADDRESS :- 18E, Holy Cross College Road, Punnai Nagar, Nagercoil - 629 004, Kanyakumari District, India Cell-96889 33712 & 7639022747.
கர்த்தருக்குள் நம்மைத் திடப்படுத்தி வாழ்வோம்
"பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்"
ஆதவன் 🌞 822🌻 ஏப்ரல் 29, 2023 சனிக்கிழமை
ஆடைகளையல்ல, இருதயத்தைக் கிழிப்போம்
ஆதவன் 🌞 821🌻 ஏப்ரல் 28, 2023 வெள்ளிக்கிழமை
"மனுஷரால் கூடாதது தேவனாலே கூடும் ."
ஆதவன் 🌞 820🌻 ஏப்ரல் 27, 2023 வியாழக்கிழமை
இந்த ஜெபம் தேவனுக்கு ஏற்ற ஜெபம்
ஆதவன் 🌞 819🌻 ஏப்ரல் 26, 2023 புதன்கிழமை
எதைக் கேட்பது? எதைத் தேடுவது? ஏன் தட்டுவது?
நல்ல மேய்ப்பன்
ஆதவன் 🌞 817🌻 ஏப்ரல் 24, 2023 திங்கள்கிழமை
வேத புரட்டர்கள்
ஆதவன் 🌞 816🌻 ஏப்ரல் 23, 2023 ஞாயிற்றுக்கிழமை
பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்
ஆதவன் 🌞 815🌻 ஏப்ரல் 22, 2023 சனிக்கிழமை
சூழ்நிலைகளையே மாற்றவல்ல தேவனை நோக்கிப்பார்ப்போம்.
ஆதவன் 🌞 814🌻 ஏப்ரல் 21, 2023 வெள்ளிக்கிழமை
மோசேயைப்போல உறுதியுடன்........
ஆதவன் 🌞 813🌻 ஏப்ரல் 20, 2023 வியாழக்கிழமை
தேவனுக்கு ஒப்பானது உலகினில் எதுவுமே இல்லை.
ஆதவன் 🌞 812🌻 ஏப்ரல் 19, 2023 புதன்கிழமை
ஆதிகால மனிதன் உலகினில் தான் கண்டு பயப்பட்ட அனைத்தையும் வணங்கத் தொடங்கினான். சூரியன், நெருப்பு, காற்று, பாம்பு, சிங்கம் எனப் பலவற்றையும் வணங்கியதற்கு மனிதனது பயமே காரணம். இவை அனைத்தும் படைக்கப்பட்டவையே என்றும் இத்தகைய பயப்படத்தக்கவற்றைப் படைத்தவர் எவ்வளவு மகத்துவமுள்ளவராக இருப்பார் எனவும் மனிதன் எண்ணியிருந்தால் இவைகளை வணங்கியிருக்கமாட்டான்.
இப்படி,படைத்தவரை சேவிப்பது, படைக்கப்பட்ட பொருட்களை சேவிப்பது என இரு வேறு நிலைகளை பவுல் அடிகள் இங்கு விளக்குகின்றார். இப்படி படைக்கபட்டப் பொருட்களை வணங்கக் காரணம் ஒன்று பயம் இன்னொன்று இச்சை. அதாவது, படைக்கபட்டப் பொருட்கள் கண்களுக்குத் தெரிவதால் அவற்றின்மேலுள்ள ஆசை.
அன்று ஏதேனில் துவங்கியது இந்த நிலை. ஆதாமும் ஏவாளும் படைத்த தேவனது கட்டளையை மீறி தேவன் தடை செய்த படைக்கப்பட்ட பொருளான கனியின்மேல் ஆசை கொண்டார்கள். அதனால் தேவனது சாபத்துக்கு உள்ளானார்கள். காரணம் இச்சை. "அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்." ( ஆதியாகமம் 3 : 6 ) என்று வாசிக்கின்றோம்.
இன்றும் மனிதன் இதையே செய்கின்றான். தேவனைவிட உலகப் பொருட்கள்மேல் ஆசை கொள்வது சிருஷ்டியை தொழுது சேவிப்பதுதான். இப்படி தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருள்மேல் ஆசை கொள்வதால்தான் இழிவான "இச்சை" மனிதனில் பிறக்கின்றது என இந்த வசனம் சொல்கிறது.
தேவனுக்கு ஒப்பானது உலகினில் எதுவுமே இல்லை. ஆனால் இன்று மனிதர்கள் பணம், பதவி , பெண் ஆசை, மண்ணாசை என இழிவான இச்சைகளில் சிக்கி தேவனது சாபத்துக்கு உள்ளாகின்றார்கள். காரணம், இத்தகைய ஆசை கொள்வதும் படைத்தவரை விட்டு படைக்கப்பட்டதைஆராதிப்பதுதான். மட்டுமல்ல இப்படி இழிவான இச்சைகளில் சிக்கி இருப்போர்தங்களைப்போல "அவைகளை செய்கின்ற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாய் இருக்கிறார்கள்." (ரோமர் -1;32) என்கின்றார் பவுல் அடிகள்.
படைத்தவரை வணங்கி ஆராதிப்பதும் அவற்றைப் படைத்த வல்லமையான தேவனுடன் இணைவதும்தான் தேவனுடைய சித்தம். ஆனால் இந்தத் தேவ சித்தத்தை பொய் என மாற்றி தேவனை ஆராதிக்காமல் தேவனால் படைக்கப்பட்ட பொருட்களை ஆராதிக்கின்றார்கள்.
அன்பானவர்களே, மனிதனது வேசித்தன செயல்பாடுகளுக்கு காரணமும் இச்சையே. இதன்பொருட்டே இழிவான இச்சை நோய்களும் சாபங்களும்மனிதனைத் தொடர்கின்றன. ஆம் இவை அனைத்துக்கும் காரணம் தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருட்கள்மேல்ஆசைகொள்வதே. எனவே, எந்த சூழ்நிலையிலும் படைக்கப்பட்டப் பொருள்களுக்கு முதலிடம் கொடுக்காமல் படைத்த தேவனே போதுமென வாழ்வோம். நமது அனைத்துத் தேவைகளையும் அவரே சந்திப்பார்.
சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)
🦋 Meditation verse - ரோமர் 6 : 7 / Romans 6:7
" ஆதவன் " தியானம் - 1951 2026 ஜூன் 11, வியாழன் "மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே." ...
-
- சகோ. எம்.ஜியோ பிரகாஷ் ஒ ரு முறை திரளான மக்கள் கூடி வந்திருந்தபோது இயேசு கிறிஸ்து அவர்களுக்குப் பல அறிவுரைகளைக் க...
-
'ஆதவன்' 💚நவம்பர் 29 , 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,391 "மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீ...
-
கர்த்தருக்குக் காணிக்கை - எம்.ஜியோ பிரகாஷ் கர்த்தருக்குக் காணிக்கை என்கின்ற இந்த நூல் 2005 ம் ஆண்டு சகோ. ஜியோ பிரகாஷ் ...
-
நம்மை விசாரிக்கிற தேவன் ! சகோ. எம். ஜியோ பிரகாஷ் ந மது தேவன் நம்மை விசாரிக்கி...
-
சிலுவையைப் பற்றிய உபதேசம் தேவ பெலனா அல்லது பைத்தியமா ? சகோ. டி . ஜான் ஜெயசீலன் இயேசு கிறிஸ்துவின் ரெகோபோத் ஊழியங்கள் சாத்த...
-
வேதாகமத் தியானம் - எண்:- 1,397 'ஆதவன்' 💚டிசம்பர் 05 , 2024. 💚வியாழக்கிழமை "சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்...
-
ஆவி, ஆத்துமா, சரீரம் - எது ஆவிக்குரிய வாழ்வு? - சகோ. எம். ஜியோ பிரகாஷ் தே வன் மனிதனை ஆவி, ஆத்துமா, சரீரம் எனும் மூன்று கூறுள்ளவனா...
-
வேதாகமத் தியானம் - எண்:- 1,573 'ஆதவன்' 💚மே 29 , 2025. 💚 வியாழக்கிழமை "நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோல...
-
சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் சகோ . எம் . ஜியோ பிரகாஷ் (இக்கட்டுரை சகோதரரால் எழுதப்பட்டு 'ஆதவன்' செப்டம்பர் 2013 இதழில் பி...
-
வேதாகமத் தியானம் - எண்:- 1,413 'ஆதவன்' 💚டிசம்பர் 21 , 2024. 💚சனிக்கிழமை "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக...

.jpg)




.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)