நீதிமான்களையல்ல பாவிகளையே அழைக்க வந்தேன்

நீதிமான்களையல்ல பாவிகளையே அழைக்க வந்தேன்


"ஆதவன்" டிசம்பர் -  2013  இதழில் பிரசுரமான கேள்வி பதில்


கிறிஸ்தவ புராதன சபைகளான   கத்தோலிக்கசபை, சி.எஸ்.ஐ  இவைகளை செத்த    சபைகளென்று   அற்பமாக பேசியும் எழுதியும் வரும் "ஆவிக்குரியவர்கள்" என்றுத் தங்களைக் கூறிக்கொள்வோரது செயல்களைப் பற்றி ஆதவன் கருத்து என்ன?
- வ . சூசை, தூத்துக்குடி - 2

ஆதவன் பதில் 

இது சம்பந்தமாக ஆதவனில் ஏற்கெனவே பலமுறை குறிப்புகள் வந்துள்ளன. எனினும் இதுபற்றித் தாங்கள் மேலும் அறிய விரும்புவதால் சிலக் கருத்துக்களைக் கூறலாம் என எண்ணுகிறேன். 

ஆவிக்குரிய வாழ்க்கையென்பது சபை ஆராதனை முறைகளை வைத்துக கணிக்கப்படும் ஒன்றல்ல. ஆவிக்குரிய சபைகளில் ஆவியில் நிறைந்துத் துளளிகுதிக்கும் விசுவாசிகளில் எதனை சதவிகிதம்பேர் மெய்யான ஆவிக்குரிய வாழ்வு வாழ்கின்றனர்? விறுவிறுப்பான சினிமா காட்சிகளைக் காணும் போது மெய்மறந்துத் துள்ளி ஆர்பரிப்பதுப்போல ஆர்பரிக்கும் பாஸ்டர்களும், விசுவாசிக்களும்தான் ஆவிக்குரியவர்கள் எனக் கருதும் தவறான ஒருக் கருத்து இன்றுப் பரப்பப்பட்டுள்ளது. இத்தகைய பரபரப்பான துள்ளல் பிற மதங்களிலும் உள்ளன.

தேவன் ஆராதனை முறைகளைப் பார்பவரல்ல. ஆராதிக்கும் மனிதனது உள்ளான் அவரது வாழ்க்கை முறையினையும் பார்ககிறார்.  எனவேதான் பவுலடிகள், " நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தேவனுடைய இரக்கங்களை   முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்கிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை" (ரோமர் - 12:1) என்று கூறுகிறார். 

மெய்யான கிறிஸ்தவன் யாரையும் குறைகூறித் திரியமாட்டான். ஏனெனில் இயேசு கிறிஸ்து, "நீங்கள் குற்றவாளிகள் என்று தீர்பிடாதபடிக்கு மற்றவர்களைக்  குற்றவாளிகள் என்று  தீர்க்காதிருங்கள். ஏனெனில்,   மற்றவர்களைத் தீர்க்கும் தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்" (மத்தேயு - 7:1, 2) என்று கூறியுள்ளார்.

மேலும் சில விளக்கங்கள் கூறலாம் என எண்ணுகிறேன் 

ஒரு நல்ல மருத்துவர் நோயாளியிடம் கருணையோடும் அன்போடும் இருந்து நோயாளி குணமடைய ஆவன செய்யவேண்டும். இதற்க்கு மாறாக அவர் நோ யாளியைப்பார்த்து, "ஐயோ, இவன் இதனை மோசமான  நோயைக்கொண்டிருக்கிறான்! இவனது உடலில் இத்தனை நோயா? இவன் உயிரோடு இருந்தும் செதவன்போலல்லவா இருக்கிறான்? என அரற்றிக்கொண்டிருந்தால் அவர் எத்தனை புதியீனனாக இருப்பார்?

இயேசு கிறிஸ்துக் கூறினார், "பிணியாளிக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவனுக்கு வேண்டியதில்லை"  (மத்தேயு - 9:12) எனவே மெய்யான ஆத்தும ஆதாய சிந்தையுள்ள ஊழியக்காரனது பணி ஆத்தும நோவு கண்டவருக்கு அதிலிருந்து விடுதலை பெற வழி காட்டுவது தானே தவிர, அவன் செத்தவன், இவன் செத்தவன் என்ப் பட்டியலிட்டு   எவரையும் ஒதுக்குவதல்ல. இத்தகைய ஊழியர்கள் பின் யாருக்குக் கிறிஸ்துவை அறிவிக்கப்போகிறர்களாம்? தங்களையே நீதிமான்கள் என எண்ணிக்கொள்ளும் இவர்களைப் பார்த்து இயேசு கிறிஸ்துச்  சொல்கிறார்:

"நீதிமான்களையல்ல, பாவிகளையே மனம்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்"  (மத்தேயு - 6:13)

மிகச் சமீபத்தில் இந்துக்கோவிலில் சாமியாடிக் கொண்டிருந்த ஒரு சகோதரன் தனது மனமாற்றம் பற்றிக் கூறக்கேட்டேன். எவருடைய வழிகாடுதலுமின்றி அற்புதமாக இயேசு கிறிஸ்துவால் தடுத்து ஆட்கொள்ளப்பட்ட் அந்தச் சகோதரன் தனது பழைய அவலட்சணமான பாவ வாழ்க்கை ஒரே நொடிப் பொழுதினில் இயேசு கிறிஸ்துவால் மறைந்து ஒழிந்ததாகக் கூறினார். பிறரைச் செத்தவர்கள் எனக் கூறும் ஊழியக்காரர்கள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?

"என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கே ளாதவர்களுக்கு வெளியரங்கமானேன்" (ரோமர் 10:20 மற்றும் ஏசாயா 65:1) என்ற தேவ வாக்கு கிறிஸ்தவர்களுக்கு அல்ல, தேவனை அறியாதவர்களுக்கே என்பதை இத்தகைய ஊழியர்கள் உணரவேண்டும்.

தங்களை "ஆவிக்குரியவர்கள் என்று பெருமைபேசி மற்றவர்களைச செத்தவர்கள் என அற்பமாக கருதும் மக்களுக்கு தேவன் மரங்களை ஒட்டவைப்பதை உவமையாகக்கொண்டு எச்சரிப்புக் கொடுக்கின்றார். கிறிஸ்துவோடு ஒட்டவைக்கப்பட வேண்டுமே தவிர அதுகுறித்துப் பெருமை பாராட்டாமல் இருக்க இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது:

"...........நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச்  சிந்தை யாயிராமல் பயந்திரு. சுபாவக் கிளைகளைத் தேவன் தப்பவிடாதிருக்க உன்னையும் தப்ப விடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு. ஆகையால் தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார். விழுந்தவர்களிடத்தில் கண்டிப்பையும் உன்னிடத்தில் தயவையும் காண்பித்தார். அந்தத் தயவிலே நிலைதிருப்பயானால் உனக்குத் தயவு கிடைக்கும், நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்" (ரோமர் 11:20,21)

பிறரை அற்பமாக செத்தவன் என்று கூறுபவர்களே , தேவன் மேலும் கூறுகிறார், "அன்றியும் அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதறகு தேவன் வல்லவராயிருக்கிறாரே" (ரோமர் 11:23)

ஆம்! செத்தவனை உயிரூட்டவும்   உயிருள்ளவன் என மேன்மை பாராட்டுபவனை வெட்டி அழிக்கவும் தேவன் வல்லவர் 
 



 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்