இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, December 18, 2013

ஏமி கார்மிக்கேல் அம்மையார்

tamilArticle.com

கிறிஸ்துவுக்காய் அநேகர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து அவரை தங்கள் வாழ்வில் பிரதிபலித்த தேவ பிள்ளைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஏமி கார்மிக்கேல் அம்மையாரை பற்றி படிக்கப் போகிறோம்.
இவர் 1867ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதியில் அயர்லாந்து நாட்டில் பிறந்தார். இவருடைய தரிசனம் நம்முடைய இந்திய நாட்டை நோக்கியே இருந்தது. ஆகையால் 1912ம் ஆண்டு, ஓர் மாலை நேரம். தேவனோடு உறவாட சென்றவர், ஆம்...சூரியன் தன் கண்களை மூடிக் கொண்டிருந்த நேரம், ஏமி கார்மிக்கேல் அம்மையாரின் கண்கள் தெளிவாக திறந்துக் கொண்டிருந்தன. காதுகள் அத்தொனியைக் கூர்மையாக கேட்டுக் கொண்டிருந்தன.
“ஊழியத்திற்குப் புறப்பட்டுப் போ”. இதுவே அந்த சத்தம். உடனே இறைவன் பாதம் தன்னை ஒப்புக் கொடுத்தார். ஜப்பான் நாட்டை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தார். 15 மாதங்கள் ஊழியத்தை முடித்து இலங்கை சென்று பணியாற்றினார்.

அக்காலத்தில் இந்தியாவில் தேவதாசி முறைகள் பின்பற்றப்பட்டு, சமுதாயம் சீரழிந்துக் கொண்டிருந்தது. இம்மக்களை மீட்கவோ, ஆதரவுக் கொடுக்கவோ, யாரும் முன் வராத வேளை, ஏமி கார்மிக்கேல் அம்மையார் 1895ம் ஆண்டு இந்தியாவை நோக்கி, இச்சீரழிவைத் தடுக்க சீற்றத்துடன் புறப்பட்டார். சிறுமிகள் மற்றும் பெண்களைப் போன்று சிறுவர்களும் ஆலயங்களுக்குப் படைக்கப்பட்டு, நாடகக் கம்பெனிகளுக்கு விலைக்கு விற்கப்பட்டனர். இத்தகைய ஒழுக்கமற்ற வாழ்வை தடுக்க 1926ம் ஆண்டு “டோனாவூர் ஐக்கியத்தை” நிறுவினார்.

ஏமி கார்மிக்கேல் அம்மையார் அவர்கள் திக்கற்றவர்கள், விதவைகள், துன்பப்படுவோர், ஒழுக்கங்கெட்டவர்கள், ஆதரவற்றோர் போன்றவர்களுக்குப் புகலிடம் தந்து, அவர்களுக்குக் கிறிஸ்துவின் அன்பை செயல் வடிவத்தில் காட்டினார். இந்த அமைப்பை “நட்சத்திரக்கூட்டம்” என்றும் அழைத்தார். இன்றும் இந்த டோனாவூர் ஐக்கியம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வாழ்வளித்து வருகின்றது.
செம்புலிங்கம் என்ற மாபெரும் கொள்ளையனும் இவரால் மனந்திரும்பினான் என்பது குறிப்பிடத்தக்கது.

56 வருடங்களாக இந்தியாவின் நசுக்கப்பட்டவர்களுக்காகவே சேவை செய்த இவர், 38 நூல்களை எழுதியுள்ளார். அவைகளில் பல நூல்கள் தம் வாழ்நாளில் 20 ஆண்டுகள் எலும்பு முறிவினால் தாம் படுத்தப் படுக்கையாக pஇருக்கும் பொழுது எழுதியவையே. “ஏழைகள் என்னுடையவர்கள்” என்ற வாக்கின் படி வாழ்ந்த இவ்வம்மையார் 1951ம் வருடம் ஜனவரி மாதம் 18ம் தேதி பரலோக ராஜ்யத்தை அடைந்தார். அவர் தன்னுடைய வாழ்வில்
அன்புக் கூராமல் கொடுக்க முடியும். ஆனால் கொடுக்காமல் அன்புக் கூர முடியாது

என்ற வார்த்தையை உள்ளடக்கி தன்னுடைய சேவைகளை செய்து முடித்தார். இந்த உலகத்தில் நம்முடைய சேவை என்ன? ஆண்டவரே! ஏமி கார்மிக்கேல் அம்மையாரைப் போன்று சேவை செய்ய என்னை பயன்படுத்தும் ஐயா என்று ஜெபிப்போமா!. நாம் சிந்தித்து செயல்படுவோம். இன்று ஊழியம் என்றால் பிரசங்கம் செய்வது மட்டுமே என்று நினைக்கிறவர்கள் இவர்களிடத்தில் கற்றுக் கொள்ளட்டும். இயேசப்பா இந்த உலகத்திற்கு வரும்போது மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவே… உதாரணமாக ஒரு மனிதனை கூட தேடி சென்று அற்புதமான ஊழியம் செய்தார்.

அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். மத்-20:28
தேவன் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

 

No comments: