வேதாகமத் தியானம் - எண்:- 1,535
'ஆதவன்' 💚ஏப்ரல் 20, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை
"மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே. கிறிஸ்து எழுந்திருக்கவில்லை யென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா." (1 கொரிந்தியர் 15: 13, 14)
உலக நீதிமான்கள், பரிசுத்தர்கள், இவர்களிலிருந்து கிறிஸ்துவை வேறுபடுத்திக்காட்டுவது அவரது உயிர்ப்பு. அவர் உயிர்த்தெழவில்லையானால் அவரை நாம் கடவுள் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது. இந்த உலகத்தில் பல நல்ல போதனைகளைக்கொடுத்த மனிதர்களைப்போல அவரும் நீதிபோதனை செய்து முடிந்துபோன மனிதராகவே இருந்திருப்பார். இதனையே அப்போஸ்தலரான் பவுல், கிறிஸ்து எழுந்திருக்கவில்லை யென்றால், எங்கள் பிரசங்கமும் வீண், உங்கள் விசுவாசமும் வீண் என்று கூறுகின்றார்.
ஆனால், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வெறும் நம்பிக்கையாக நாம் கூறிக்கொள்வது மட்டுமல்ல, நம்மில் அது உருவாக்கும் மாற்றத்தின்மூலம் உறுதிப்படுகின்றது. அதுவே மீட்பு அனுபவம். கிறிஸ்து இரத்தம் சிந்தி உருவாக்கிய மீட்பு அனுபவத்தை நாம் பெறும்போது நாம் கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள் வருகின்றோம்; கிறிஸ்து அனுபவத்தைப் பெறுகின்றோம். ஆம், கிறிஸ்துவின் உயிர்ப்பு வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, நமது ஆத்துமாவில் அது ஏற்படுத்தும் மாற்றம். அதன்மூலமே அவரது உயிர்த்தெழுதல் உறுதிப்படுகின்றது.
கிறிஸ்துவின் உயிர்ப்பு நமக்குக் கூறும் உண்மை, இந்த உலக வாழ்க்கையின் பின்னர் முடிவில்லா நித்திய வாழ்வு நமக்கு உள்ளது. கிறிஸ்து உயிர்த்ததுபோல நாமும் உயிர்த்து அதனைப் பெற்றுக்கொள்வோம் என்பதாகும். "மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை. கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்." (1 கொரிந்தியர் 15: 16, 17) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.
மேலும், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நமக்குக் கூறும் உண்மை, அவர் உயிர்த்தெழுந்து பிதாவையோடு இருப்பதுபோல அவரை விசுவாசிக்கும் நாமும் உயிர்த்தெழுந்து அவரைப்போல பிதாவோடு இணைந்திருப்போம் என்பதே. உலகத் தோற்றத்துக்குமுன்னே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவோடு இருந்தார். இந்த உலகத்தில் அவதரித்து, பாடுபட்டு மரித்து உயிர்த்தெழுந்து மகிமையடைந்தார். அந்த மகிமையை அவரை விசுவாசிக்கும் நாமும் காணவேண்டும் என்று இயேசு விரும்புகின்றார். எனவேதான் அவர் உலகத்திலிருக்கும்போது பின்வருமாறு ஜெபித்தார்:-
"பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்." ( யோவான் 17: 24) ஆம், அவரை விசுவாசிக்கும் நாமும் இந்த உலகத்தில் அவர் அனுபவித்ததுபோல பாடுகளை அனுபவித்து மகிமையடையவேண்டும். அவரது மகிமையைக் மறுவுலகில் காணவேண்டும். இதுவே அவரது சித்தம்.
இப்படி நாம் பிதாவோடு இணைந்திருக்க வேண்டுமானால் நாம் பாவத்தை மேற்கொள்ளவேண்டும்; அதாவது நாம் பாவத்துக்கு மரித்தவர்களாக வேண்டும். கிறிஸ்துவின் ஆவி நமக்குள் இருந்தால் மட்டுமே நாம் பாவத்துக்கு மரித்தவர்களாக மாறமுடியும். அப்படி நாம் பாவத்துக்கு மரிக்கும்போது நமது ஆவியானது உயிருள்ளதாகின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." ( ரோமர் 8: 10) என்று கூறுகின்றார்.
இப்படியாக கிறிஸ்துவின் ஆவியின் பிரமாணத்துக்குள் நாம் வாழும்போது பாவம், ஆத்தும மரணம் இவைகளிலிருந்து விடுதலை பெறுகின்றோம். "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8: 2) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள் நாம் பாவமில்லாமல் வாழ்ந்து அவர் மரணத்தை ஜெயித்ததுபோல நாமும் ஜெயிக்கவேண்டும் என்பதே தேவ சித்தம்.
"இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8: 11) உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஆவியை உடையவனே ஆவிக்குரிய கிறிஸ்தவன். வெறுமனே உயிர்ப்பு விழாவைக் கொண்டாடி மகிழ்வதல்ல கிறிஸ்தவ வாழ்க்கை நம்மில் அவரது ஆவி செயல்பட அனுமதிக்கவேண்டும். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாய் இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8: 9)
கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்பட்டு கிறிஸ்துவின் ஆவியின் பிரமாணத்துக்குள் நுழைந்திட வேண்டுவோம். அப்போதுதான் நாம் பாவத்தை வென்று அவரோடுகூட நித்திய ஜீவனைப் பெற்று மகிழமுடியும்.
தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
Scripture Meditation – No: 1,535
AATHAVAN 💚 April
20, 2025 – Sunday 💚
“But if there be no
resurrection of the dead, then is Christ not risen: And if Christ be not risen, then is our preaching vain, and your faith is also
vain.” (1 Corinthians 15:13–14, KJV)
What sets Christ apart from
all the righteous and holy men of the world is His resurrection. If He had not
risen from the dead, we could not rightly call Him God. He would have been just
another good man who preached righteousness, like many others throughout
history. This is exactly what the Apostle Paul emphasizes: If Christ be not
risen, then is our preaching vain, and your faith is also vain.
But Christ’s resurrection is
not merely a belief we profess—it is affirmed through the transformation it
brings in our lives. That transformation is the experience of salvation. When
we receive the salvation that Christ made possible by shedding His blood, we
enter into a relationship with Christ and begin to experience Him personally.
Yes, His resurrection is more than a belief; it brings about a profound change
in our souls. It is this change that confirms the truth of His resurrection.
The truth proclaimed by
Christ’s resurrection is this: there is eternal life beyond this earthly
existence. Just as Christ rose again, we too shall rise and partake of that
eternal life. The Apostle Paul goes on to say: “For if the dead rise not,
then is not Christ raised: And if Christ be not raised, your faith is vain; ye
are yet in your sins.” (1 Corinthians 15:16–17, KJV)
Furthermore, Christ’s
resurrection declares that just as He rose and is now with the Father, we who
believe in Him will also rise and be united with the Father. Even before the
foundation of the world, the Lord Jesus Christ was with the Father. He came into
this world, suffered, died, and rose again in glory. Jesus desires that those
who believe in Him also behold that same glory. That’s why He prayed:
“Father, I will that they
also, whom thou hast given me, be with me where I am; that they may behold my glory, which thou hast given me: for thou lovedst me before the foundation of the world.” (John
17:24, KJV)
Yes, we who believe in Him
must also endure sufferings as He did and ultimately enter into His glory. It
is His will that we behold His glory.
To be united with the Father,
we must die to sin. Only when the Spirit of Christ dwells in us can we truly
die to sin. When that happens, our spirit becomes alive. Paul explains it this
way: “And if Christ be in you, the body is dead because of sin; but the Spirit is life because of righteousness.” (Romans 8:10, KJV)
When we live according to the
law of the Spirit of Christ, we are set free from sin and spiritual death. “For the law of the Spirit of
life in Christ Jesus hath made me free from the law of sin and death.” (Romans
8:2, KJV)
Yes, beloved, it is God’s will
that we live without sin under the law of Christ and, just as He triumphed over
death, we too should be victorious.
“But if the Spirit of him that
raised up Jesus from the dead dwell in you, he that raised up Christ from the dead shall also quicken your mortal bodies by his Spirit that dwelleth in you.” (Romans 8:11, KJV)
The one who possesses the
Spirit of the risen Christ is the true spiritual Christian. Celebrating Easter
alone is not enough—we must allow His Spirit to work within us.
“But ye are not in the flesh,
but in the Spirit, if so be that the Spirit of God dwell in you. Now if any man
have not the Spirit of Christ, he is none of his.” (Romans
8:9, KJV)
Let us be washed of our sins
by the blood of Christ and enter into the law of His Spirit. Only then can we
truly overcome sin and rejoice in eternal life with Him.
God’s Message by:- Bro. M. Geo Prakash
No comments:
Post a Comment