தமிழ் வேதாகம சரித்திரம்
இந்திய மொழிகளிலே, தமிழ் மொழி தான் பழங்கால
இலக்கியங்களைத் தன்னிடத்தே கொண்ட தனிப்பெருமை வாய்ந்தது. இந்தியாவின்
இலக்கிய வரலாற்றில் தமிழ் மொழிக்கு இரண்டு தனிச்சிறப்பும், மேன்மையும்
உண்டு. அதில் ஒன்று இந்திய மொழிகளிலே தமிழ் மொழியில்தான் முதன்முதலில்
புத்தகம் அச்சிடப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக வேதாகமம் அச்சிடப்பட்ட
தனிப்பெருமை தமிழ் மொழியின் இரண்டாவது தனிச்சிறப்பு.
தமிழ் மொழியில் வேதாகமம் மொழி
பெயர்க்கப்படுவதற்கு முக்கிய கார ணமாயிருந்தவர் டென்மார்க்கு தேசத்தின்
அரசன் நான்காம் பிரடெரிக். இவருக்கு இந்தியாவின் மேல் இருந்த மிஷனெரி ஊழிய
பாராத்தால், எப்படி யாவது இந்தியாவுக்கு மிஷனெரிகளை அனுப்ப ஏற்பாடு
செய்தார். தன் அரண்மனை பிரசங்கியாராகிய லுட்கென்ஸிடம் அந்தப் பொறுப்பை
ஒப்படைத்தார். ஆனால் இந்தியாவிற்கு மிஷ னெரியாக செல்வதற்கு டென்மார்க்கு
தேசத்தில் ஒருவரும் முன் வராததால், லுட்கென்ஸ் தன் சொந்த தேசமாகிய
ஜெர்மனியின் பக்கம் திரும்பினார். அதன் விளைவாக 23 வயது சீகன் பால்க்கும்,
அவரது நண்பர் 29 வயது ப்ளுட்சும் இந்தியாவிற்கு மிஷனெ ரியாக செல்வதற்கு
முன் வந்தார்கள். சீகன் பால்க் தனது 16வது வயதில் இரட்சிக்கப்பட்டார்.
இந்த அனுபவத்திற்குப் பின்பு கல்லூரி மாணவராக இருக்கும் சமயத்தில்
பின்வரும் சவால் நிறைந்த வார்த்தைகளை அவர் கேட்க நேர்ந்தது. புறஜாதியார்
தேசத்திலே ஒரே ஒரு ஆத்துமா இரட்சிக்கப்படுவது, ஐரோப்பாவிலுள்ள ஒரு
கிறிஸ்துவ தேசத்தில் 100 ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு சமம் இந்த
வார்த்தைகளின் மூலமாக தேவன் சீகன் பால்க்கை மிசினரி ஊழியத்திற்கு
அழைத்தார். சந்தேகம், உபத்திரவம், அடிக்கடி உண்டாகும் சரீரசுகவீனம் இவைகள்
மத்தியில் சீகன் பால்க் தேவனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு
மிசினெரியாக போக தன்னை ஆயத்தப்படுத்தினார். வீரமும், விடாமுயற்ச்சியும்
நிறைந்ததொரு வாழ்க்கைதான் சீகன் பால்க்கின் சரித்திரம். அவர் இந்தியாவிற்கு
மிஷனெரியாக செல்வதற்கு தீர்மானித்த அந்த நாட்களிலே, ஐரோப்பா கண்டத்தில்
வாழ்ந்து கொண்டிருந்த அனை த்து கிறிஸ்தவ சமுதாயமும் வெளிநாட்டிற்கு
மிஷனெரியை அனுப்புவது வீண் என்றும், விருதா ஊழியம் என்றும் நம்புகின்ற ஒரு
காலமாக இருந்தது. ஐரோப்பாவில் செடிக்கு தண்ணீர் பாய்ச்சுகிற வேலையே
செய்யாமல் கிடக்கும் பொழுது, ஏன் வெளிநாட்டிற்கு சென்று செடியை நடுகின்ற
வேலை யைத் தொடங்கவேண்டும்?. என்று விவாதித்து தர்க்கம் செய்யும் காலம் அது.
சீகன் பால்க் இந்தியாவிற்குப் போவதை அநேக கிறிஸ்தவர்கள் விரும்பவில்லை
இதன் காரணத்தால் சீகன் பால்க், ப்ளுட்சு
இருவருமே மிசனெரி தகுதித் தேர்வில் தோல்வியடைய நேர்ந்தது. அவர்கள்
இருவரையும் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்வதற்குக் கூட அங்கிருந்த பிஷப்
மறுத்துவிட்டார். இறு தியில் டென்மார்க் அரசன் 4 வது பிரடெரிக் இந்த இரண்டு
விஷயத்திலும் நேரடியாக குறுக்கிட வேண்டியதாயிற்று. இறுதியில் அவர்கள்
இருவரும் தேர்வில் வெற்றி பெற்றார்கள். பின்பு ஒரு லுத்திரன் ஆலயத்திலே
பிரதிஷ்டை செய்யப்பட்டார்கள். அதன்பின்பு 1705ம் ஆண்டு நவம்பர் 30ம் நாள்
இருவரும், இந்தியாவிற்கு, பிராட்டெஸ்டெண்டு சபையால் அனுப்பப்பட்ட முதல்
மிஷனெரிகளாக தங்கள் பய ணத்தை தொடங்கினார்கள்.
அந்த இரு இந்திய மிஷனெரிகளின் பயணத்திற்கு
தடைகள் சொந்த நிலத்தில் மாத்திரமல்ல, நீரிலும் நீடித்தது. அவர்களோடு
கப்பலிலே பிராயணம் செய்த மாலுமிகளும், கப்பல் தலை வனும் அவர்களுடைய
பயணத்தின் நோக்கத்தைக் கேட்டபொழுது கேலியும், பரிகாசமும் செய்தார்கள்.
ஆனாலும் அவர்கள் மனம் தளரவில்லை. தடைகள் பல தடவை சந்தித்த அவர்களுக்கு
பயணத்தின் முடிவில் ஒரு மாபெரும் தடை காத்திருந்தது.
ஏறக்குறைய 90 ஆண்டுகளாக டென்மார்க்
கிழக்கிந்திய கம்பெனியானது தரங்கம்பாடியில் வியாபாரத்தொடர்பு
வைத்திருந்தது. மிஷனெரி தாகமுள்ள டென்மார்க் அரசன் அந்த இரண்டு இந்திய
மிஷனெரிகளைத் தரங்கம்பாடி யிலுள்ள டென்மார்க் கிழக்கிந்திய கம்பெனியில்
வேலைசெய்கிறவர்கள் என்ற பெயரில் அனுப்பினார். ஆனால் கம்பெனிக்கு
மிஷினெரிகளை டென்மார்க் அரசன் அனுப்பும் விஷயத்தில் இந்த டென்மார்க்
கிழக்கிந்திய கம்பனி எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த மிஷனெ ரிகளை
எப்படியாவது இந்தியாவில் இறங்கவிடாமல் இடைய+று செய்ய கங்கணம் கட்டியது.
எனவே இந்தக் கம்பெனி தரங்கம்பாடியில் வேலைசெய்யும் தன்னுடைய தொழிற்சாலை
அதிகாரிகளுக்கு, அந்த இந்திய மிஷ னெரிகளின் வேலையை எப்படியாவது தடுக்க
வேண்டும் என்று மறைமுகமாக ஆலோசனை கூறியிருந்தது. இதன் விளைவாக சீகன்
பால்க்கும், ப்ளுட்சும் 7 மாத கடல் பிராயணத்தின் முடிவில் தரங்கம்பாடிக்கு
வந்து சோர்ந்தபோது, கப்பலிலிருந்து கடற்கரைக்கு அவர்களை அழைத்துச்
செல்வதற்கு ஆள் ஒருவரும் இல்லை. எனவே கடற்கரை யில் இறங்கமுடியாமல்
அநேகநாட்களாய் கப்பலிலேயே காத்திருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இறுதியாக அந்தக் கப்பல்இருந்த பக்கமாக மீன் பிடிக்க வந்த படகில் ஏறி கரை
நோக்கிப்போனார்கள். அந்தக் கப்பலிலிருந்து தப்பிப்போவதை கண்ட அந்த கப்பலின்
தலைவன்தன் கையிலிருந்த தடியை உயர்த்தி அவர்களை அச்சுறுத்தினான். ஆனால்
அவர்களோ அதைக் கண்டு அஞ்சாமல் கரை போய் சேர்ந்தார்கள். அவர்கள் இருவரும்
இந்திய மண்ணிலே கால் வைத்த நாள் இந்தி யாவின் சுவிசேஷ சரித்திரத்திலே பொன்
னினால் பொறிக்கப்பட வேண்டியயெதொரு நாள். 1706 ஆம் ஆண்டு ஜூலை 9ம் தேதி காலை
10 மணி க்கு தரங்கம்பாடியில் அவர்கள் இறங்கினார்கள்.
அந்த இரு இந்திய மிஷனெரிகளின் உபத்திரவம்
உச்சக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும்
தரங்கம்பாடிக்கு வெளியிலேயே காலை 10 மணியிலி ருந்து மாலை 4மணி வih
காத்திருந்தார்கள். அந்த நேரத்தையும் வீணாக்க விரும்பாத அவர்கள்
அப்போஸ்தலர் நடபடிகளை வாசித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியாக அந்த
இடத்தின் அதிகாரியாகிய ( commander ) J.C.
ஹேசியஸ் என்பவன் அவர்களை வந்து சந்தித்தான். உடனே அவன் யார் நீங்கள்?
எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்? என்று சீரிய போது, சீகன் பால்க்
தன்னுடைய கையிலிருந்த டென்மார்க் அரசனின் முத்திரையிட்ட கடிதத்தைக்
காண்பித்தார். அதைப் பார்த்தவுடன் அந்த அதிகாரியின் ஆத்திரமும், கோபமும்
குறைந்தன. இறுதியில் அந்த இரு மிஷனெரிகளும் அந்த அதிகாரிக்குப் பின்னால்
போக அனுமதியளிக்கப்பட்டது.
அவர்கள் எல்லோரும் தரங்கம்பாடி
மார்க்கெட்போய் சேர்ந்த பொழுது, அந்த அதிகாரி அவர்களை தன்னந்தனியாக
விட்டுவிட்டு சட்டென்று மறை ந்து விட்டான். மொழி தெரியாத ஒரு அந்நிய
தேசத்தில், தெரிந்தவர்கள், அறிமுகமானவர்கள் ஒருவரும் இல்லாததொரு
சூழ்நிலையில், அந்த வாலிபர்கள் இருவரும் அனாதையைப் போல, எங்குபோவதென்று
தெரியாமல் தெருவிலே நின்றார்கள். ஆயினும் இருள் நிறைந்த இந்தியாவில் தேவ
வார்த்தையின் தீப ஒளியேற்றும் தரி சனத்தை தந்த தேவன் அவர்களோ டிருந்தார்.
அவர்களுடைய பரிதாப நிலையைக் கண்ட ஒருவர் அவர்களுக்கு இரங்கி தன் இல்லத்தில்
தங்குவத ற்கு இடமளித்தார்.
தரங்கம்பாடி டேனியத் தொழிற்சாலை அலுவலர்கள்
சீகன் பால்க்கையும் அவரது தோழர் ப்ளுட்சுசாவையும் நடத்திய முறையானது
அடிப்படை மனித தன்மைக்கும் அபிமானத்திற்கும் அப்பாற்பட்டதாயிருந்தது.
அவர்களது மிஷனெரி ஆர்வத்தை தணியச் செய்து, மிஷனெரி பணியை கைவிட்டு
பின்னிடைச் செய்யும் நோக்கத்தோடு அவ்விடத்து அதிகாரி (commander)அவர்களை
இலச்சைய+ட்டும ; பலவித இழி நடத்தைகட்கு ஆளாக்கினான். எந்தக் காரணமுமின்றி
மிக அற்பமான காரியங்களைச் சாக்குக் காண்பித்து அவர்களை பகிரங்கமாக கைது
செய்தான். அவர்களை அடித்து "நாய்களே" என்றும் அழைத்தான். இதோடு
திருப்தியடையாமல், வாரினால் அடிக்கப்போவதாக அவர்களை அச்சுறுத்தி
வசைமொழியனைத்தையும் அவர்கள் மீது வாரிக்கொட்டினான். இறுதியில் சீகன் பால்க்
நான்கு மாதங்களாய் சிறையிலடைக்கப்பட்டார். எவரும் அவரைப் பார்க்க
அனுமதிக்கப்படவில்லை. போனாவும் மையுங் கூட மறுக்கப்பட்டது. நாட்டுத்
துரோகிகளெனக் கருதப்பட்ட இம் மிஷனெரிகளுடன் யாரும் தொடர்பு கொள்ளல் ஆகாது
என இராணுவத்தினரும் பிற அலுவலர்களும் ஆணை பெற்றிருந்தனர். இவ்வித பாதகமான
சூழ்நிலையில் எவரும் மிஷனெரி களத்தினின்று பணியைக் கைவிட்டு விட்டு
ஓடியிருப்பர். ஆனால் சீகன் பால்க்கோ அப்படிப்பட்ட மனிதரல்ல. திடமனமும்,
மிஷனெரித் தரிசனமும் உடைய அவர் சூழ்நிலையைக் கண்டு சோர்ந்து போகவில்லை.
அதற்கு மாறாக, தன்னைக் கொடுமைக்குள்ளாக்கிய அந்த அதிகாரிக்கும்,
மற்றவர்களுக்கும் சீகன் பால்க் கிறிஸ்துவின் உன்னத அன்பை வெளிப்படுத்தி
தேவன் அளித்த மாவலிய போர்க் கருவியான அந்த "அன்பு" என்னும் ஆயுதத்தால்
அவர்களனைவரையும் கீழ்ப்படித்தினார்.
ஆரம்ப காலத்தில் இவ்விதக் கொடூரமான
பாடுகளைச் சகித்தனு பவித்த இவ்விரு வாலிப மிஷனெரி களும் தங்கள் மிஷனெரிப்
பணியைத் தொடங்கினர். அவர்களது சொந்த மொழி ஜெர்மன்(German)ஆகும்.
தொழிற்சாலையின் அலுவல் மொழி யான டேனிய மொழிகூட அவர்களுக்கு அந்நிய மொழியே.
டேனிய அலுவ ர்களுக்கும், அவர்களது மத குருமார்களுக்கும் தமிழ் ஓர்
அறிமுகமில்லாத மொழியாக இருந்தது. சுதேசத் தமிழர் எவருக்கும் டேனிய மொழி
தெரியாது. அவர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்க உதவி புரியும்படி தகுதி
வாய்ந்த மொழியாசிரியர் ஒருவருமில்லை. எனவே, முன்னோடிப் பணிக்கும்
தீரத்துக்கும் மனோதிடத்துக்கும் அடையா ளமாய் விளங்கும் சீகன் பால்க்
தரங்கம்பாடியின் கடற்கரை மணல் மீது பள்ளிப் பிள்ளைகளோடு அமர்ந்து பைபிளதை;
தமிழ் மொழியில் மொழி பெயர்க்கும் பிரம்மாண்டப் பணிக்கான ஆரம்ப முயற்சியாகத்
தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்களை மணலின் மீது எழுதிப் பழகினார்.
ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகட்கு முன்னர்
தரை மணல் மீது தமிழ் எழுத்துக்களை வரைந்து கொண்டிருந்த போது உண்மையில் அவர்
இந்திய மிஷனெரிப் பணி வரலாற்றின் முன்னுரையை எழுதினார் என்றே சொல்ல
வேண்டும். மணல் மீது வரைந்த அவரது குழந்தைத் தனமான எழுத்துககளை வெகு
விரைவில் தரங்கம்பாடிக் கடலலைகள் அழித்துச் சென்ற போதிலும் அவரது உறுதியான
முயற்சிகளெல்லாம் இந்திய மிஷனெரிப் பணி வரலாற்றில் அழியாததொரு முத்திரையைப்
பதித்துவிட்டது என்பதனை அச்சமயத்தில் அவர் உணராதிருந்தார். அதற்கு பிறகு
87 ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்த வில்லியம் கேரி "தற்கால மிஷனெரி
தூது பணியின் தந்தை" எனப்படுவாரானால், சீகன் பால்க்கைத் "தற்கால மிஷனெரி
தூதுப் பணியின் முற்பிதா அல்லது முன்னோடி அல்லது வழி வகுத்தவர்" என
அழைப்பது சாலப் பொருத்தமாகும்.
தன்னுடைய சொந்தத் திறமையினாலும்,
விடாமுயற்சியினாலும் சீகன் பால்க் வெகு சீக்கிரமாக தமிழ் மொழி யைக்
கற்றுக்கொள்ளத் தொடங்கினார். இரவு பகலாக தமிழ் மொழி யில் உள்ள
இலக்கியங்களைப் படித்தார். வேதாகமத்திற்கு முன்னோடியாக, ஒரு சில
கைப்பிரதிகளையும், பள்ளி பாட புத்தகங்களையும், பிரசங்கங்களையும்
வெளியிட்டார். இந்தப் புத்தகங்களை முதலில் கையினாலும் பின்பு 1713 ம் ஆண்டு
ஜெர்மனிய தேசத்து நண்பர்கள் பரிசாக அனுப்பிய அச்சு இயந்திரத்திலும்
அச்சிடப்பட்டது.
தமிழ்நாட்டில் வந்து சேர்ந்த 5
ஆண்டுகளுக்குள்ளாக சீகன் பால்க் தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி
பெயர்த்து முடித்தார். 1714ம் ஆண்டில் இந்திய மொழிகளிலே முதல் தடவையாக
வேதாகமத்தைத் தமிழிலே அச்சிட்டார். தமிழ் மொழியில் முழு வேதாகமத்தையும்
ஆர்வத்தோடு மொழி பெயர்த்துக் கொண்டிருந்த சமயத்தில் சீகன் பால்க்கை
எதிர்பாராத வண்ணம் மரணம் சந்திக்க நேர்ந்தது. 1719 ஆண்டில் தன்னுடைய 36
வயதில், மனைவியையும், இரண்டு மகன்களையும் விட்டுவிட்டு தன்னுடைய ப+லோக
பயணத்தை முடித்தார்.
அவருடைய மரணத்திற்கு முன்னதாக பழைய
ஏற்பாட்டில் ரூத்தின் புத்தகம் வரைக்கும் மொழி பெயர்த்திருந்தார். சீகன்
பால்க் தன்னுடைய மரணத்தைச் சந்தித்த விதத்தை ஆர்னோ லேமன் பின்வருமாறு
விவரிக்கிறார். " தன்னுடைய உடல் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டதை
உணர்ந்த சீகன்பால்க் தன் வசமுள்ள எல்லாவற்றையும் 1719 பிப்ரவரி 10ம் தேதி
ஒழுங்குசெய்ய முற்பட்டார். தன் கைவசமுள்ள ஊழியத்தின் பத்திரங்கள், பணம்,
கணக்கு வழக்குகள் எல்லாவற்றையும் தன் நண்பர் க்ரண்ட்லர் வசம் ஒப்படைத்தார்.
தன் குடும்பக் காரியங்களையும் ஒழுங்கு செய்தார். பின்பு இந்திய கிறிஸ்தவ
நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திரு
க்கும் படியாய் ஆலோசனை கூறினார். அவர் இராப்போஜனம் எடுத்தபோது அவருடைய
சரீரம் சுகமடையும் தற்காலிக வாய்ப்பு இருந்தது. அவருடைய மரண நாளான 1719
பிப்ரவரி 23ம் தேதியன்று, அதிகாலையில் எழுந்து தன் மனைவியோடும், குழந்தைக
ளோடும் குடும்ப ஜெபம் செய்தார். ஆனால் காலை 9 மணிக்கு தன்னுடைய மரண வேளை
மிகவும் நெரு ங்கிவிட்டதை அவர் உணர்ந்தார் நண்பர் க்ரண்ட்லர் ஜெபித்தார்.
ஆனால் அவரோ தேவனுடைய இராஜ்யம் செல்வதற்கு அதிக வாஞ்சையாயிருந்தார். "தேவன்
தாமே என்னுடைய எல்லாப் பாவங்களையும் அவருடைய இரத்தத்தினாலே
சுத்திக்கரித்து, கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரத்தினாலே என்னை அலங்கரித்து
அவருடைய இராஜ்யத்திற்குள் சேர்த்துக் கொள்வாராக" என் சொல்லிவிட்டு தனக்கு
மிகவும் பிரிய மான "இயேசு என் நம்பிக்கை" என்ற ஜெர்மனிய கீர்த்தனையைப்
பாடும்படி யாக சைகையினால் விருப்பம் தெரி வித்தார். பின்பு தன்னுடைய
படுக்கையை விட்டு எழுந்து சென்று நாற்காலியில் அமர்ந்து தன் ஜீவனை
விட்டார்"
ஸ்கள்ட்ஸ்:
சீகன் பால்க் மொழிபெயர்க்காத பழைய
ஏற்பாட்டின் ஏனைய பகுதிகளை இன்னொரு ஜெர்மானிய மிஷனெரியாகிய பென்யமின்
ஸ்கள்ட்ஸ் மொழி பெயர்த்து 1728ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
பிப்ரேஷியஸ்:
சீகன் பால்க்கும், ஸ்கள்ட்ஸீம் மொழி
பெயர்த்த தமிழ் வேதாகமம் ஒரு மிகப் பெரிய சாதனையாக இருப்பினும், அதிலுள்ள
பல குறைகள் நிமித்தம் அதை மறு ஆய்வு செய்தல் அவசி யமாயிற்று. சீகன்
பால்க்கிற்கு அடுத்து, தமிழ் வேதாகமத்தை உருவாக்குவதில் மிகவும்
முக்கியமானவர் ஜெர்மானிய மிஷனெரியாகிய பிலிப் பிப்ரோஷியஸ்,
இவர் 1742 ம் ஆண்டு சென்னையில் வந்து
இறங்கினார். அச்சமயத்தில் தான் சென்னையில் சரித்திரம் காணாத ஒரு அமளியும்,
கொந்தளிப்புமான சூழ்நிலைக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது. பிரெஞ்சுப்
படையும், ஆங்கிலேயர் படையும் தங்களுடைய படை பலத்தை பரீட்சைப் பார்த்ததின்
விளைவாக சென்னை நகரம் முற்றுகைக்கும், கொள்ளைக்கும் இலக்காயிற்று, இதன்
நிமித்தம் பிப்ரேஷியஸ் சென்னைக்கு வெளியே உள்ள புலிக்கோட்டை என்ற இடத்தில்
அடைக்கலம் புக நேர்ந்தது. கொஞ்ச நாள் கழித்து ஹைதர் அலியும், அவரது
கொள்ளைப்படையும் சென்னை நகரத்தின் மீது படையெடுத்து வந்தபோது பிர்ரேஷியஸ்
ஜார்ஜ் கோட்டையில் அடைக்கலம் புகுந்தார்.இவ்வளவு கொந்தளிப்பான சூழ்நிலை
யையும் பொருட்படுத்தாமல், பிபரேஷியஸ் வேதாகமத்தை தமிழில் மொழி பெயர்க்கும்
பணியை தீவிரமாகசெய்யத் தொடங்கினார். தமிழ் வேதாகமத்திற்கு முன்னோடியாக
தமிழ் இலக்கணத்தையும், அகராதியை யும் வெளியிட்டார். ஏறக்குறைய 20 ஆண்டு
கடின உழைப்பிற்குப் பின் புதிய ஏற்பாடு முழுவதையும் மொழி பெயர்த்து, 1773
ம் ஆண்டு வெளியிட்டார். நான்கு ஆண்டுகள் சென்றபின் பழைய ஏற்பாட்டை
வெளியிட்டார். சீகன் பால்க், ஸ்கள்ட்ஸ் ஆகியோரின் மொழி பெயர்ப்பு அநேகரின்
கண்டனத்திற்குள்ளாயிற்று. அதற்கு மாறாக, பிப்ரேஷியஸின் மொழி பெயர்ப்பு,
வேதாகம மொழி பெயர்ப்புத் துறை யில் ஒரு போற்றத் தகுந்த சாதனை யாகக்
கருதப்பட்டது. அதற்கு காரணம் " அவர் தன்னுடைய முழங்காலில் நின்று மூல
பாஷையிலுள்ள பகுதியை வாசித்து, ஒவ்வொரு வார்த்தையையும் ஆராய்ந்து
சீர்தூக்கி பார்த்த பின்புதான் மொழி பெயர்ப்பார்;" இவருடைய மொழி பெயர்ப்பு,
இவருக்கு பின்னால் தோன்றிய எல்லா மொழி பெயர்ப்புக்கும் ஒரு ஆதாரமாக
விளங்கியது என்பதும் இவருடைய மொழி பெயர்ப்பை இன்றும் லுத்தரன் சபையினர்
தங்க வசனம் ( புழடனநn ஏநசளழைn ) என்ற பெயரில் உபயோகித்து வருகிறார்கள்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் 19ம் நூற்றாண்டின் தொடக்க
காலத்தில் வெளி நாடுகளில் உள்ள கிறிஸ்தவ ஊழியங்களின் வளர்ச்சியைக் குறித்து
அதிக ஆர்வமி ருந்தது. இதன் விளைவாக வேதாகம மொழி பெயர்ப்பு ஊழியம் அதிக
அவசியமாக இருந்தது, இதுவே ஆங்கில வெளிநாட்டு வேதாகமச் சங்கம் ஏற்பட
அடிகோலியது. 1806 ஆம் ஆண்டில் தமிழ் தேசத்தைச் சுற்றி பார்த்த டாக்டர்.
புச்சண்ணன் என்பவர் இத்தேசத்திலே வேதாகமத்திற்கு அதிக வேட்கை இருந்ததாகக்
குறிப்பிட்டார்.
தமிழ்தேசமக்களும் "நாங்கள் உண வையோ
பணத்தையோ உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை: எங்களுக்கு தேவனுடைய
வார்த்தையே தேவை" என்று அவரிடம் கூக்குரலிட்டனர்.
திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில்
உள்ள 10,000 பிராட்டஸ்டண்டு கிறிஸ்தவமக்களிடையே முழு வேதா கமத்தை
உடையவர்கள் ஒருவரும் இல்லை, நூற்றுக்கு ஒருவர் கூட ஒரு புதிய ஏற்பாட்டை
உடையவராக இல்லாதிருந்தார்கள்.
ரீனியஸ்:
இந்த சமயத்தில் திருச்சபை மிஷனெரி சங்கம்
சார்பாக ஊ.வு ரீனீயஸ் என்ற ஜெர்மன் தேச தேவ ஊழியாஇந்தியாவுக்கு வந்தார்.
இவர் வேதாகமச்சங்கத்தின் பொறுப்பிலுள்ள வேதாகம மொழி பெயர்ப்பு ஊழியத்தை
மேற்கொண்டார். 1840 ம் ஆண்டு தமிழ் வேதாகமத்தின் முழு முதல் பதிப்பு இந்திய
வேதாகமச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டது. இவ்வேதாகமம் பிப்ரேஷியஸ் என்பவர்
மொழி பெயர்த்த பழைய ஏற்பாட்டையும், ரீனியஸ் என்பவர் மொழிபெயர்த்த புதிய
ஏற்பாட்டையும் கொண்டிருந்தது. இவ்வாறு இணைத்ததற்குக் காரணம் பிப்ரேஷியஸ்
என்பவரும், ரீனியஸ் என்பவரும் தங்களுக்குரிய தனித் திற மையை தத்தம் மொழி
பெயர்ப்பில் வெளிப்படுத்தியிருந்தார்கள். மொழி பெயர்ப்பாளர்கள் என்ற
விதத்தில் இருவரும் சரிநிகர் சமமாக இருந்தார்கள். அவர்களுடைய தனிப்பட்ட
மொழிபெயர்ப்புகளை ஒன்று சேர்க்கும் முயற்சியானது அவரவர்களுடைய தனித்திறமை
விளங்கும் மொழி பெயர்ப்பின் பாகங்கனை ஒன்றாக இணைக்கும் நோக்கத்தோடு
எடுக்கப்பட்டது. பிப்ரேஷியஸின் பழைய ஏற்பாடு, மூல வேதாகமத்தோடு மிக அதிகமாக
ஒத்திருந்தது. அதைப்போலவே ரீனியஸின் புதிய ஏற்பாடும் அமைந்தது.
(இலங்கை) யாழ்ப்பாண திருப்புதல்:
(Jaffna Version)
இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் வட இலங்கைத்
தமிழரிடையே ஊழிய ஞ் செய்துவரும் தேவ ஊழியர்கள் அப்போதிருந்த வேதாகமப்
பதிப்புக்களிலிருந்த தவறுகளை நிவிர்த்திச் செய்வதற்காக வேறொரு தமிழ்
வேதாகமத்தை அச்சிட முடிவு செய்தார்கள். இதற்காக ஒரு குழு தற்காலத்திலும்
அதிகமாக உபயோகப்படுத்தப்படும் ஆங்கிலம் - தமிழ் அகராதியை எழுதினவரான
பீட்டர் பெர்ஸில் என்பவரைத் தலைவராகவும், நவீன கால உரைநடையின் தந்தை என்று
அழைக்கப்படும் இந்துமத வித்துவான் ஆறுமுக நாவலர் என்பவரை உறுப்பினராகவும்
கொண்டு அமைக்கப்பட்டது. பின்பு 1850 ஆம் ஆண்டு யாழ்ப்பாண திருப்புதல்
வெளியிடப்பட்டது. இந்த யாழ்ப்பாண திருப்புதல் பல வல்லுநர்களால்
வரவேற்கப்பட்ட போதி லும், இதனுடைய இலக்கிய நடை சாதாரண வேதாகம மொழிபெயர்ப்பு
நடைக்கு மாறுப்பட்டு இருந்ததினால் சாதாரண மனிதனின் ஆர்வத்தைத் தூண்டத்
தவறிவிட்டது.
ஐக்கிய திருப்புதல்: (Union Version)
யாழ்ப்பாண திருப்புதலின் தோல்விக்குப்
பிறகு மற்றொரு திருப்புதல் வெளியிடுவது தேவையாயிருந்தது, யாழ்ப்பாண
திருப்புதல் ஒரு தோல்வியாக இருந்தபோதிலும் அது தொடர்ந்து வந்த எல்லா
வேதாகமப் மொழி பெயர்ப்பு ஊழியங்களுக்கும், குழு (Committee)
அமைக்கும் வழக்கம் ஏற்பட அடிகோலியது. இதன் காரணமாக தென்னிந்தியாவில்
இயங்கும் பல மிஷன்களின் சார்பாக, டாக்டர் எச். போவார் என்பவரை தலைமை மொழி
பெயர்ப்பாளராகக் கொண்டு ஒரு மறு பரிசீலனைக் குழு (Revision Committee) ஏற்படுத்தப்பட்டது.
இவ்வ+ழியக் குழுவில் குறிப்பிடத் தக்கவரான டாக்டர் கால்டுவெல் உட்பட பல
வல்லுநர்கள் ஒருமித்து பங்கு கொண்டார்கள். வட இலங்கையில் வசித்த கிறிஸ்தவ
மக்களுக்கு அவர்களைக் கலந்து ஆலோசிக்காததால் " போவார் குழு" அமைப்பு
மகிழ்ச்சியைத் தரவில்லை. இதன் காரணமாக உடனடியாக இருதரப்பிலிருந்தும்
பிரதிநிதிகளை அழைத்து ஒரு மாநாடு கூட்டப்பட்டது. இந்த மாநாட்டிலே
தென்னிந்தியாவிலும், வட இலங்கையிலும் வசிக்கும் தமிழ் மக்கள் ஏற்றுக்
கொள்ளும்படியாக பொது பதிப்பு (Common Version) எனப்பட்ட ஐக்கிய திருப்புதல் (Union Version)கொண்டுவரப்பட்டு,
1971ம் ஆண்டு வெளியிடப்பட்டது. லுத்தரன் சபையைச் சார்ந்தவர்கள்
பிப்ரேஷியஸின் பதிப்பைத்தக்க வைத்துக் கொண்டாலும், இந்தியாவிலும்,
இலங்கையிலும் வசிக்கின்ற தமிழ் மக்களிடத்தில் இப்போதுள்ள எல்லா பிரபலமான
திருப்புதல்களிலும் இந்த ஐக்கிய திருப்புதல் தான் தமிழ் கிறிஸ்தவர்கள்
மத்தியில் பரவலான வரவேற்பையும், செல்வாக்கையும் பெற்றுள்ளது.
லார்சன் திருப்புதல்: (Larsen Version)
ஐக்கிய திருப்புதலின் வெளியீட்டிலிருந்து
இந்த நூற்றாண்டு வரை தமிழ்மொழி அடைந்த இலக்கிய வளர்ச்சி காரணமாக 1923ஆம்
ஆண்டு, பல்மொழி அறிஞரும், தமிழ் வல்லுநருமான டாக்டர் எல்.பி. லார்சன்
என்பவரைத் தலைவராகவும், வித்வான் ஜி. எஸ். துரைசாமி என்பவரைத் துணை
வராகவும் கொண்டு, மற்றொரு திருப்புதல் குழு அமைக்கப்பட்டது. லுத்தரன்
மக்கள் முதல் தடவையாக இக்குழுவுடன் இணைந்து செயல்பட்டார்கள். பிப்ரேஷியஸ்
திருப்புதல்- கடவுள் என்ற சொல்லுக்கு பரா பரன் என்ற பதத்தையும், ஜக்கிய
திரு ப்புதல் - தேவன் என்ற பதத்தையும் உபயோகித்திருந்தது. இதனால் கடவுள்
என்ற சொல்லுக்கு எந்த பதத்தை உபயோகப்படுத்துவது என்ற பிரச்சனை எழுந்தது.
நீண்ட ஆலோ சனைக்கு பின்பு, இரு தரப்பினரும் கட வுள் என் பொது பதத்தை
இறுதியாக ஒப்புக்கொண்டார்கள். அதன் பிறகு லார்சன் திருப்புதல் வேதாகமம்
1936 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.